Monday, August 22, 2011

எ.பி.க : 13

னக்கு  அடிக்கடி ஒரு விசயம் மனதில் தோன்றுகிறது. காதல் கவிதைகள் மட்டும் ஏன் நம் மனதை நெருடி. இளக வைக்கிறது? மற்றவை எல்லாம் அந்த அளவிற்கு இல்லை என்ற கூற்று உண்மையா? இருப்பினும் இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். கவிதை உங்கள் மனதை தொடுகிறதா? இல்லையா? என்று தெரிந்து விடும். 
 
                      * காதல் தோல்வி *



என் இளைஞனே.....
எண்ணத்தில் எவளைப் பதித்து
கன்னத்தில் தாடி வளர்த்தாய்?

தாடிக்குள் இருக்கிறது ஆயிரம் சங்கதி! அது
...காதல் தோல்வியெனில் கேவலம்
உன் கதி!

காதலிக்கும் முன் கற்றுக்கொள்!
கண்ணீர் விடுவோமென்று!

நேசிக்கும் முன் கற்றுக்கொள்!
மறந்து விடுவாளென்று!

வெற்றிக்கு முன் கற்றுக்கொள்!
தோல்வி வருமென்று!

லட்சியத்திற்கு தாடி வை!
லட்சணத்திற்கு தாடி வை!
ஏன்?
நாடித் தேமலை மூடி மறைக்கக் கூட
தாடி வைத்துக் கொள் தப்பில்லை!

காதலில் தோல்வி
என்று மட்டும் தாடி வளர்க்காதே!

நீ தத்துவம் பேசி
ஞானியாக வேண்டாம்
போதனை செய்து
புத்தனாக வேண்டாம்!

நாட்டுக்காக உயிர் கொடுத்து
தியாகியாகக் கூட வேண்டாம்!

உன் உள்ளத்தில் சம்மணமிட்டிருக்கும்
காதல் தோல்வியை மட்டும் விரட்டு!

நீ காதலித்தவள் என்ன
இவ்வுலகின் கடைசிப் பெண்ணா?

காதல் என்பது அன்பைக் குறிக்கும்
பொதுச் சொல்!
அது எப்படி தோல்வியாகும்
பதில் சொல்!

நீ வளர்க்கும் தாடி
உன் இன்பத்தின் விரோதி!

அட பைத்தியக்காரனே....
இன்னும் நீ அந்தத் தாடியில்
ஆசை வைத்திருந்தால் தேவையில்லாத
உன் மீசையை மட்டும் எடுத்து விடு!

நன்றி - சாம்ராஜ் மகேந்திரன்

#####################################################

துவும் காதல் தோல்வி சம்பந்தப் பட்டதுதான் . ஆனால் முந்தைய கவிதையை விட வேறுபட்டது.
                * நான் உன்னை நேசிப்பதால்.....*


உனக்காக மட்டும் சிரிக்கத் துடிக்கும் என் இதழ்கள்..
உன்னை மட்டும் பார்க்கத் துடிக்கும் என் கண்கள்...

உன் குரல் கேட்க மட்டுமே துடிக்கும் என் செவிகள்...
உன் அழைப்பிற்காக மட்டுமே காத்திருக்கும் என் கைபேசி ...

உனக்காக என்னை நான் மாற்றியவை...
உனக்காக நான் இழந்த வாழ்க்கை...

இதில் எதுமே உனக்கு மட்டும் தெரியாமல் போனதா...
நேசிப்பது நான் மட்டுமே என்று எனக்கு தெரியாமல் போனது...

நீ நேசிப்பதோ வேறொரு நெஞ்சம் என்ற போது ....
நேசிக்கிறேன் உன்னை மட்டும் அல்ல...
உன் காதலையும் நீ நேசிக்கும் இதயத்தையும்...

நன்றி - சிம்சன்

*************************************************

13 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெற்றிக்கு முன் கற்றுக்கொள்!
தோல்வி வருமென்று

Nice..

இராஜராஜேஸ்வரி said...

நீ நேசிப்பதோ வேறொரு நெஞ்சம் என்ற போது ....
நேசிக்கிறேன் உன்னை மட்டும் அல்ல...
உன் காதலையும் நீ நேசிக்கும் இதயத்தையும்...//

ஆழ்ந்த அருமையான கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.

Rizi said...

கவிதை அழகு

நிரூபன் said...

தோல்வி இல்லாது வழ்க்கையில் வெற்றீ இல்லை என்பதை அருமையாக விளக்கியிருக்கிறீன்.

Yaathoramani.blogspot.com said...

காதல் நோயுற்றவனுக்கு
மிகச் சரியான மருந்தான
கவிதையைத் தந்துள்ளீர்கள்
உணர்வு வழியில் அன்றி
அறிவு வழியில் எழுதப்பட்டுள்ள
கவிதைகள் இரண்டும் அருமை
மிகச் சிறந்த கவிதைகளை எடுத்து
பதிவிட்டுத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

இரு வேறு வித்தியாசமான கவிதைகள்

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

இரண்டு கவிதைகளும் சிறப்பாக இருந்தது.

Anonymous said...

''...நீ காதலித்தவள் என்ன
இவ்வுலகின் கடைசிப் பெண்ணா..''
அது தானே!...
''....நேசிக்கிறேன் உன்னை மட்டும் அல்ல...
உன் காதலையும் நீ நேசிக்கும் இதயத்தையும்...''
இந்த மனநிலை வந்தால் உலகில் எத்தனை தொல்லைகளைத் தடுக்கலாம். மிக நல்ல சிந்தனையில் வந்த கவிதை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

N.H. Narasimma Prasad said...

அருமையான கவிதைகள். தொகுப்புக்கு நன்றி.

கோகுல் said...

அழகிய கவிதைகள்.!

மகேந்திரன் said...

அழகு அழகு
கவிதை அழகு

RAMA RAVI (RAMVI) said...

//காதலிக்கும் முன் கற்றுக்கொள்!
கண்ணீர் விடுவோமென்று!

நேசிக்கும் முன் கற்றுக்கொள்!
மறந்து விடுவாளென்று!

வெற்றிக்கு முன் கற்றுக்கொள்!
தோல்வி வருமென்று!//


//நாட்டுக்காக உயிர் கொடுத்து
தியாகியாகக் கூட வேண்டாம்!

உன் உள்ளத்தில் சம்மணமிட்டிருக்கும்
காதல் தோல்வியை மட்டும் விரட்டு!//

இந்த வரிகள் அருமை.
காதல் தோல்வி என்று துவண்டு போகாமல் அடுத்த வேலையை பார் என போதிக்கும் விதமாக வித்யாசமான கவிதை.
நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி குணா.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...