Monday, August 08, 2011

எ.பி.க 11 - மேலை நாட்டுக் கானல் நீர்


வெளி நாட்டின் கலப்பு தமிழ் மண்ணில் கலந்ததை நினைத்து எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை.
                                               
                   * மேலை நாட்டுக் கானல் நீர் *



எள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ;
காட்சி ஊடக கடல்களில்
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!

மொழியில் மட்டுமா கலப்பு - இன்று
அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ;
உணவில் கலப்பு -
நோயின் பிறப்பு ;
பண்பாட்டில் கலப்பு - சமூக
சீரழிவின் தொகுப்பு ; - இவையே
இன்றைய தீரா அருவருப்பு...!

பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை
வருமானம் தரும் மொழிகளாம் ;
வருமானம் தரும் - ஆனால்
அவை தன்மானம் தருமா...?
அதைப் பற்றி - இங்கு
யாருக்கு கவலை...!?

வருமானம் தரும்
மொழி... -  அது
ஒரு புறம் இருக்கட்டும் ;

ஆயினும் - இந்த
நாறிய மேலை நாட்டு -
நாகரிகம் என்ன தரும்...?! 
 

நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து !

கவின்மிகு - நம்
பண்பாட்டுச் சோலை ;
ஏன்...? - இந்த
மேலைக் கானல் நீர் -
பாய்ச்சும் வேலை...!

நன்றி - நா. இதயா ஏனாதி

8 comments:

vidhya said...

so nice

இராஜராஜேஸ்வரி said...

ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!/

ஆதங்கம்.......!!

கவி அழகன் said...

காலத்தின் கோலம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

Unknown said...

நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து !
////
உண்மை உண்மை உண்மை

RAMA RAVI (RAMVI) said...

//நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து ! //

உண்மை. மிக அழகாக சொல்லிருக்கீங்க.

vidivelli said...

நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட
அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து ! /

பண்பாடையே மறந்திட்டாங்க....
எல்லாம் தலைகீழாத்தான் நடக்கிறது..


சகோ /அதுசரி இந்தியாவிலும் பல தமிழர்களுக்கு சரியான தமிழ் தெரியாமல் இருப்பதாக அறிந்தேன்...இடையிடையே ஆங்கிலச்சொற்களை பாவித்து அதற்கான தமிழ்தெரியாமல் இருப்பதாக அறிந்தேன்.உவ்விடம் இருப்பவர்கள் சொன்னார்கள்...தாயகதழிழர்கள் கதைத்துக்கொண்டிருக்கும்போது என்ன மொழியில் கதைத்தீங்க என்று கேட்ட ஒரு ஜோக் ஒன்றும் இருக்கு..இப்பிடி பலகதை அறிந்தேன்.அப்படித்தானா சகோ..

எங்கள் மொழி இறந்துகொண்டிருப்பது தொடர்பான கவிதை அருமை...
பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...

மகேந்திரன் said...

அருமையான கவிதை
போற்றத்தகுந்த வரிகள்.
மொழியின் கலப்பே அத அழிவுக்கு
காரணம் எனக்கூறும் வரிகள்
நிதர்சனம்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...