* தெரிஞ்சுக்கோங்க - 108 *
108 என்ற நம்பர் நம் மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான நம்பர். எங்கு விபத்து நேர்ந்தாலும், ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் உடனடியாக இந்த நம்பருக்கு டயல் செய்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து விடும். அது நகரமாக இருந்தாலும் சரி. கிராமமாக இருந்தாலும் சரி.
நமக்கெல்லாம் இப்படி ஒரு வசதி கிடைத்தது பாராட்டத்தக்க விசயம்தான். அப்படிப்பட்ட 108 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுனர்கள் + பணியாளர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.
என்ன உங்களின் பிரச்சனை..? என்று நக்கீரன் நிருபர்கள் அவர்களைப் பேட்டியெடுக்கச் சென்ற போது கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இவைதான்..
நமக்கெல்லாம் இப்படி ஒரு வசதி கிடைத்தது பாராட்டத்தக்க விசயம்தான். அப்படிப்பட்ட 108 என்ற எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுனர்கள் + பணியாளர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.
என்ன உங்களின் பிரச்சனை..? என்று நக்கீரன் நிருபர்கள் அவர்களைப் பேட்டியெடுக்கச் சென்ற போது கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இவைதான்..
ஒன்னா... இரண்டா சார்....., தினம் தினம் பிரச்சனை தான் கொஞ்சம் கேளுங்க சார் என்றார்கள்.
2008-ல் இந்த திட்டம் துவங்கப்பட்டபோது எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஐந்தாயிரம், மற்றும் வருடத்திற்கு ஒருமுறை இருபது பர்சென்ட் இன்கிரிமெண்ட் தருவதாக சொன்னாங்க சார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ நிறுவனம் தான் எங்களை வேலைக்கு சேர்த்தது. ஒரே ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், அந்திராவில் உள்ள ஜி.வி.கே என்ற நிறுவனம் இப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசிடமிருந்து வாங்கும் பணத்தில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது.
காலை எட்டு மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் நங்கள் டியூட்டி மாத்திக்கணும், எங்க வீட்டுல இருந்து வண்டி நிக்கற எடத்துக்கு போக நாங்க ஒரு மணிநேரம் முன்னாலையே கிளம்பவேண்டும், அப்ப எங்களுக்கு காலை மதியம் என இரண்டு வேலைச் சாப்பாடும் கடையில் தான் சாப்பிட வேண்டும்.
இரவு பணிக்கு போகிறவர்களுக்கும் இதே போல இரண்டு வேலை கடை சாப்பாடு கடையில்தான். அனால், எங்களுக்கு சம்பளம் ஆறாயிரம் ரூபாயும், மருத்துவ உதவியாளர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும் கொடுக்கிறார்கள். இதில எப்படி சார் இரண்டு வேலை கடையில சாப்பிடமுடியும்.
உலகத்துல எல்லா நாட்டிலேயும் எட்டு மணி நேரம்தான் வேலை. ஆனால், எங்களுக்கு மட்டும் 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். அந்த நான்கு மணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தால் பரவாயில்லை. அதுவும் தருவதில்லை.
மற்ற எல்லா இடங்களிலும், வேலை ஆட்களுக்கு, அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், பண்டிகை போன்ற விசேச நாட்களில் வேலை செய்யும் போது இரு மடங்கு சம்பளம் கொடுகிறார்கள். எங்களுக்கு அப்படி எந்த சலுகையும் கொடுப்பது இல்லை.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்த இடமில்லை, எங்களுக்கு உட்கார இடமில்லை; தண்ணி குடிக்க இடமில்லை, வெய்யில் அடித்தாலும், மழை பெய்தாலும் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டியது தான்.
அதிலும் எங்களுடன் பணியாற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம். போலிஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபிஸ் இப்படி பல எடத்துல நாங்க வண்டிய நிப்பாட்டிட்டு உக்காந்திருக்கிறோம்.
சாலை விபத்து ஏற்பட்டால், நாங்க அடிபட்டவர்களை எடுத்து போகும் போது வண்டிக்குள்ள இரத்தம் பட்டுட்டா அதை கழுவிவிட தண்ணி எங்களுக்கு கிடைப்பதில்லை.
கொண்டலம்பட்டி காவல் நிலையத்திலும், அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் தண்ணீர் வசதியில்லை. அங்கு வேலை செய்யும் போலிஸ் காரர்களே தண்ணியில்லாமல் இருக்கும் போது எங்களுக்கு வண்டி கழுவ தண்ணீருக்கு எங்கே போவது.
மல்லூர் காவல் நிலையத்தில் இருந்த வண்டியை ஒருமுறை போலிஸ் இன்ஸ்பெக்டர் அவசரத்துக்கு கூப்பிட்டிருக்கிறார், அந்த நேரம் வண்டி சேலம் போய்விட்டது.
எங்களுக்கு உதவாத வண்டியை இங்க நிப்பாட்ட வேண்டாமுன்னு சொல்லி துரத்திவிட்டார்கள். இப்போது கெசல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுத்தியுள்ளோம்.
இது எல்லாத்தையும் விட சமயத்தில் பொது மக்கள் வேறு விதமாக பிரச்சனை செய்கிறார்கள். தண்ணியை போட்டுவிட்டு கிடப்பவர்களை பார்த்துவிட்டு 108க்கு தகவல் சொல்லிட்டு போயிடறாங்க.
நாங்க போய் குடிகாரன தூக்கிக்கிட்டு போய் மருத்துவமனையில் போட்டால் அங்க இருக்கறவங்க எங்களை திட்டுறாங்க..
சில இடங்களில் போதையில வாந்தி எடுத்திருப்பர்கள், இன்னும் மோசமா, சில இடத்துல படுத்தபடியே “மோசன்” போய் கிடக்குற கேசையெல்லாம் பார்த்துட்டு, எங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.
ராத்திரி இரண்டு மணிக்கு போன் பண்ணி எம் புருசனுக்கு மாரடைப்புன்னு சொல்லறாங்க..... சரியா அட்ரசும் சொல்லமாட்டாங்க... தெருவில் வந்து நிக்க சொன்ன அதையும் செய்யமாட்டாங்க, தட்டு தடுமாறி நாங்க அவங்க வீட்ட கண்டுபிடுச்சு அங்க போனா, வீடு மூணாவது மாடியில இருக்கும். எங்களை வந்து தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லுவாங்க...
கிராமத்துல பரவயில்லை யாரவது துணைக்கு வருவாங்க... ஆனா நகரத்துல யாரும் உதவிக்கு வருவதில்லை. சில இடங்களில், தண்ணிய போட்டுட்டு அடிதடி போட்டுக்கிறாங்க... 108 அம்புலன்சுல போனாத்தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னுவங்கன்னுட்டு எங்களுக்கு போன் போட்டு அய்யோ அய்யோன்னு... கத்துவாங்க கடைசியில நேருல போய் பார்த்தால் ஒரு சின்ன காயம் கூட இருக்காது. ஆனா நெஞ்சு வலிக்குது... உயிரே போகுதுன்னு கத்துவாங்க வேற வழியில்லாம நாங்க தூக்கிகிட்டு போகணும்.
முன்ன கொடுத்திருந்த வண்டிகள் டெம்போ டிராவலர் வேன்கள் கொஞ்சம் சிறிதாகவும் இருந்தது, புது வண்டியாக இருந்ததால் வேகமாகவும் போக முடியும். ஆனால் இப்போது முன்பு ஹெல்ப் லைன் 1056-க்கு ஓடிக்கொண்டிருந்த பழைய சுவராஜ் மஸ்தா வண்டியை பெயிண்ட் அடித்து கொடுத்து விட்டார்கள். இது பெரிதாக இருப்பதால் வண்டியை திருப்புவது சிரமம், சின்ன தெருவுக்குள், சந்துக்குள் எல்லாம் போக முடியாது.
ஆனால், பல இடங்களில் பொதுமக்கள், ஏன்டா போகமுடியாதுன்னு சொல்ரீங்கன்னு எங்களை அடிக்க வருவாங்க... பல இடங்களில் அடியும் வாங்கியிருக்கிறோம்.
பழைய சுவராஜ் மஸ்தா வண்டிக்கு ஏழு முதல் எட்டு கிலோ மீட்டர் தூரம் தான் ஓட்ட முடியும், அனால் ஒன்பது கிலோமீட்டருக்கு மேல் ஓட்டனும், மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர வேகத்துக்கு மேலே போகக்கூடாது, 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டவேண்டிய டயர்களை 80, ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டவேண்டும் என்று சொல்கிரார்கள் எங்கள் உயர் அதிகாரிகள்.
அவசரத்துக்கு ஓட்டும் ஆம்புலன்சுக்கு மைலேஜ் கேட்ட எப்படி சார் கொடுக்க முடியும். ஏதாவது எதிர்த்து கேட்டால் எங்களை மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கிறாங்க... இந்த சம்பளத்துக்கு எப்படி போய் வெளியூரில வேலை செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் 108,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.
களப்பணிக்கு வராமல், உட்கார்ந்த இடத்திலேயே, இவர்களுக்கு மேலே வேலை செய்யும், பிளிட், டி.எம், ஆர்.எம் போன்ற அதிகாரிகள் சாதரணமாக அறுபது ஆயிரம் என்பது ஆயிரம் என்று சம்பளம் வாங்குகிறார்கள்.
எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், தொழிலாளர் சேமநிதி பணம் எங்களுடைய கணக்கில் கட்டப்படுகிறதா..? என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை, பணி நீக்கம் செய்யப்படும் உளியர்களுக்கு உத்தரவுகூட போன் மூலமே சொல்லப்படுகிறது. இழுத்து மூலமாக கொடுப்பதில்லை.
பல இடங்களில் நாங்கள் அடிவாங்கியுள்ளோம் அப்போதுகூட எங்களின் நிர்வாகம் எங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது. போலீசில் புகார் கொடுக்க வழியில்லை.
செல் போன் மூலம் இயங்கும் நாங்கள் தேவையில்லாத போது போன் இணைப்பை போல துண்டிக்கப்படுகிறோம். பொது மக்களின் உயிரை காக்கும் ஒரு உன்னதமான பணியை செய்கிறோம் என்ற சமூக அர்ப்பணிப்பில் பல சிக்கல்களை சமாளித்துக்கொண்டு பணியாற்றும் எங்களுக்கு மூன்று வேலையும் சாப்பிட தகுந்த அளவு ஊதியமாவது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.
இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்குமா அரசு....?
விலைமதிப்பில்லா மனித உயிரைக் காப்பதில் இவர்களின் பங்கும் முக்கியமானது. இவர்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இவர்களின் மனித நேயமிக்க சேவையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
*******************************************************
3 comments:
விலைமதிப்பில்லா மனித உயிரைக் காப்பதில் இவர்களின் பங்கும் முக்கியமானது. இவர்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இவர்களின் மனித நேயமிக்க சேவையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும் நண்பரே .
அவர்களது பிரச்சனையும் கவனிக்க தான் வேண்டும் நண்பரே .
விலை மதிப்பில்லா உயிரை காப்பதில் டாக்டரின் பங்கு முக்கியம் என்றாலும் ,உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்க்கும் இவர்களும் முக்கியமே நண்பரே .
Golden hrs -என உயிர்காப்பதில் இவர்கள் பங்கிருப்பதை மறுக்கமுடியாது.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...