Wednesday, February 01, 2012

மற்றவை - அரசியலில் புதிதாக கிளம்பிய புயல்

நேற்றைய சட்டசபையில் அ.தி.மு.க விற்கும், தே.மு.தி.க விற்கும் நடந்த விவாதங்கள், அதனைத் தொடர்ந்த தே.மு.தி.க வின் வெளிநடப்பு செயல்கள் அனைத்தும் நிறைய விசயங்களை தமிழக அரசியல் வட்டாரத்திற்கு உணர்த்தி விட்டது. அதற்கு முன் சில முன்னோட்ட விசயங்களைப் பார்ப்போம்.

தே.மு.தி.க , அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது முதல் விஜயகாந்த் ஒரு போதும் அம்மாவின் பெயரை தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை.


அம்மாவும் அப்படியே.  "எம்.ஜி.ஆர் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். அதுவும் தி.மு.கவை ஜெயிக்க வைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்", என்றெல்லாம் விஜயகாந்த் சொல்லி வந்தார். மேலும் எந்த ஒரு பிரசார மேடையிலும் இருவரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்யவில்லை.  பா.ம.க., ம.தி.மு.க வைப் போல தன் கட்சியையும் அம்மா கிள்ளுக்கீரையாக நினைத்து விடக்கூடாது. அதனால் தன் கட்சியின் அந்தஸ்து பாதித்து எதிர்கால அரசியலுக்கு ஆப்பு வைத்தது போலாகி விடும் என்றெல்லாம் விஜயகாந்த் தரப்பில் ஒரு கருத்து இருந்தது. அதை நினைத்துதான் விஜயகாந்த் ஆரம்பித்திலிருந்தே தன் கட்சியின் செல்வாக்கை தளர்த்தாமல் பார்த்துக் கொண்டார். தன்னுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகளெல்லாம் தன் கீழ் வந்து, தனது பேச்சைத்தான் கேட்டாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தே.மு.தி.க விலகி இருந்த காரணத்தால் , நேற்றைய சட்டசபையில் அதற்கான விளைவுகள் விவாதமாகி வெட்டவெளிச்சமாகிவிட்டது. அ.தி.மு.க பெரும்பான்மையோடு ஜெயித்தபோது ,  அம்மாவும், விஜயகாந்தும் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஆளுங்கட்சி செய்யும் ஒவ்வோர் விசயங்களுக்கும் , அதனை கவனித்து சட்டசபையில் விவாதிப்பதுதான் எதிர்கட்சியின் பணி. அந்த வகையில் முதன்முதலில் எதிர்கட்சி அங்கிகாரம் பெற்ற தே.மு.தி.கவின் செயல் ஏமாற்றத்தைதான் அளித்தது. இத்தனை நாள் எங்கு போய் விட்டீர்கள் என்ற வகையில்தான் தே.மு.தி.க இருந்தது.




ஆனால் நேற்றைய சட்டசபை விவாதம்,(எங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.கவிற்கு இவ்வளவு வெற்றிகளும், எதிர்கட்சி அந்தஸ்த்தும் கிடைத்தது என்று அ.தி.மு.க தரப்பு சொல்ல, அம்மா சவாலே விட்டு விட்டார். அதற்கேற்ற பதிலை விஜயகாந்த் நயமாக சட்ட சபையில் எடுத்துரைத்தார். விஜய்காந்த்தின் பேச்சு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அம்மா அவர்களின் அகந்தை இன்னும் மாறவில்லையே? என்ற கேள்வியும் எழுந்தது.)  ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் உள்ள பல நாள் பகையை உணர்த்தி விட்டது. இனி மேல் என்ன நடக்கும் என்பதை யூகித்து சொல்கிறேன். இது எனது மனதில் தோன்றிய எண்ணங்கள்தான்.

தே.மு.தி.க கட்சியினர் நிறைய பேர் , இனி அ.தி.மு.க விற்க்கு தாவலாம்.

தி.மு.க கட்சியினர் மீதான நில அபகரிப்பு கைது போன்ற நிகழ்வுகள், இனி தே.மு.தி.க வினருக்கும் நடக்கலாம். அதனையெல்லாம் தே.மு.தி.க கட்சியினர் கண்டு பயப்படாமல் இருப்பார்களா என்பது கொஞ்சம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க விற்கு கட்சிதாவல்களை அவர்கள் மேற்கொள்ளலாம்.

இனி, ஆழுங்கட்சியின் ஒவ்வோர் நடவடிக்கையையும் , எதிர்கட்சி கண்காணித்து விவாதத்தை ஆரம்பிக்கலாம். நிறைய அறிக்கைகள் இனி தே.மு.தி.க தரப்பில்
பத்திரிக்கைகளில் வெளிவரலாம். தன் பணியை விஜயகாந்த் சரியாக செய்தால் நிச்சயம் இனி அவரது கட்சிக்கு செல்வாக்கு பெருக ஆரம்பிக்கும்.

அம்மாவின் அதகளத்தைக் கண்டு அ.தி.மு.க வினரே ஆடிப் போகின்றனர். எத்தனை முறை பதவி பறிப்பு, பதவி ஏற்பு நடந்து விட்டது. அப்படிப்பட்ட மலை போல இருக்கும் ஆளுங்கட்சியின் தலைமையை, எதிர்கட்சி எப்படி சமாளிக்கும் என்பதை இனி மேல் நாம் பார்க்கலாம்.

 இன்றைய தினமலரில் எதற்கு கொடுத்தோம் இலஞ்சம் என்ற பகுதியில் ஒரு கட்டுரை வந்துள்ளது. இது போல் மக்கள் அனைவரும் இலஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்பட்ட விவரங்களை கட்டுரையாக அனுப்பினால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். மறக்காமல் அந்தப் பகுதியைப் படித்துப் பாருங்கள்.



***********************************************************

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் ! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

RAMA RAVI (RAMVI) said...

நல்ல அலசல்.என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

N.H. Narasimma Prasad said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா...

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...