Wednesday, February 15, 2012

தெரிஞ்சுக்கோங்க - பிளாக் விருது பெற்ற பதிவர்கள்

ப்போதெல்லாம் பதிவுலகத்தில் பதிவு எழுதுபவர்கள் நிறைய பேர் ஏதோ ஒரு காரணத்தால் அடிக்கடி பதிவு எழுதுவதில்லை என்று கரிசனப்பட்டு, "டல்லடிக்கும் பதிவுலகம்" என்ற தலைப்பில் இந்திரா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனை ஆதரித்து தோழி ரமாரவி தனது பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். நானும் அவர்கள் சொல்வது போல, சில நாட்கள் பதிவு எழுதுவதில்லை.என்ன செய்வது மென்பொருள் துறையில் இருப்பதால் சில சமயங்கள் இப்படி நேர்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.
னது பதிவுலக பெங்களூர் தோழியான, ரமாரவி அவர்கள் எனது "இக்கரையும் அக்கரையும்" வலைப்பூவிற்கு ஜெர்மனிய விருதான "லிப்ஸ்டர் பிளாக்" விருது கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.  ஈகோயிஷம் நிறைந்த இந்த உலகத்தில், இது போன்ற ஊக்குவிப்பு விசயங்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த ஊக்குவிப்பு விசயங்கள் தான் எழுதுபவர்களை இன்னும் நிறைய நல்ல நல்ல பதிவுகளை எழுத தூண்டும். தோழிக்கு மிக்க நன்றி.மேலும் நான், இந்த "லிப்ஸ்டர் பிளாக்" விருதை  மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க சொல்லியிருக்கிறார். அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இந்த விருதுடன் "இன்ட்ரெஸ்டிங்க் ப்ளாக் அவார்ட்" என்ற ஒரு விருதை அளிக்கிறேன்.1. "காற்றைவிட வேகமானது எண்ணம்." என்ற ஷார்ப்பான மேற்கோள் கொண்டு "மதுரகவி" என்ற வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதி வருகிறார் தோழி ரமாரவி . தனது பதிவுகளை சில வகைகளாக பிரித்து இவர் எழுதி வருகிறார். தெளிவான கருத்தோடு, ரசிக்கும்படியான எழுத்துக்களை வார்த்தைகளாக்கி படிப்பவர்களுக்கு தான் சொல்ல வந்ததை அழகான படங்களுடன், நயமாகவும் இவர் தனது கட்டுரைகளை எழுதுகிறார். இவர் எழுதும்  "கட்டுரைகள்" தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

2. "வாசிப்பது என்பது சுவாசிப்பது, வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற தனது மன எண்ணத்தை மேற்கோளாக்கி "மணிராஜ்" என்ற வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார் இராஜராஜேஷ்வரி. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான் இவரின் வலைப்பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் விசயங்கள், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு  நிச்சயம் வீட்டில் பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளும் அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் இவர் பதிவில் வரும் ஒவ்வொரு கடவுளின் படங்களும் கொள்ளை அழகு. வித விதமான உருவங்களில் அத்துணை இந்து மத கடவுள்களின் படங்களூம் இவரின் வலைப்பூவில் இருக்கும்.  ஆன்மீக சம்பந்தமான வலைப்பூவில் என்னை மிகவும் கவர்ந்ததில் இதுவும் ஒன்று.

3. "வந்தேமாதரம்"  என்ற தலைப்பில் உள்ள சசிகுமார் என்பவரின் வலைப்பூவில், கம்ப்யூட்டர் பாதுகாப்பு, வித விதமான பயனுள்ள புதிய ஃசாப்ட்வேர்கள், மொபைல் ஃபோனுக்கு பயன்படும் பயனுள்ள அப்ளிகேஷன்கள் போன்ற விசயங்கள்தான் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு புதிய ஃசாப்ட்வேர் உங்களுக்கு தேவைப்பட்டால் இவரது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். நிச்சயம் ஃபிரியாக கிடைக்கும்(எளிமையான தமிழ் விளக்கங்களோடு).

4. மூத்தவரானா திரு.ரமணி அவர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வரா" என்ற தலைப்பில் தனது  வலைப்பூவில் எழுதி வருகிறார். இவருடைய வாழ்வியல் அனுபவக் கட்டுரைகள் ஒரு திரைப்படம் போல் படிப்பவர்களின் கண்முன் காட்சியளிக்கிறது. சமீபத்தில் கூட இவர் எழுதிய "உறவுகள்' என்ற கட்டுரை, மனதை நெகிழ வைத்து விட்டது. நிறைய யோசிக்கவும் வைத்தது. அவருக்கு இந்த விருதை பகிர்வதன் மூலம் எனது பாராட்டுக்களை சமர்பிக்கிறேன்.

5. "தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்." என்ற வாக்கியத்தை கொண்டு நமக்கு தன்னம்பிக்கையையும் தரும் விசயங்களை ஒவ்வொரு பதிவிலும் அலசும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. நகைச்சுவை உணர்வு கலந்த வரிகளைக் கொண்டுதான் இவர் தன் பதிவை எழுதுவார். அதுதான் அவரது சிறப்பு கூட. பாராட்டுக்கள் நண்பரே!

****************************************************************

8 comments:

RAMVI said...

அஹா.. இன்னுமொரு விருதா?? மிக்க நன்றி குணா "இன்ட்ரெஸ்டிங்க் ப்ளாக் அவார்ட்" க்கு.

இராஜராஜேஸ்வரி said...

மகிழ்ச்சியளிக்கும் இன்னொரு விருது..

மனம் நிறைந்த நன்றிகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

குணா சார், முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு எழுதுகிறேன் ! தொழில் - பிசினஸ் என்பதால் தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடிவதில்லை. இருந்தாலும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் எழுதி வைத்து விடுவேன் ! இதில் இப்போதைய பெரிய சிரமம் - பவர் கட் ! உங்களின் விருது என்னை மேலும் எழுத வேண்டும் என்கிற உற்சாகத்தை ஏற்படுத்துகிறது ! வாழ்த்துக்கள் ! மிக்க மிக்க நன்றி சார் !

சந்திர வம்சம் said...

எனக்கும் எனது "தாமரை மதுரை" தளத்திற்கு "மணிராஜ்" அவர்கள் "லிப்ஸ்டர் பிளாக்" விருதினை அளித்துள்ளார்கள். நேரம் அமையும் போது பார்த்து கருத்தினை எழுதவும். நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

Ramani said...

தங்கள் விருதும் பாராட்டும் எனக்கு
கூடுதல் நம்பிக்கையும் சக்தியும் தருகிறது
தொடர்ந்து நல்ல படைப்புகளைக் கொடுக்க
இது ஒரு நல்ல தூண்டுகோலாய் உள்ளது
மிக்க நன்றி

Sasikumar said...

நன்றி நண்பரே...

N.H.பிரசாத் said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...