* காதலில் சொதப்புவது எப்படி *
ஒரு குறும்பட இயக்குனாராக வெற்றி பெற்ற பாலாஜி மோகன் முதன் முதலில் கொடுத்திருக்கும் படம் இது. தமிழ் , தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் ரிலிஸாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது?..தொடர்ந்து படியுங்கள்.
ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சித்தார்த்தும், அமலாபாலும் காதலிக்கிறார்கள். இடையில் இவர்களுக்குள் பிரேக் அப் ஆகி விடுகிறது. அது ஏன் என்று சித்தார்த் நம்மிடம் புலம்பித் தள்ளுகிறார். கடைசியில் திரும்பவும் சேர்ந்தார்களா? சேர்ந்தார்கள்(இதுதான் படத்தின் கரு). எப்படி சேர்ந்தார்கள் என்பதை வெள்ளித்திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சித்தார்த் நடிப்பு:
யப்பா! என்ன ஒரு க்யூட்டான நடிப்பு. பாய்ஸில் பார்த்த அதே அப்பாவித்தன முகபாவம்,அசல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியே இருக்கிறார். என்ன நடிப்பு!. பாராட்ட நினைத்தால் படம் முழுவதும் இவரின் நடிப்பைப் பாராட்டலாம். அமலாபாலிடம் போன் நம்பர் கேட்பதற்காக இவர் செய்யும் முயற்சிகள், அப்புறம் அவ்வப்போது அமலாபாலிடம் போடும் குட்டி குட்டி சண்டைகள். அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. பிரமாதம் சித்தார்த்.
அமலாபாலின் நடிப்பு:
அமலாபால் என்றாலே அவரின் கண்கள் நிச்சயம் ஞாபகத்திற்கு வரும். படம் முழுவதும் க்யூட்டாகவும் ஹோம்லியாகவும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை மாடர்ன் டிரெஸ்ஸை விட சுடிதார், சேலை, தாவணி போன்ற உடைகளில் அமலாபால் ரொம்ப அழகாக இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் ஹேர் ஸ்டைலும் வெரி நைஸ். படத்தில் இவரின் நடிப்பைப் பற்றி சொல்வதென்றால் ஒன்றே ஒன்று சொல்லலாம். படம் பார்க்கும் போது சித்தார்த்தும், அமலாபாலும் நிஜமான காதலர்கள் போலத்தான் தெரிகிறார்கள். நிஜமான காதலர்கள் சண்டை போடுவது போலத்தான் தெரிகிறது. அமலாபாலின் கண்கள் கூட நிறைய இடங்களில் நடித்திருக்கிறது. மொத்தத்தில் மைனா, தெய்வதிருமகளுக்குப் பிறகு இந்தப் படம் அமலாபாலுக்கு பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இயக்குனரின் திறமை:
சென்னையில் உள்ள S.S.N Engg கல்லூரியில் என்ஜினியரிங் படித்து விட்டு, ரயில்வே துறையில் கிடைத்த வேலையையும் விட்டு விட்டு, சினிமாவின் மீதான ஈர்ப்பில் அத்துறைக்கு வந்து, குளிர்100, துரோகி போன்ற படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டே, கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனரில் கலந்து , போட்டியில் மூன்றாவதாக வெற்றி பெற்று , இன்று ஒரு அழகான ரொமாண்டிக் காமெடி படத்தை தந்த இயக்குனர் பாலாஜி மோகனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இவர் கொடுத்த இந்த வெற்றியின் மூலம் குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இனி தமிழ் சினிமா உலகம் கதவு திறக்கும். அதற்காகவே மறுபடியும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.
இன்றைய இளைய தலைமுறைகளின் காதல்களை யதார்த்தமாகவும், அதே நேரத்தில் ரசிக்கும் விதத்தில் காமெடி கலந்தும் ஒரு காக்டெயில் தந்திருக்கிறார். படம் பார்க்கும் போது நிச்சயம் புரியும். படத்தில் வரும் சித்தார்த், "அண்ணே" என்றழைத்த பெண்ணையும் காதலிப்பதாக சொல்லும் சித்தார்த் நண்பன், அப்புறம் அந்தக் குண்டு நண்பன்(அடிக்கடி பெண்களிடன் அறை வாங்குவார்.ஆனால் எல்லா லவ்வர்ஸ்களுக்கும் ஐடியா கொடுப்பார்) அனைவரும் ரசிக்கவும் வைக்கின்றனர். சிரிக்கவும் வைக்கின்றனர்., சித்தார்த் அப்பா, அம்மா, அமலாபாலின் அப்பா,அம்மா அவர்களின் காதல் எபிஷோட் நன்றாக இருக்கிறது. அதிலும் ஒரு யூத்புல்னஸ் தெரிகிறது. படத்தில் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட் வசனங்கள்தான் வெரி சூப்பர்ப். எக்ஸெலண்ட் ஷ்கிரீன் ப்ளே..வெல்டன் பாலாஜி மோகன்.
இசை:
எஸ்.தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் படி இல்லை. இருப்பினும் பிண்ணனி இசையால் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். வெல்டன் ஜாப்.
இசை:
எஸ்.தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் படி இல்லை. இருப்பினும் பிண்ணனி இசையால் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். வெல்டன் ஜாப்.
ஒளிப்பதிவு:
நீரவ்ஷாவின் இணைதயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் இது. படம் முழுவதும் அழகழகான ப்ரேம்களை கொடுத்திருக்கிறார். அமலாபாலை ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார். படம் முழுவதும் யூத்புல்னஸ் தெரிகிறது.
காதலில் சொதப்புவது எப்படி - A Wonderful romantic comedy film.Must watch it.
நீரவ்ஷாவின் இணைதயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் இது. படம் முழுவதும் அழகழகான ப்ரேம்களை கொடுத்திருக்கிறார். அமலாபாலை ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார். படம் முழுவதும் யூத்புல்னஸ் தெரிகிறது.
காதலில் சொதப்புவது எப்படி - A Wonderful romantic comedy film.Must watch it.
**********************************************************
3 comments:
நல்ல விமர்சனம் ! படம் இன்னும் பார்க்கவில்லை நண்பரே !
அருமையான விமர்சனம் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.
விமர்சனம் அருமை. சித்தார்த்திற்காக படம் பார்க்கலாம்.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...