Thursday, February 02, 2012

தெரிஞ்சுக்கோங்க - சில விசயங்கள்எலும்பு முறிவை ஏற்படுத்தும் வயிற்றுப்புண் மருந்து:

யிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ. என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மசாசிஸ்ட் மருத்துவ ஆய்வுக்குழு கூறியுள்ளது.


இந்த மருந்துகளை சாப்பிடும்போது மெல்ல, மெல்ல எலும்புகளை பலவீனப்படுத்துவதாகவும், அதன் மூலம் 45 வயதிற்கு மேல் எலும்பு முறிவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் பெண்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் பலவீனமாகி விடுவார்கள். அப்போது இந்த மருந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி இடுப்பு எலும்புகளை சேதப்படுத்துவதாகவும் அதன் மூலம் முறிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

*****************************************************

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?:

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள்.


எனவே குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.

அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

**********************************************************
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

மது முந்தைய தலைமுறைகள் கடைபிடித்து வந்த உணவு உண்ணும் முறையை, தற்போது கடைபிடிக்கப்படுகிறதா? என்று பார்த்தால் இல்லைதான்
என்று சொல்ல முடிகிறது. இருப்பினும் முந்தைய தலைமுறைகள் உணவு உண்ணும் முறையை சொல்லியிருக்கின்றனர். அந்த உண்மைகள் இவைதான்.


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.


மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.ஹ

கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

******************************************************

9 comments:

தங்கம் பழனி said...

உபயோகமுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி குணா..!

திண்டுக்கல் தனபாலன் said...

பல்சுவை தகவல்கள் ! அனைத்தும் பயனுள்ளவை ! நன்றி நண்பரே !

RAMVI said...

மிகவும் பயனுள்ள நல்ல விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி, குணா.

Udhayaganesh said...

Nice

Ramani said...

உபயோகமுள்ள விஷயங்களை
மிகத் தெளிவாகவும் விரிவாகவும் தந்தவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அதிலும் பெண்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

மிகவும் பயனுள்ள விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

RAMVI said...

குணா, எனது “விருது” பதிவில் எனக்கு கிடைத்த ஒரு விருதினை,உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

N.H.பிரசாத் said...

இதுவரை நான் கேள்விப்படாத பல அரிய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...