காத்திருத்தல்...
------------------------
அக்கம் பக்கம் பார்க்காம..
சிற்றின்பம் தேடாம...
சீக்கிரமா வீட்டுக்கு போ...
சீமான் வீட்டு சின்னராசு...
ரோட்டோரம் நின்னுக்கிட்டு...
கால் வலிக்க வேலை செஞ்சு...
நாள் கூலி வாங்கிக் கிட்டு...
சாயந்திரமா போகும்போது...
தெருவோரம் சைகை காட்டி...
கூப்பிடுவான் பங்காளி...
பக்கத்தில ' டாஸ்மார்க் '-கு...
அதைத் தாண்டிப் போகையிலே...
சிவப்பு நிற சேலைக்காரி...
பல்லிளிப்பாள் பணம் கறக்க...
மனசைக் கொஞ்சம் கல்லாக்கி...
மகிழ்வோட நடையைக் கட்டு...
மகராசி உன் புள்ள...
காத்திருக்கா தூங்காம...
இருந்த கொஞ்சம் அரிசிச் சோறு...
பெத்த புள்ள வயித்துக்காச்சு...
இனிமேல்தான் சமைத்திடுவாள்...
இன்றிரவு நீ வந்தால்...
அந்தி சாயும் வேளையிலும்...
அடுப்பின்னும் பற்றலையே...
அத்தை மகள் உனக்காக...
அமர்ந்திருப்பாள் ஆசையோடு...
கண்ணில் பல கனவோட...
கதவோரம் கண் விழிச்சு...
காத்திருக்கா பொஞ்சாதி - அதனால
நினைவோடு நீ கொஞ்சம்...
நினைத்துத்தான் பாரு ராசா...
**********************************************************
1 comment:
அருமை.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...