***** ஏனப்பா எனைப் படைத்தாய்..?*****
அல்லும் பகலும் அந்நியரிடம்,
அழுதழுது பெற்றுள்ளோம் சுதந்திரத்தை-இதனைதவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...
ஓடித்திரிந்தேன்...
சுதந்திரத்தின் அருமையை உணர்ந்தேன்...
நாட்கள் நகர்ந்தன...
நியாயங்களும் நித்திரையில் மூழ்கின...
பண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...
ஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,
மறுபக்கம் வெள்ளத்தில் மனக்கலக்கம்...,
மதத்தின் பேரால் ஒரு கலகம்...,
நிறத்தின் பேரால் ஒரு கலகம்.
ஏன் இந்த மாற்றம்...?
அரவணைத்த அரசியல்வாதிகள் அழிந்துவிட்டனர்...,
அறிவற்ற அரசியல்வாதிகள் பெருகிவிட்டனர்...,
L.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...!,
ஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...!
நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.
வாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...
" ஆயி அப்பன் என்னை விட்டு...,
பாதியிலே போயிட்டாங்க.
கை பிடிச்சு வந்தவளும்...,
கள்ளனோட போயிட்டாளே...,
கைக்குழந்தையை விட்டு புட்டு.
" ' யாரும் வேண்டாம் என் மகனே...!
நானிருக்கேன் உனக்காக.
கஷ்டப்பட்டு நான் உன்னை...,
கரை சேர்த்து விட்டுவேன்.
காலமெல்லாம் நான் உன்னை...,
காத்திடுவேன் நிழல் போல...!' "
என்றெல்லம் நான் சொல்லி...,
எடுத்து வளர்த்தேன் என் மகனை.
காடு கழனி வேலை செஞ்சு
நாலு காசு சேர்த்து வச்சேன்.
பக்குவமாய் படிக்க வச்சேன்.
அறிவாளி என் புள்ள
அருமையாகப் படிச்சானே.
அசலூரு போனானே...அழகாவும் மாறினானே...!
கண்ணில் ஒளி மங்கிடவே...,
உடம்பில் குறை வந்திடவே...,
தங்க மகன் வீட்டுக்கு...,
தங்கிடவே நான் போனேன்.
வாசல் பக்கம் வந்தானே...,
பரிவாக என் புள்ள...
பக்கத்தில பணக்கார பொஞ்சாதி..!
ஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.
அடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...
அமைதியாக சொன்னானே...
" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...!,
அன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.
நாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,
நன்றாக பார்த்துக்கொள்வேன் உங்களைத்தான்...,
காசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' ".
சொன்னானே எம்புள்ள நொடிப்பொழுதில்...
நொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.
கலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...
தயக்கத்துடன் வந்தானே...வாட்சுமேனு...
House full-லு, இடமில்லை என்று சொன்னான்.
ஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த
அண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்?."
*******************************************************************
1 comment:
மனதை வாட்டும் வலி மிகுந்த கவிதை.
வயதான அந்தப்பெரியவர் மனம் என்ன பாடு படும?
ஒருசில பிள்ளைகளால் பெற்றோருக்குத் தொல்லைகளே என்பதை நன்கு நயம்பட எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...