Friday, January 27, 2012

மற்றவை - சிரிக்க ஒரு கவிதை

நான் படித்த ரசித்த கவிதைகளில் சில வகைகள் அழகான வர்ணனைகள் கொண்டதாக இருக்கும். சில வகைகள் கருத்தாழமிக்கதாக இருக்கும். சில வகைகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்ற வரிகளைக் கொண்டவையாக இருக்கும். ஒரு சில வகைகள் நக்கலாக இருக்கும். அந்த வகையில் நான் ரசித்து சிரித்த ஒரு நக்கலான கவிதை இதுதான்.படித்துப் பாருங்கள். கவிதை வகையில் இதனை சேர்க்கலாமா என்று யோசிக்க வைக்கும் வகையில் உரைநடை வடிவில் இருக்கின்ற ஒரு கவிதை.


என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
                             
********************************************************

5 comments:

RAMA RAVI (RAMVI) said...

T.ராஜேந்தர் அவர்களின் வசனம் மாதிரி படித்துப் பார்த்தேன், வேடிக்கையாக இருந்தது.நாங்களும் ரசித்தோம்.

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த கவிதை.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா ... சிரித்துக் கொண்டே படித்தேன் ! நன்றி நண்பரே !

ADMIN said...

கவிதையா? இது? ம்ம்..படித்தேன். சின்னப்பசங்க பாடுற பாட்டு மாதிரி இருக்கு. எப்படி இருக்குன்னா..

"அதோ பாரு காக்கா"
என்பது போல..!! ஹா..ஹா..!!

N.H. Narasimma Prasad said...

நம்ம டி.ஆர் பாடுவது போல நினைத்து படிச்சேன். நல்லா இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...