Saturday, January 28, 2012

எ.பி.க - 16

ம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில், வாழும் முறை வெவ்வேறாக இருந்தாலும் ஒரு சில விசயங்கள் பொதுவாகத்தான் இருக்கும். அந்த விசயங்களை ஒருவர் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.  எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. படித்துப் பாருங்கள்.

*** வாழ்க்கைப் புத்தகம் ***

வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை
வலிகளும் நிறைந்தவை!

பாசமுள்ள உறவுகள்
வேசமுள்ள நெஞ்சங்கள்
தோள் கொடுக்கும் உறவுகள
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.....!

வாழ்க்கை அா்த்தத்தோடு
வாழும் உறவுகள்
எப்படியும் வாழலாம்
என்றெண்ணும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

பாசத்தை விலை பேசி
பங்கு போடும் உறவுகள்
வறுமையிலும் வாழ்ந்து காட்ட
போராடும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்!

துவழ்ந்து போனால்
தூக்கி வீசும் உறவுகள்
நிமிர்ந்து நிற்கையில்
மார்தட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் உறவுகள்
தன்னை விட உயர்ந்திட்டால்
பழமை குத்திக்காட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.......!

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
பக்கங்கள் இரண்டு
நல்லதும் கெட்டதும்
நானிலத்தில் உண்டு
புரிந்து கொண்டால்
சொர்க்கமே நமக்கு....!

-அருந்ததி

*********************************************************

1 comment:

N.H. Narasimma Prasad said...

என்னை பொறுத்தவரை உறவுகள் என்பது ஒரு புரியாத புதிர் தான். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...