வலைப்பூவை ஆரம்பித்தவுடன் நிறைய எழுத வேண்டும் என்று ஆர்வம் எனக்குள் நிறையவே இருந்தது. அதற்கேற்றார்போல் தினமும் பதிவு எழுதி வந்தேன். சில மாதங்களில் சிறிய இடைவெளி விட ஆரம்பித்த பின்பு எழுத மனம் நினைத்தாலும் ஏதாவது ஒரு வேலை வந்து என் பதிவு பணிக்கு தடை போட்டது. இன்று எப்படியாவது பதிவு எழுதியே தீர வேண்டும் என்று நினைத்து, ஒரு வழியாக ஒர் பதிவை எழுதி விட்டேன். மேலும் "தினமும் பதிவு எழுத வேண்டும்" என மனதிற்குள் உறுதி சொல்லிக்கொண்டேன். இனி இன்றைய பதிவைப் படியுங்கள்...
தட்டிக் கேளுங்கள்.நிச்சயம் கிடைக்கும்:
இணையதளத்தில் நான் படித்த விசயமிது. பிள்ளைகளின் கல்லூரி படிப்புக்காக எஜுகேஷனல் லோன் வாங்குவதற்கு நிறைய பெற்றோர்கள் வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். "மாணவர்களின் படிப்புக்கு ஒவ்வொரு வங்கியும் நிச்சயம் லோன் தரவேண்டும்" என்று நிதி அமைச்சர்கள் பேட்டியில் சொன்னாலும் கூட, வங்கி அதிகாரிகள் தலை அசைப்பது இல்லை. ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்(ஒரு சிலரைத் தவிர). அவர்களுக்கு, மக்களின் டெபாசிட் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை. இது சம்பந்தமாக ஒருவர் எழுதிய கட்டுரையை இணையதளத்தில் நான் படித்தேன். அவரின் சாமர்த்தியத்தையும் தைரியத்தையும் எண்ணி வியந்தேன். அந்தக் கட்டுரை இதுதான். நம் அனைவருக்கும் இந்தக் கட்டுரை நிச்சயம் பயன்படும் என்று நான் நினைக்கிறேன்.

" என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் ,அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி: மதுரை-ல் அப்ளை செய்தோம்.
அதற்கு முன்பே கவுன்செலிங் தியாகராஜா கல்லூரியில் நடந்தபோது அனைத்து வங்கிகளும் ஸ்டால் போட்டிருந்தார்கள். மிகக் கனிவாக விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டவர்கள். நேரில் போனபோது லோன் தர மறுத்தார்கள்.
பிறகு ஒரே ஒரு மெயில் நிதி அமைச்சருக்கு, ஆர்பிஐ, கவர்னர் என்று யார் யார் மெயில் ஐடி கிடைத்ததோ எல்லோருக்கும் ஒரு சிசி (CC).
அடுத்த நாள் மேனேஜரிடமிருந்து போன் உடனே வாங்க சார் லோன் தரோம்னு :-)
அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்னதான் நடந்தது என்று.
வாய்ப்பிருக்கும்போது கூட துரும்பைக் கிள்ளி போடாதவர்கள் வெட்டி ஜம்பம் அடிக்கக்கூடாது.
முயற்சியே பண்ணாமல். இதை ப்ளாக்மெய்ல்னுகூடச்சொல்லிக்கிடட்டும் பரவாயில்லை. இதைத்தான் நான் சொன்னேன். இது லஞ்சம் கேட்டு மிரட்டும் காலம் இல்லை. லஞ்சம் கேட்பவனை மிரட்டும் காலம் என்று!
அமைச்சர் கேட்டு விடுவாரோ, நம்மீது ஆக்ஷன் எடுத்துவிடுவாரோ என்றே காரியங்கள் நடந்துவிட வாய்ப்பிருக்கிறது. சும்மா ஊழல் ஊழல் என்று பிலாக்கிணம் வைக்காமல் சட்டத்தின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நாமும் முன்வரவேண்டும்.
அப்படித்தான் நடந்தது.
மேனேஜர் ஏறக்குறைய கெஞ்சும் தொணியில் ஏன் அப்படியெல்லாம் மெயில் அனுப்பினீர்கள் என்றாராம்.
அந்த மெயிலை அமைச்சர் பார்த்திருக்ககூட மாட்டாரு.:) ஆனா வங்கி அதிகாரிக்குத் தண்ணியில்லாத பிராஞ்ச் எல்லாம் கண்ணுலத் தெரிய ஆரம்பிச்சுட்டு இருக்கும்:)
நானும் முயற்சி ஏதும் எடுக்காமல் இந்த அரசாங்கம் வெறுமே சொல்கிறது எல்லாம் பித்தலாட்டம் என்று எழுதலாமே?
உண்மையாகவே அந்த சம்பவம் எனக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்தது.
தட்டிக் கேளுங்கள். தயவுசெய்து தட்டிக் கேளூங்கள். தட்டிக் கேட்க சட்டத்தில் ஏகப்பட்ட வழிகள் ஏற்கெனவே இருக்கின்றன. கேட்கத்தான் ஆட்கள் இல்லை".
*******************************************************************
10 comments:
அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே
வாழ்த்துகள்.
நல்லது, வாழ்த்துகள்!!!
நல்ல விழிப்புணர்வுப் பதிவு
அவருடைய கடித்தத்தை அப்பிடியே
கொடுத்திருந்தது சிறப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
விழிப்புணர்வு பதிவை வழங்கியமைக்கு நன்றி..!
மறுபடியும் பதிவு எழுத ஆரம்பித்தது பற்றி மிகவும் சந்தோஷம் குணா.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
//இது லஞ்சம் கேட்டு மிரட்டும் காலம் இல்லை. லஞ்சம் கேட்பவனை மிரட்டும் காலம் என்று! //
நல்ல விஷயம்.இது எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
நல்ல பகிர்வு குணசேகரன்
நல்ல பதிவு ! தொடருங்கள் நண்பரே !
கேளுங்கள் கொடுக்கப்படும் & தட்டுங்கள் திறக்கப்படும் !!
கண்டிப்பாக கேட்கவேண்டும். கேட்டால் தான் கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...