தன்னம்பிக்கையைத் தரும் நிறைய கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதைதான் இது. எதிர்பார்க்காத தருணங்களில் துன்பங்கள் வந்தாலும் அதனுள் மீண்டு வரவேண்டும் என்பதை ஒரு பறவையின் மூலம் நயமாக சொல்லியிருக்கிறார் கவிதையின் ஆசிரியர். அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு...
** வாசலில் விழுந்த பறவை **
** வாசலில் விழுந்த பறவை **
தற்செயலாக
வாசலில் விழுந்த ஒரு பறவை
காலூன்றி நிற்க முற்சித்தது
தடுமாறித் தடுமாறி விழுகிறது
இடைவிடாமல்
சிறகுகளை அடித்துக்கொள்கிறது
ஐயோ எனத் தாவி
அள்ளியெடுத்து
நீவித்தந்த விரல்உதறி
நழுவி நழுவி விழுகிறது
அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை
நொண்டி நொண்டி
நடந்து செல்வதிலும்
பறப்பதிலும்தான்
அதன் கவனம் குவிந்திருக்கிறது
எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை
விடையறியா வலியில் துவள்கிறது மனம்
சில கணங்களுக்கு முன் பார்த்தேன்
பாடி முடித்த ஆனந்தத்தில்
தாழ்வான மரக்கிளையில்
துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது
அதன் சிறகின் மஞ்சள் அழகால்
மாலைப்பொழுதே வசீகரமானது
அதன் சின்னச்சின்ன நடை
அழகான ஒரு சித்திரம்
எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்
எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது
எவ்வளவோ தடுமாற்றம்
எவ்வளவோ வேதனை
எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது.
வாசலில் விழுந்த ஒரு பறவை
காலூன்றி நிற்க முற்சித்தது
தடுமாறித் தடுமாறி விழுகிறது
இடைவிடாமல்
சிறகுகளை அடித்துக்கொள்கிறது
ஐயோ எனத் தாவி
அள்ளியெடுத்து
நீவித்தந்த விரல்உதறி
நழுவி நழுவி விழுகிறது
அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை
நொண்டி நொண்டி
நடந்து செல்வதிலும்
பறப்பதிலும்தான்
அதன் கவனம் குவிந்திருக்கிறது
எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை
விடையறியா வலியில் துவள்கிறது மனம்
சில கணங்களுக்கு முன் பார்த்தேன்
பாடி முடித்த ஆனந்தத்தில்
தாழ்வான மரக்கிளையில்
துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது
அதன் சிறகின் மஞ்சள் அழகால்
மாலைப்பொழுதே வசீகரமானது
அதன் சின்னச்சின்ன நடை
அழகான ஒரு சித்திரம்
எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்
எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது
எவ்வளவோ தடுமாற்றம்
எவ்வளவோ வேதனை
எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது.
-பாவண்ணன்
**********************************************************
1 comment:
ஒரு மனிதனுக்கு எந்தக் 'கை' போனாலும், 'நம்பிக்கை' மட்டும் போகக்கூடாது. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...