* ஏழாம் அறிவு - விமர்சனம் *
கமலின் வாரிசான ஸ்ருதி முதன் முதலில் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். டப்பிங்கும் அவரே. படத்திற்கு இவருடைய கேரக்டர்தான் மிக மிக முக்கியமானது. நடிப்பில், தான் கமலின் வாரிசுதான் என்பதை நிரூபித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார்.
படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் திறமையும் சிறப்பும் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. அட்டகாசம். "முன் அந்தி சாரல் "பாடலை எடுத்த விதம் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை. காட்சிக்கேற்ப பிண்ணனி இசை உள்ளது. பாடல்கள் ஒக்கே.
படத்தின் இயக்குனரான முருகதாஸ், இந்த படத்தில் ஒரு தமிழனின் பெருமை மறைக்கப்பட்டிருப்பதை ஆதங்கத்துடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தமிழன் அடக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை படத்தின் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு மனிதர் காஞ்சிவரத்தில் இருந்தாரா? என்று நினைக்கும் வண்ணம் அவரது சிறப்பை, முக்கியத்துவத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.
****************!!**Happy Diwali**!!*************
நமக்கெல்லாம் தெரியாத ஒரு தமிழனின் வரலாற்றுச் சிறப்பை சொல்லியிருக்கும் படம்தான் ஏழாம் அறிவு. 1600ம் ஆண்டில் காஞ்சிவரத்தை தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்த பல்லவ மன்னர்களில், போதி தர்மர் என்ற இளவரசனின் வாழ்க்கைதான் படத்தின் கரு. போதி தர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவான இதை "தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும் " க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இனி படத்திற்குப் போவோம்.
1600ம் ஆண்டில் சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வித புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றனர். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி , தனது கடமையைச் செய்ய அந்த கிராமத்திற்கு சென்ற போதி தர்மரை, அந்த கிராமத்து மக்கள் அவரை அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் அவர் ஊரின் எல்லையில் ஒரு குகையில் வாழ்கிறார். ஆபத்தான அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவர் குணப்படுத்தி விடுவதால் , அதன் பின் அம்மக்கள் அவரை வணங்குகின்றனர். எதிரிகளின் படையெடுப்பிலிருந்து மக்களைக் காத்துக் கொள்ள , போதி தர்மர் அவர்களுக்கு தற்காப்புக் கலையைச் கற்றுக் கொடுக்கின்றார். தனது கடைமையை முடித்து, சொந்த ஊருக்கு செல்ல விளையும் போது, அவர் உடல் அந்த மண்ணில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணவில் விசம் வைத்து அவரை கொன்று விடுகின்றனர். காலம் உருள்கிறது. தற்காலத்தில் சீனாவில் இருப்பவர்கள் திரும்பவும் அந்த நோயை இந்தியாவில் பரப்பி, இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். அந்த நோயைப் பரப்புவதற்கு போதி தர்மரின் அனைத்துக் கலைகளையும் கற்றுள்ள ஒரு சீன இளைஞனை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்., போதி தர்மரின் அனைத்து திறமைகளையும் , அவரது டி.என்.ஏ. வைக் கொண்டிருக்கும் அவர் சந்ததியில் வந்த ஒருவருக்கு தூண்டச் செய்து திரும்பவும் போதி தர்மரின் திறமைகளையும் வெளிக்கொணர ஒரு மரபியல் துறை ஆராயச்சி மாணவி முயல்கிறார். அவரை அழிக்க அந்த சீன இளைஞன் முயல்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க!
சூர்யாவின் பர்பெக்டான நடிப்பு, இந்திய சினிமாவில் முக்கியமானவராக உருவாகியிருக்கும் இயக்குனர், தலை சிறந்த ஒளிப்பதிவாளர் என டாப் லெவல் நபர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு ஏக போக எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? மேலும் படியுங்கள்.
பர்பெக்ஷனிஸ்ட் சூர்யா படத்தில் தன் பங்கை அருமையாக செய்திருக்கிறார். அந்த போதி தர்மர் கேரக்டர், சர்க்கஸ் இளைஞன் என இரண்டிலும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. பாராட்டுக்கள் சூர்யா. க்ளைமாக்ஸ் ஆக்சன் சீனில் சூர்யாவின் உழைப்பு தெரிகிறது. வெல்டன் சூர்யா.
1600ம் ஆண்டில் சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வித புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றனர். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி , தனது கடமையைச் செய்ய அந்த கிராமத்திற்கு சென்ற போதி தர்மரை, அந்த கிராமத்து மக்கள் அவரை அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் அவர் ஊரின் எல்லையில் ஒரு குகையில் வாழ்கிறார். ஆபத்தான அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவர் குணப்படுத்தி விடுவதால் , அதன் பின் அம்மக்கள் அவரை வணங்குகின்றனர். எதிரிகளின் படையெடுப்பிலிருந்து மக்களைக் காத்துக் கொள்ள , போதி தர்மர் அவர்களுக்கு தற்காப்புக் கலையைச் கற்றுக் கொடுக்கின்றார். தனது கடைமையை முடித்து, சொந்த ஊருக்கு செல்ல விளையும் போது, அவர் உடல் அந்த மண்ணில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணவில் விசம் வைத்து அவரை கொன்று விடுகின்றனர். காலம் உருள்கிறது. தற்காலத்தில் சீனாவில் இருப்பவர்கள் திரும்பவும் அந்த நோயை இந்தியாவில் பரப்பி, இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். அந்த நோயைப் பரப்புவதற்கு போதி தர்மரின் அனைத்துக் கலைகளையும் கற்றுள்ள ஒரு சீன இளைஞனை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்., போதி தர்மரின் அனைத்து திறமைகளையும் , அவரது டி.என்.ஏ. வைக் கொண்டிருக்கும் அவர் சந்ததியில் வந்த ஒருவருக்கு தூண்டச் செய்து திரும்பவும் போதி தர்மரின் திறமைகளையும் வெளிக்கொணர ஒரு மரபியல் துறை ஆராயச்சி மாணவி முயல்கிறார். அவரை அழிக்க அந்த சீன இளைஞன் முயல்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க!
சூர்யாவின் பர்பெக்டான நடிப்பு, இந்திய சினிமாவில் முக்கியமானவராக உருவாகியிருக்கும் இயக்குனர், தலை சிறந்த ஒளிப்பதிவாளர் என டாப் லெவல் நபர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு ஏக போக எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? மேலும் படியுங்கள்.
பர்பெக்ஷனிஸ்ட் சூர்யா படத்தில் தன் பங்கை அருமையாக செய்திருக்கிறார். அந்த போதி தர்மர் கேரக்டர், சர்க்கஸ் இளைஞன் என இரண்டிலும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. பாராட்டுக்கள் சூர்யா. க்ளைமாக்ஸ் ஆக்சன் சீனில் சூர்யாவின் உழைப்பு தெரிகிறது. வெல்டன் சூர்யா.
கமலின் வாரிசான ஸ்ருதி முதன் முதலில் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். டப்பிங்கும் அவரே. படத்திற்கு இவருடைய கேரக்டர்தான் மிக மிக முக்கியமானது. நடிப்பில், தான் கமலின் வாரிசுதான் என்பதை நிரூபித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார்.
படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் திறமையும் சிறப்பும் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. அட்டகாசம். "முன் அந்தி சாரல் "பாடலை எடுத்த விதம் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை. காட்சிக்கேற்ப பிண்ணனி இசை உள்ளது. பாடல்கள் ஒக்கே.
படத்தின் இயக்குனரான முருகதாஸ், இந்த படத்தில் ஒரு தமிழனின் பெருமை மறைக்கப்பட்டிருப்பதை ஆதங்கத்துடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தமிழன் அடக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை படத்தின் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு மனிதர் காஞ்சிவரத்தில் இருந்தாரா? என்று நினைக்கும் வண்ணம் அவரது சிறப்பை, முக்கியத்துவத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.
அருமையான கதை இருந்தும் , அட்டகாசமான திரைக்கதையுடன் விறு விறுப்பாக எடுத்திருக்கவேண்டிய படம் இது. ஆக்சன் சீன்கள் நிறைய வைப்பதற்கு படத்தில் வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் அதனை செய்யாதது படத்திற்கு மைனஸ்தான். படம் மென்மையாகத்தான் செல்கிறது. அட்டகாசமான தொடக்கத்துடன் படத்தின் ஆரம்பத்தில் பயமூட்டிய வில்லன் நடிப்பு, படம் முழுவதும் ஒரே மாதிரி பார்ப்பது, வசியம் பண்ணுவது போன்ற காரணத்தால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஒரு காட்சியில் சாக்கடை அல்லுபவர்,ரோட்டில் செல்லும் ஒரு பெண் போன்றவர்கள் எல்லாம் வில்லனின் வசியத்தால் திடீரென்று குங்க்-பூ ஸ்டைலில் சூர்யாவை அடிப்பது பார்க்க காமெடியாக உள்ளது. இருந்தாலும் சூர்யாவிற்காகவும் , ஸ்ருதிக்காகவும், ஒளிப்பதிவிற்காகவும், போதி தர்மருக்காகவும் இந்தப் படத்தைப் ஒருமுறை பார்க்கலாம்.
ஏழாம் அறிவு - தமிழனின் வரலாறு.
கமெண்ட் கார்னர் - விறு விறுப்பு குறைவு.
ஏழாம் அறிவு - தமிழனின் வரலாறு.
கமெண்ட் கார்னர் - விறு விறுப்பு குறைவு.
****************!!**Happy Diwali**!!*************
8 comments:
Happy Diwali*
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்... பட விமர்சனம் படத்தைப் பார்த்த நிறைவு தருகிறது.!
தீபாவளி வாழ்த்துக்கள்.
கதைச்சுருக்கம் அருமை. தீபாவளி வாழ்த்துக்கள்!
உங்களோட கதை சுருக்கம்,விமர்சனம் அருமை.
விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...