Wednesday, October 26, 2011

மற்றவை:வேலாயுதம் விமர்சனம்

* மற்றவை:வேலாயுதம்  விமர்சனம் *


இந்த வருட தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களில் எது வெற்றி பெறும், எது ப்ளாப் என்ற கேள்விக்கு இந்த விமர்சனத்தில் பதில் கிடைக்கும். இப்போது விஜய்-ந் வேலாயுதம் படத்தைப் பற்றி பார்ப்போம்.


ஜர்னலிஸ்ட் ஜெனிலியா, தன் சக நண்பர்களுடன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தாதாக்கள் செய்யும் அண்டர்கிரவுண்ட் தொழில்களை எல்லாம் கண்டுபிடிக்கும் போது அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது நண்பர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். ஜெனிலியாவையும் கத்தியால் குத்திவிட்டு உடலை வீசி விடுகின்றனர். அந்த சம்பவத்தில் ரவுடிகளும் தவறுதலாக செத்து விடுகின்றனர். உயிர் பிழைத்த ஜெனிலியா, சூப்பர் ஹீரோ வேலாயுதம் என்ற ஒரு கற்பனை மனிதனை உருவாக்கி, சூப்பர் ஹீரோ வேலாயுதம் தான் ரவுடிகளையும்  அழித்தான் , மேலும் தவறு செய்பவர்களை அவன் நிச்சயம் அழிப்பான், என்ற ஒரு பொய்யான தகவலை மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நம்புமாறு செயல்களை செய்கிறார். இந்நிலையில்   தங்கச்சியின் திருமணத்திற்காக , சிட்பண்டில் சேமித்த பணத்தை பெற்றுக் கொள்ள சென்னைக்கு வருகிறார் வேலாயுதம் என்கிற பால்காரர் விஜய். வில்லன்களின் ஒவ்வொரு ப்ளான்களும் சந்தர்ப்பவசத்தால்  விஜய்யின் மூலம் நிறுத்தப்படுகிறது. மக்களும் மீடியாக்களும் வேலாயுதம் என்கிற சூப்பர் ஹீரோ தான் வில்லன்களின் ப்ளான் களை நிறுத்துவதாக நம்புகின்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யே நிஜ வேலாயுதமாக மாறி வில்லன்களை அடக்குகிறார். இதனால் வில்லன் கூட்டம் அவரை கொல்ல நினைத்து, பாம் வைக்க, அதில் விஜய்யின் தங்கச்சி இறந்து போகிறார். இதனால் வெகுண்டெழும் விஜய் வில்லன்களை அழிக்கிறார். இதுதான் படத்தின் கதை.

விஜய்யின் நடிப்பு:
காமெடி, டான்ஸ், ஆக்சன் என அனைத்து விசயங்களிலும் விஜய் தனது வழக்கமான பாணியை செய்திருக்கிறார். அவ்வப்போது, தங்கச்சியிடம் பாசத்தில் உருகுகிறார். முறைப் பெண் ஹன்சிகாவை டீசிங்க் செய்கிறார். சந்தானத்துடன் காமெடி செய்கிறார். ஆக்சன் காட்சிகளில் விஜய் மிரட்டுகிறார்.
சூர்யா தன் படங்களில் தன் சிக்ஸ்பேக் உடலைக் காட்டுவது போல, விஜய்யும் ஒரு காட்சியில் தன் உடலைக் காட்டுகிறார். சூர்யாவிடம் இருக்கும் சிக்ஸ் பேக் விஜய்யிடம் இல்லை. இருப்பினும் ஒரு பில்டப்பிற்காக அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். 

ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் அனைவரும் தங்கள் கடமையை செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.

விஜி ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஆவரேஜ்தான், ரத்தத்தின் ரத்தமே பாடல் திரையில் பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. பிண்ணனி இசையும் நன்று.

ஒளிப்பதிவும் மிக நன்று.


 எப்போதும் ரீமேக் படங்கள் எடுக்கும் இயக்குனர் ராஜா , இந்தப்படத்தில்தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ் பற்றி நினைத்து,
அவருக்கு ஏற்ற ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். பக்கா கமர்சியல் கதையை எடுத்து, அதற்கேற்ற வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் சந்தானத்தின் காமெடி சிரிக்கும்படி சிறப்பாக உள்ளது. ஆக்சன் சீன்கள் மிரட்டலாக உள்ளன. ஏழாம் அறிவை விட, வேலாயுதம் பெட்டர்.

வேலாயுதம் - கமர்சியல் மசாலா எண்டெர்டெயின்மெண்ட்
கமெண்ட் கார்னர் - விஜய் ரசிகர்களுக்கும், மசாலா பட பிரியர்களுக்கும் இந்தப்படம் ஒரு சரவெடி.


*******************************************************


4 comments:

Ramani said...

அழகான விமர்சனம் வாழ்த்துக்கள்
அடுத்த விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து..
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அருமையான விமர்சனப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

RAMVI said...

அருமையாக விமர்சனம் செய்து இருக்கீங்க குணா. வாழ்த்துக்கள்.

N.H.பிரசாத் said...

அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...