* வாகை சூடவா விமர்சனம் *
எப்பாடுபட்டாவது அந்தச் சிறுவர்களுக்கு படிப்பறிவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் விமல். ஆனால் படிப்பின் மீது சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கின்றனர் அங்கு வாழும் மக்களும் அவர்களின் குழந்தைகளும். தொடக்கத்தில் இருந்தே அவருக்கு சில பல பிரச்சனைகள் அங்கு இருப்பவர்களால் ஏற்படுகிறது. இடையில் அங்கிருக்கும் டீக்கடை வைத்திருக்கும் கதாநாயகி இனியா , விமலை காதலிக்கிறார். தனது விருப்பத்தை விமலிடம் சொல்லியும் விடுகிறார். இனியாவின் காதலை விமல் ஏற்றுக் கொண்டாரா? சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடிந்ததா?அவருக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததா? பதில்களை வண்ணத்திரையில் காண்க.
பாக்யராஜ் படத்தின் முதல் காட்சியிலும் , கடைசியிலும் எட்டிப்பார்க்கிறார். "இனியாதான் தனக்கு சமைக்கிறார்" என்ற விமலின் பேச்சுக்கு அவர் பதில் சொல்லும் விதம் அக்மார்க் பாக்யராஜ் டிரேட் மார்க். பொன்வண்ணன் கெட்டவராக வருகிறார். நடிப்பும் ஒ.கே. படத்தில் சிறிது நேரம் கலகலக்க வைப்பது சிறுவர்களின் நடிப்புதான்.
இயக்குனரின் திறமை:
வாகை சூடாவா - ஆவரேஜ்
********************************************************
அறுபதுகளில் வாழும் படிப்பறிவில்லாத மக்களின் வாழ்க்கைதான் படத்தின் கதை களன் .அரசாங்க உத்யோகத்தில் தன் மகன் அமர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருக்கும் பத்திரபதிவு எழுத்தர் பாக்யராஜ். அவரின் மகனான விமல் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர். ஏதேனும் ஒரு ஊரில் சில மாதங்கள் கிராம சேவா என்ற அமைப்பின் கீழ் ஆசிரியப்பணி செய்தால் அரசாங்க உத்யோகம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தால் கண்டெடுத்தாங்காடு என்னும் ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறார். படிப்பறிவு சிறிதும் இல்லாது, செங்கல் சூளையில் வேலை செய்யும் உழைப்பாளிகள் அந்த ஊரின் மக்கள். சிறுவர்களும் கூட அங்கு வேலை செய்கின்றனர்.
எப்பாடுபட்டாவது அந்தச் சிறுவர்களுக்கு படிப்பறிவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் விமல். ஆனால் படிப்பின் மீது சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கின்றனர் அங்கு வாழும் மக்களும் அவர்களின் குழந்தைகளும். தொடக்கத்தில் இருந்தே அவருக்கு சில பல பிரச்சனைகள் அங்கு இருப்பவர்களால் ஏற்படுகிறது. இடையில் அங்கிருக்கும் டீக்கடை வைத்திருக்கும் கதாநாயகி இனியா , விமலை காதலிக்கிறார். தனது விருப்பத்தை விமலிடம் சொல்லியும் விடுகிறார். இனியாவின் காதலை விமல் ஏற்றுக் கொண்டாரா? சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடிந்ததா?அவருக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததா? பதில்களை வண்ணத்திரையில் காண்க.
விமலின் நடிப்பு:
கொடுத்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார் விமல். காலத்திற்கு ஏற்றார் போல் அவரின் கெட்டப் இருக்கிறது.க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது.
கொடுத்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார் விமல். காலத்திற்கு ஏற்றார் போல் அவரின் கெட்டப் இருக்கிறது.க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது.
புதுமுகம் இனியாவின் நடிப்பு:
இன்னொரு கேரளத்து வரவு. நடிப்பும் மிக அருமை. விமலைப் பார்த்து குழைவது, விமலிடம் தன் காதலைச் சொன்னதற்கு அப்புறம் விமலின் பதிலைக் கேட்டு கலங்குவது போன்ற அனைத்து காட்சிகளிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்.அவருக்கும் காலத்திற்கு ஏற்றார் போல் மேக்கப்தான்.
இன்னொரு கேரளத்து வரவு. நடிப்பும் மிக அருமை. விமலைப் பார்த்து குழைவது, விமலிடம் தன் காதலைச் சொன்னதற்கு அப்புறம் விமலின் பதிலைக் கேட்டு கலங்குவது போன்ற அனைத்து காட்சிகளிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்.அவருக்கும் காலத்திற்கு ஏற்றார் போல் மேக்கப்தான்.
பாக்யராஜ் படத்தின் முதல் காட்சியிலும் , கடைசியிலும் எட்டிப்பார்க்கிறார். "இனியாதான் தனக்கு சமைக்கிறார்" என்ற விமலின் பேச்சுக்கு அவர் பதில் சொல்லும் விதம் அக்மார்க் பாக்யராஜ் டிரேட் மார்க். பொன்வண்ணன் கெட்டவராக வருகிறார். நடிப்பும் ஒ.கே. படத்தில் சிறிது நேரம் கலகலக்க வைப்பது சிறுவர்களின் நடிப்புதான்.
இயக்குனரின் திறமை:
60பதுகளில் இருப்பது போன்ற அருமையான செட்டை கலை இயக்குனரை அமைக்க செய்தமைக்காக இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம். ஒளிப்பதிவு அதற்கேற்றார் போல் இருக்கிறது. சிறுவர்களை நன்கு நடிக்கவைத்திருக்கிறார். ஆனால் கலகலப்பான காட்சிகள் நிறைய வைத்திருந்தாலும் களவாணியில் இருந்த இம்பாக்ட் இதில் இல்லை. படிப்பே வேண்டாம் என்று இருக்கும் மக்கள் மனம் மாறி படிக்க அனுப்பும் காட்சிக்கான காரணத்தை இயக்குனர் இன்னும் பலப்படுத்தி இருக்கலாம். அபியும் நானும் படத்தில் வேலைக்காரராக வருபவர் இதில் ஒரு பைத்தியக்காரர் போல வருகிறது. இரண்டு வரி வசனங்களை அவ்வப்போது சொல்கிறார். இடைவேளையின் போது ஒரு ஹைப் தருகிறார். ஆனால் அந்த ஹைப்பினால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அவருடைய காட்சியமைப்பு படத்திற்கு தேவையா? இயக்குனர் யோசிக்க வேண்டும்.
புதுமுக இயக்குனர் ஜிப்ரானின் இசையில் "செங்கல் சூளைக்காரா", "சர சர காத்து", "போறாளே" பாடல்கள் அருமை. பிண்ணனி இசை ஓ.கே.
சத்யராஜ் நடித்த திருமதி பழனிச்சாமி படத்தின் கதையும் இந்தப்படத்தின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் சத்யராஜும், கவுண்டமணியும் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அது இல்லாதது படத்திற்கு பலவீனம்தான். பொறுமையாகத்தான் படத்தைப் பார்க்க வேண்டும்.
வாகை சூடாவா - ஆவரேஜ்
********************************************************
8 comments:
நல்ல முறையில் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்..!! பாராட்டுக்கள் குணா..!!
உங்கள் விமர்சனம் படிக்க படத்தை பார்க்கலாம்
என்கிற மாதிரிதான் இருக்கிறது
பார்க்க உத்தேசம்
நல்லவிதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.
நல்ல விமர்சனம்.விமர்சனங்கள் படத்தை நடத்திச்செல்லும் சக்திகொண்டவை.வாழ்த்துக்கள்.
படத்தை விட
தங்களின்
விமர்சனம்
அருமை
ON YOUR MOVIE REVIEW "ENGEYUM EPPOTHUM"
//// ஜெய்-யின் தாயாரைப் பார்க்க இருவரும், அனன்யா செல்லும் அதே பஸ்ஸில் பயணம் செய்கின்றனர். வழியில் சந்தர்ப்ப வசத்தால் சர்வா பயணிக்கும் பஸ்ஸும், ஜெய், அஞ்சலி, அனன்யா பயணிக்கும் பஸ்ஸும் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகிறது./////
tHIS IS WRONG ............... JAI, ANJALI, SARVA ONLY TRAVELL TOGETHER..... ANANYAA IN THE OPPOSITE BUS
அசத்தலான விமர்சனம்..
வாழ்த்துக்கள் பாஸ்
super vimarsanam
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...