Monday, October 17, 2011

மற்றவை- ஸ்பெஷல் நியூஸ்


உள்ளாட்சி தேர்தல் : சில முக்கிய விசயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், அனைத்து இடங்களிலும் ஏகபோகமாக நடந்தேறிய பணப்பட்டுவாடாவை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய தேர்தல் ஆணையம், சிறப்பாக செயல்பட்டதற்காக மக்களிடத்தில் நல்ல பேரை சம்பாதித்தது. ஓரளவு பணப்பட்டுவாடாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இன்று நடந்தேறிய உள்ளாட்சி தேர்தலுக்காக, எனக்குத் தெரிந்த வரை அனைத்து இடங்களிலும் மக்களுக்கு பணம், பாத்திரங்கள், சிலிண்டர் கனெக்சன், இன்னும் நிறைய விதத்தில் வேட்பாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்டன. நான் வசிக்கும் ஏரியாவில் கூட தே.மு.தி.க சார்பில் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.கோடிக்கணக்கில் பணத்தை வேட்பாளர்கள் செலவழித்திருப்பது, அவர்கள் ஓட்டு கேட்க வரும் போது நன்றாகத் தெரிந்தது.

எப்போதும் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு இப்போது தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் செயல் நடுநிலைமையாக இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதற்கு யார் காரணம்?

ஆளும் கட்சியினர் காவல்துறையினரின் துணையுடன் நிச்சயம் அவர்கள் நினைத்ததை செயல்படுத்திவிடுவர். எனவே அதிக பட்சமாக ஆளும் கட்சியினரின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பம் நிகழ வாய்ப்புண்டு. எந்தக் கட்சியினர் பெரும்பான்மை வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்..!
###################################################
இதர விசயங்கள்:

உள்ளாட்சி தேர்தலுக்குப்  பின் நடக்கவுள்ள விசயங்கள் இவைதான்:(எனது எண்ணத்தில் தோன்றியவை)

இத்தனை நாள் மெளனமாக இருந்த எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த், ஆளும் கட்சி மீதான தனது கசப்பை எதிர்ப்பாக காட்டுவார்.

ஜாமினுக்கு அப்பீல் செய்த கனிமொழிக்கு ஜாமின் கிடைத்து விடும்.

தயாநிதி விசயத்தில் சில விசாரணைகள் மட்டும் நடைபெற்று முடிவில் அவரது கைது விசயம் புஸ்வாணமாக ஆகலாம்.

உள்ளாட்சியில் ஒரு வேளை ஆளும் கட்சியினர் அதிகளவில் வெற்றி பெற்றால், அதற்கப்புறம் தி.மு.க.வினரின்  மீதான நில அபகரிப்பு + கைது நிகழ்ச்சிகள் இன்னும் தீவிரமடையும்.
###################################################

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் போது, 7ம் அறிவு, வேலாயுதம் படங்கள்தான் ரிலிஸுக்கு கன்பார்ம் ஆகியிருக்கிறது. சூர்யாவின் படத்தைப் பார்ப்பதில்தான் நிறைய பேருக்கு எண்ணம்.அப்புறம்தான் விஜய் படம். ஒரு வேளை 7ம் அறிவு வெற்றி பெற்று , வேலாயுதம் தோல்வி அடைந்தால் நிச்சயம் சூர்யாவின் மார்க்கெட் இன்னும் எகிறும். விஜய் தனது ரூட்டை மாற்ற வேண்டும்.

லேட்டஸ்ட் டெக்னாலஜியில் 3D தொழில் நுட்பத்தைக் கொண்டு சென்னை-மாயாஜாலில் நடத்திய ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நினைத்தமாதிரி
வெற்றியடையவில்லை. காரணங்கள் நிறைய உள்ளன..சொன்ன நாளில் நடத்தாமல் சில நாட்கள் கழித்து நடத்தியது, ஒளிபரப்பும் உரிமையை திடீரென்று விஜய் டி.வியிடமிருந்து , ஜெயா டி.விக்கு கைமாற்றியது என இன்னும் நிறைய. இப்போது கோயம்புத்தூரில் நடத்த வேண்டிய நிகழ்ச்சியைவேறு தாமதப்படுத்தியிருக்கிறார்கள்.. என்ன இருந்தாலும் நம்ம இசைப்புயல் ரஹ்மானை மிஞ்ச முடியுமா?
####################################################
விலைவாசி??:
 
சில மாதங்களுக்கு முன்பு நான் வாங்கிய மருந்து, மாத்திரைகள், இப்போது வாங்கிய போது அதிகபட்சமாக விலையேற்றப்பட்டிருந்தது தெரிந்தது. அதனைப்  பற்றிக் கேட்ட போது மருந்துப் பொருட்கள் மீதான் வாட் வரி ஏற்றியதால்தான் இந்த விலையேற்றம் என்று மெடிக்கல் உரிமையாளர்கள் சொன்னார்கள். 25 ரூபாய்க்கு விற்ற பட்டர் ஸ்காட்ஸ் ஐஸ் கிரிம் திடிரென்று ஏற்றிய விலையினால் இப்போது அதன் விலை 30 ரூபாய். பெட்ரோலின் விலை லிட்டருக்கு 70 ரூபாய். அடுத்த வருட முடிவிற்குள் நிச்சயம் பெட்ரோலின் விலை 85 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

மூன்று வருடத்திற்க்கு முன்பு ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்வது மிக அதிகபட்சமாக இருந்தது. ஆனால் இப்போது 100 ரூபாய் நினைத்த மாத்திரித்தில் பாக்கெட்டை விட்டு சென்று விடுகிறது. விலைவாசியை நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஊதியத்திலும் ஏற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் மகிழ்ச்சியடைவர். ஆனால் அது மட்டும் ஏன் நடக்கவே இல்லை...?  எங்கேயோ தப்பு இருக்குதுங்க...!
####################################################

நூறு கோடி மரங்கள் வளர்ப்போம் என்று தனது பிறந்த நாளில் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம். பணத்தின் தேவை அதிகமானதால் இருக்கின்ற விளை நிலங்களை ப்ளாட்டுகளாக மாற்றி,  சுற்றுப்புற சூழ்நிலையை மேலும் மேலும் வெப்பப்படுத்தி வரும் மக்களுக்கு அவரின் அழைப்பு புரியுமா? அவர் சொன்னதைப் போல் செய்தால் மீண்டும் ஒரு பசுமையான இந்தியாவை நாம் பார்க்கலாம். But இது நடக்குமா?
******************************************************









2 comments:

தேன் நிலா said...

பல்சுவை பதிவுக்கு நன்றி நண்பரே.. கொஞ்சம் அரசியல், கொஞ்சம் ஜனநாயம், கொஞ்சம் பொதுசேவை, கொஞ்சம் சினிமா, ரசிக்கும்படி இருந்துது பதிவு. வாழ்த்துக்கள்..!!

RAMA RAVI (RAMVI) said...

நல்ல அலசல் குணா.பகிர்வுக்கு நன்றி.
கொஞ்சம் நாட்களாக உங்க பதிவுகளை பார்க்க முடிவதில்லையே,என்ன ஆச்சு?

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...