Friday, September 02, 2011

தெரிஞ்சுக்கோங்க - பேட்டரியில் இயங்கும் இஸ்திரி பெட்டி(Iron Box)

                * பேட்டரியில் இயங்கும் 
                 இஸ்திரி பெட்டி(Iron Box) *

த்தனையோ எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தற்போது பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மிக முக்கியமான சாதனமான அயர்ன் பாக்ஸ் என்றழைக்கப்படும் இஸ்திரி பெட்டி மட்டும் இன்னமும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தான் தயாரிக்கப்படுகின்றது. அதை மட்டும் ஏன் பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கவில்லை? என்ற கேள்வி எனக்குள் நிறைய தடவை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் அயர்ன் பாக்ஸ் விற்பனைக்கு வந்திருக்கிறது. இங்கல்ல. வெளிநாடுகளில் தான். இதன் பெயர் Playazon என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். விலை கொஞ்சம் அதிகம்தான்.


இந்த அயர்ன் பாக்ஸ் 12V , 14.5V அல்லது 18V பேட்டரியால் இயங்கும். இந்த பேட்டரியால் சூடாகும் அயர்ன் பாக்ஸைக் கொண்டு  சுமார் 1 அல்லது 4 நிமிடங்கள் வரை(அவரவர் வசதிற்கேப்ப நிமிடங்களை மாற்றிக் கொள்ளலாம்) துணிகளை அயர்ன் பண்ணலாம்.

############################################################

                    * எப்படி தூங்குவாங்க? *

மலையேறுபவர்கள் பற்றி நீங்கள் ரொம்பவே அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய செங்குத்தான மலைகளில் ஏறுபவர்கள் அதன் உச்சியை தொடுவதற்கு பல நாட்கள் கூடி ஆவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓய்வெடுக்க அல்லது தூங்குவதற்கு என்ன செய்வார்கள் என நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா? நாம் தந்திருக்கும் படங்களை பாருங்கள் அப்போது புரியும் செங்குத்தான மலைகளில் நாட்கணக்காக ஏறுபவர்கள் எங்கே எப்படி தூங்குவார்கள் என்று.


****************************************************

3 comments:

Sowkarthika said...

good information...

கவி அழகன் said...

அருமையான பதிவு

N.H. Narasimma Prasad said...

அவ்வளவு உயரமான மலையின் நடுவில் படுக்கை விரித்துப் படுத்தால் எப்படி தூக்கம் வரும்? ரொம்பவே தைரியசாலிகள் இந்த மலையேறுபவர்கள்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...