Thursday, September 22, 2011

கேள்வி-பதில் : 9

1.கேள்வி: சாப்பிடுவதற்கு கை அல்லது ஸ்பூன் போன்றவை இருக்க, இந்த சீனா, ஜப்பான்காரர்களுக்கு மட்டும் ஸ்டிரா போன்ற இரு குச்சிகளால் சாப்பிடும் விசித்திர வழக்கம் எப்படி வந்தது?
[அறிவு,கரூர்]


பதில்:
உலகம் முழுவதும், லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன் மனிதன் கையைப் பயன்படுத்தியேதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இறைச்சியை வெட்டியெடுத்துச் சாப்பிட ஸ்பூன், முள் கரண்டி போன்ற உபகரணங்கள் கற்காலத்திலேயே ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்! அப்போதே சீனர்களும் ஜப்பானியர்களும் மரத்தால் ஆன முள் கரண்டியும் ஸ்பூனும் உபயோகித்தார்கள். ஏனோ அது சுருங்கி, பிற்பாடு இரு குச்சிகளாக மாறி விட்டன! இது இன்றைய, நேற்றைய பழக்கமல்ல! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ங்க் பரம்பரை சீனாவின் வடமேற்குப் பகுதியை ஆண்ட போது, இரு குச்சிகள்(Chop Sticks) பரவலாக பழக்கத்தில் இருந்தன. கி.மு. 1300-ம் ஆண்டைச் சேர்ந்த சில "சாப்ஸ்டிக்ஸ்"களை சீனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.குழந்தையிலிருந்தே பழகினால் எதுவும் சுலபம்! எவ்வளவு அலட்சியமாக நாம் ரசம்,பாயாசத்தை வாழையிலையிலிருந்து கையால் வழித்தெடுத்து சாப்பிடுகிறோம்! அதுவே ஓர் அமெரிக்கரை அப்படிச் சாப்பிடச் சொல்லுங்கள். திணறி, தவித்துப் போய்விடுவர்.


2.கேள்வி: ஜப்பானில் நாட்டு மக்கள் மட்டும் நூறு வருஷங்களுக்கு மேல் வாழ்வதற்கு காரணம் என்ன?
[மது, ஈரோடு]


பதில்:
ஜப்பானில், எல்லா இடங்களிலும் அப்படியில்லை. அங்குள்ள சில தீவுகளில் வசிக்கும் மக்களிடையே மட்டும் '100வயது மனிதர்கள்" நிறைய உண்டு. 450 சதுர மைல் பரப்புள்ள ஒகினவா என்கிற தீவில் மட்டும் 600க்கும் மேற்பட்ட 100வயது மக்கள் உண்டு!.
காரணம், அவர்களுடைய 'டயட்' தான். மொஷுகு என்னும் கடல்பாசி, டோஃபு, ஷோயா, ஷையிகுவாஸா என்னும் ஒருவித ஆரஞ்சுப் பழம் போன்றவை அடங்கிய 'டயட்'. கடல்பாசி உணவு வயதாவதைத் தடுக்கும் என்றும், அவாமோரி என்கிற அவர்களுடைய லோக்கல் மதுவில், தோலை இளமையாக வைத்திருக்கும் கெமிக்கல்கள் இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். 1 வருஷம் 'ஒகினாவா'வில் தங்கினால் இளமையோடு திரும்பலாம். நம்மூர் நடிக-நடிகையர் கவனிக்க.

3.மொகலாயச் சக்கரவர்த்தி ஜகாங்கீர் பற்றி சில விசயங்கள் சொல்லவும்.
[செந்தில்,வெள்ளகோவில்]

பதில்:
ஜகாங்கீருக்கு 20 மனைவிகளும், 300க்கும் மேற்பட்ட அழகிகள் அடங்கிய அந்தப்புரமும் உண்டு! பாதுஷா, "ஓபியம்" போதைக்கு அடிமையானவர். எதிரிகளுக்கென்று விதவிதமான சித்ரவதைகளை நுணுக்கமாகக் கண்டுபிடித்த சாடிஸ்ட் அவர். தன் மகன் குஸ்ரூவையே குரூரமாகச் சித்ரவதை செய்து கொன்றவர்.

4.கேள்வி:பெண்ணின் உண்மையான அழகு எங்கு இருக்கிறது?
[சுரேஸ், கோவை]


பதில்: ஆணின் மூளையில்தான்


5.கேள்வி: ஒரு ஜோக், ப்ளீஸ்.

பதில்:
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

*****************************************************

5 comments:

RAMVI said...

அனைத்து பதில்களும் அருமை. 4வது பதில் அற்புதம்.

இராஜராஜேஸ்வரி said...

அனைத்து பதில்களும் அருமை.

சத்ரியன் said...

நான்காவது கேள்விக்கான பதில் நச்!
( ஓஷோ அதைத் தான் சொல்வார்)

Ramani said...

கேள்வியும் பதிலும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...