Friday, September 16, 2011

மற்றவை - விமர்சனம்: எங்கேயும் எப்போதும்

         * எங்கேயும் எப்போதும் -  விமர்சனம் *

மிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் பேசப்படுகின்ற இயக்குனர் A.R.முருகதாஸ், ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் உடன் இணைந்து தயாரித்த முதல் படம். படத்தின் கதை இதுதான்.

சராசரி பெண்ணான அமுதா(அனன்யா) ஒரு இண்டர்வியு அட்டெண்ட் பண்ணுவதற்காக முதன் முதலில் சென்னைக்கு வரும் திருச்சி வாசி பெண். சென்னை வந்திறங்கியதும் தன் அக்காவின் வீட்டிற்குச் செல்வதற்காக அக்காவிற்கு போன் பண்ண, அக்காவால் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை. இண்டர்வியு நடக்கும் கம்பெனிக்கு செல்ல வழி தெரியாத அமுதாவிற்கு, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் கௌதம்(சர்வானந்த்) உதவி செய்கிறார். அமுதாவின் வெகுளித்தனமும், கௌதமின் அனுசரித்துப் போகும் பாங்கும் ஒரு வித ஈர்ப்பை இருவருக்குள்ளும் நிகழ்த்துகிறது. பின்பு இண்டர்வியு முடிந்து, அமுதா அவரது ஊருக்குச் சென்று விடுகிறார். கௌதம் பற்றிய நினைப்பு மெல்ல காதலாக மாற அவரைப் பார்க்க அமுதா ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ்ஸில் திரும்ப சென்னைக்கு  பயணமாகிறார். அதே போல் சென்னையில் இருக்கும் கௌதமிற்கும் அமுதாவின் மீதான காதலில் அவரைப் பார்க்க திருச்சிக்கு ஒரு S.E.T.C பேருந்தில் பயணமாகிறார்.


டிப்ளமோ படித்து விட்டு திருச்சியில் ஒரு ஒர்க் ஸாப்பில் மெக்கானிக்காக கதிரேசன்(ஜெய்) வேலை செய்கிறார்.அநியாயத்துக்கு நல்லவர். அவருக்கு எதிர் வீட்டில் வசிக்கும் மணி மேகலை(அஞ்சலி) மீது ஒரு கண். எதிர் வீட்டில் வசிக்கும் மணிமேகலை ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக வேலை பார்க்கிறார். டாமினேட் செய்யும் பேர்வழி இவர். வயதில் ஜெய்-யை விட நான்கு மாதம் மூத்தவர். அநியாயத்துக்கு கதிரேசனை டாமினேட் செய்கிறார். அவரை காதலிக்கவும் செய்கிறார். திருமணம் செய்து கொள்வதற்காக ஜெய்-யின் தாயாரைப் பார்க்க இருவரும், அனன்யா செல்லும் அதே பஸ்ஸில் பயணம் செய்கின்றனர். வழியில் சந்தர்ப்ப வசத்தால் சர்வா பயணிக்கும் பஸ்ஸும், ஜெய், அஞ்சலி, அனன்யா பயணிக்கும் பஸ்ஸும் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகிறது.

இறுதியில் சர்வா, அனன்யா காதல் என்னவாயிற்று? அஞ்சலியும், ஜெய்யும் அம்மாவைப் பார்த்தார்களா? அவர்களின் திருமணம் நடந்ததா? என்பதற்கான
பதிலை வெண் திரையில் காண்க!.
யதார்த்தமும், கொஞ்சம் வெகுளித்தனமும் கொண்ட பெண்ணாக அனன்யா நடித்திருக்கிறார். அவருக்கும் சர்வாவிற்கும் நடக்கும் சம்பவங்கள் தமிழ் சினிமாவிற்கு புதுசு. ரொம்ப யதார்த்தம். இருவரும் ரசிக்க வைக்கின்றனர். புதுமுகம் சர்வா, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞனாக வருகிறார். கேரக்டருக்கு மிக நல்ல பொருத்தம். அனன்யா செய்யும் செயல்களைக் கண்டு அனுசரித்துப் போகும் காட்சிகள் நிச்சயம் பெண்களுக்குப் பிடிக்கும். அருமையான கேரக்டர் தேர்வு. க்ளைமாக்சில் அனன்யாவைப் பார்த்து அவர் அழும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.


ஜெய்-அஞ்சலி ஜோடியும் இவர்களுக்கு சளைத்தவர்களல்ல. மிக பாந்தமான அடக்கமான இளைஞனாக வரும் ஜெய்யின் நடிப்பு பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். அஞ்சலியைக் காதலிப்பதற்காக ஒவ்வொரு முறை அஞ்சலியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அதன்படி அவர் நடந்து கொள்ளும் காட்சிகள் மிக்க அழகு. சுப்ரமணிக்கு அப்புறம் ஜெய்-க்கு ஒரு நல்ல கேரக்டர்.

அங்காடித் தெருவில் கலக்கிய அஞ்சலி இதிலும் அம்சமாக நடித்திருக்கிறார். எல்லோரையும் டாமினேட் செய்யும் கேரக்டர் கன கச்சிதம். அதிலும் ஜெய்யை அவர் ஆளும் ஒவ்வொரு சீனும் காமெடி கலந்த ரொமாண்டிக் Flick. இறுதிக் காட்சியில் அஞ்சலியின் தேர்ந்த நடிப்பு நன்றாகத் தெரிகிறது.
படத்தில் இருவரின் கதைகளுக்கு இடையே ஒரு கல்லூரி ஜோடிக்கும் பஸ்சில் ஒரு மெல்லிய ஈர்ப்பு வருகிறது. அந்தக் காட்சிகளும் ரசிக்கும்படியாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விசயம் கதைதான். அன்றாடம் நடக்கும் ஒரு சம்பவத்தைக் கொண்டு , எக்ஸெலண்டான திரைக்கதையில், பார்ப்பவர்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். தொய்வில்லாத, தெளிவான திரைக்கதை, கதையோடு ஒட்டிய மெல்லிய நகைச்சுவைகள், அதனுடன் மெல்ல அரும்பும் காதல் உணர்வு அனைத்தையும் இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார். நிச்சயம் இயக்குனருக்கு இந்தப் படம் ஒரு வெற்றி மகுடம். சர்வா தனது ஆபிஸ் கேப்-ல் அனன்யாவுடன் செல்வது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த பஸ் ஆபிஸ் கேப் போலத் தெரியவில்லை. டூரிஸ்ட் பஸ் போல இருக்கிறது. இயக்குனர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.

புதுமுக இசையமைப்பாளர் C.சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கோவிந்தா..மாசமா...சொட்ட சொட்ட போன்ற பாடல்களை இனி
அனைத்து டி.வி. சேனல்களிலும் சிலவாரங்களுக்கு அடிக்கடி பார்க்கலாம். காட்சியமைப்பும் அருமை. ஜெய்-அஞ்சலி வரும் காட்சிகளிலும், சர்வா- அனன்யா வரும் காட்சிகளிலும் பிண்ணனி இசையில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ஒளிப்பதிவு. முக்கால்வாசிப்படமும் ஏதோவொரு பயணத்தில்தான் நடக்கிறது. அத்தனைகாட்சிகளிலும் ஒளிப்பதிவு அம்சம்.  சக மனிதர்கள் போல சர்வா, அனன்யா, ஜெய், அஞ்சலி அனைவரையும் மிகையில்லாத மேக்கப்பில் காட்டியததற்காக ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டலாம். படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸ் அனைவரும் தானும் படத்துடன் பயணம் செல்வது போலத் தோன்றுவதை உணரலாம்.

இப்படி ஒரு நல்ல படத்தைத் தயாரித்த A.R.முருகதாஸ்-ஐ நிச்சயம் பாராட்டலாம். படம் எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது,  ஒரு நல்ல படைப்பைத் தந்ததன் மூலம் தான் ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.

எங்கேயும் எப்போதும் - யதார்த்தமான படம். அனைவருக்கும் ஒரு பாடம்.

***************************************************







8 comments:

ADMIN said...

நல்லாருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம்........!

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் விரிவாக அருமையாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

கவி அழகன் said...

விமர்சனம் கவருது நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

நண்பா உங்கள் தளத்துக்கு அடிக்கடி வர முடியா விட்டாலும் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வருவேன்

வேலு எழிலரசன் said...

என் ஷார்ட் பிலிம் கதையும் இதுவும் கொஞ்சம் ஒத்து போகுது.

Anonymous said...

விமர்சனம் அருமை... பகிர்வுக்கு நன்றி...

ரெவெரி
http://reverienreality.blogspot.com/

vinu said...

//// ஜெய்-யின் தாயாரைப் பார்க்க இருவரும், அனன்யா செல்லும் அதே பஸ்ஸில் பயணம் செய்கின்றனர். வழியில் சந்தர்ப்ப வசத்தால் சர்வா பயணிக்கும் பஸ்ஸும், ஜெய், அஞ்சலி, அனன்யா பயணிக்கும் பஸ்ஸும் பயங்கரமாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகிறது./////

tHIS IS WRONG ............... JAI, ANJALI, SARVA ONLY TRAVELL TOGETHER..... ANANYAA IN THE OPPOSITE BUS

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...