* புதிய டெக்னாலஜி - ஆட்டோமேட்டிக் பிரேக் *
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. வேகமாக காரில் செல்லும்போது திடீரென யாராவது குறுக்கே வந்துவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது... ஆனால், கார் மட்டும் ஓடி மோதி விபத்தை ஏற்படுத்திவிடும். சிலர், பரபரப்பில் பிரேக்குக்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்துவிடுவார்கள். சில நேரங்களில் பிரேக் பெயிலியர் ஆகிவிடும். ‘நான் எவ்வளவோ பிரேக்கை அழுத்தினேன். ஆனா, வண்டி நிக்கலையே’ என்று நொந்துகொள்பவர்களும் உண்டு.
விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய டெக்னாலஜி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி, காரின் குறுக்கே யாராவது வந்தால் பிரேக்கை அழுத்த வேண்டி இருக்காது. கார் தானாகவே நின்று விடும். இந்த புதிய டெக்னாலஜி யை தனது எஸ்60, வி60, எக்ஸ்சி60 ஆகிய கார்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம்.

வால்வோ நிறுவன ஆராய்ச்சியாளர்களின் சாதனை கண்டுபிடிப்பு இது. இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்ததாவது: விபத்து மற்றும் உயிர் பலியை தடுக்கும் வகையில் கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள கேமரா மற்றும் சென்சார் கருவி, கார் வேகமாக சென்று கொண்டிருந்தாலும் குறுக்கீடு ஏதாவது வந்தால் தானாகவே இன்ஜினை ஆப் செய்துவிடும். ரேடார்களின் துணையோடு இது சாத்தியமாகும். ரேடார் சமிக்ஞைகளை பெற்றதும் சென்சார் மூலம் காரில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பி ஓட்டுனரை எச்சரிக்கும். காரும் தானாக நின்றுவிடும்.

இந்த செயல்பாடு இரவு மற்றும் வானிலை பாதிக்கப்படும் நேரங்களில் செயல்படாது. வாகனங்களில் எத்தகைய முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டாலும் டிரைவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கு. இந்த வீடியோவைப் பார்க்கும் போது..
*****************************************************
8 comments:
நல்லதொரு பதிவு.. வாழ்த்துக்கள்..!
இங்கேயும் வந்துட்டு போங்க தங்கம்பழனி
கார் பற்றிய அருமையான தகவல்களுக்கு நன்றி.
நல்ல பதிவு.
அருமையான தகவல். நம்ப ஊருக்குகெல்லாம் வர இன்னும் எத்தனை வருஷங்கள் ஆகுமோ தெரியவில்லை.நல்ல பதிவு குணா.
பகிர்வுக்கு நன்றி.
அபூர்வத் தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
புதிய தகவல்.........
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .......
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...