Tuesday, February 21, 2012

தெரிஞ்சுக்கோங்க - மின்மினிப்பூச்சி : சில விசயங்கள்


மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.

 

மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? 


 
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை.

மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

 

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

###################################################################
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற:
விண்டோசில் போல்டர்களை இனி உங்கள் வசதிற்கேற்ப வித விதமான கலர்களில் மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு கீழே தரப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்து அதில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை செய்யவும்.

நான் எனது விண்டோஸ் போல்டர்களின் கலர்களை மாற்றி விட்டேன். பார்க்கவும் அழகாக இருக்கிறது.  நீங்களும் முயற்சி செய்து பாருங்க..

###################################################################

Monday, February 20, 2012

தெரிஞ்சுக்கோங்க - இந்தியாவும் வல்லரசு கனவும்.


சமீபத்தில் ஃஃபேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அதிகமாக ஷேர் பண்ணிய விசயம் இதுதான். படித்து ஷாக்காகி விட்டேன்.

"பிசினஸ் செய்திருந்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?" என்ற கேள்விதான் இதைப் படித்தபின் எனக்குள் முதலில் வந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!


டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


என்ன நண்பர்களே..படிக்கவே மலைப்பாக இருக்கிறதா?
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.  ஒரு மாநிலத்தில் இருக்கும் அரசியல்வாதியே இவ்வளவு சம்பாதிக்கும் போது, பிற மாநிலத்து அரசியல்வாதிகள் எவ்வளவு சம்பாதித்திருப்பர்!.

இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விசயம். நிச்சயம் இனி இந்தியா எப்போதும்  வல்லரசாக முடியாது. அரசியல்வாதிகள் இன்னும் சம்பாதித்துக் கொண்டேதான் இருப்பர். ஏழை இன்னும் ஏழையாகிக் கொண்டேதான் இருப்பான்(விலை வாசி ஏற்றத்தினால்).கடைசிவரை ரேஷன் கடைதான் அவனுக்கு சூப்பர் மார்க்கெட்.

சினிமாவில் வரும் சூப்பர் ஹீரோ மாதிரி நிஜத்திலும் யாராவது வந்து நேர்மையாக அரசியல் செய்தால் மட்டுமே நம் நாடு உருப்படும். ஆனால் இந்த எண்ணமும் பகல் கனவு காண்பது போலத்தான்.

**************************************************************


Sunday, February 19, 2012

மற்றவை - காதலில் சொதப்புவது எப்படி:விமர்சனம்

                * காதலில் சொதப்புவது எப்படி *

 
ஒரு குறும்பட இயக்குனாராக வெற்றி பெற்ற பாலாஜி மோகன் முதன் முதலில் கொடுத்திருக்கும் படம் இது. தமிழ் , தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் ரிலிஸாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது?..தொடர்ந்து படியுங்கள்.


ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சித்தார்த்தும், அமலாபாலும் காதலிக்கிறார்கள். இடையில் இவர்களுக்குள் பிரேக் அப் ஆகி விடுகிறது. அது ஏன் என்று சித்தார்த் நம்மிடம் புலம்பித் தள்ளுகிறார். கடைசியில் திரும்பவும் சேர்ந்தார்களா? சேர்ந்தார்கள்(இதுதான் படத்தின் கரு). எப்படி சேர்ந்தார்கள் என்பதை வெள்ளித்திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


சித்தார்த் நடிப்பு:

யப்பா! என்ன ஒரு க்யூட்டான நடிப்பு. பாய்ஸில் பார்த்த அதே அப்பாவித்தன முகபாவம்,அசல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியே இருக்கிறார். என்ன நடிப்பு!. பாராட்ட நினைத்தால் படம் முழுவதும் இவரின் நடிப்பைப் பாராட்டலாம். அமலாபாலிடம் போன் நம்பர் கேட்பதற்காக இவர் செய்யும் முயற்சிகள், அப்புறம் அவ்வப்போது அமலாபாலிடம் போடும் குட்டி குட்டி சண்டைகள். அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. பிரமாதம் சித்தார்த்.


அமலாபாலின் நடிப்பு: 
 அமலாபால் என்றாலே அவரின் கண்கள் நிச்சயம் ஞாபகத்திற்கு வரும். படம் முழுவதும் க்யூட்டாகவும் ஹோம்லியாகவும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை மாடர்ன் டிரெஸ்ஸை விட சுடிதார், சேலை, தாவணி போன்ற உடைகளில் அமலாபால் ரொம்ப அழகாக இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் ஹேர் ஸ்டைலும் வெரி நைஸ். படத்தில் இவரின் நடிப்பைப் பற்றி சொல்வதென்றால் ஒன்றே ஒன்று சொல்லலாம். படம் பார்க்கும் போது சித்தார்த்தும், அமலாபாலும் நிஜமான காதலர்கள் போலத்தான் தெரிகிறார்கள். நிஜமான காதலர்கள் சண்டை போடுவது போலத்தான் தெரிகிறது. அமலாபாலின் கண்கள் கூட நிறைய இடங்களில் நடித்திருக்கிறது. மொத்தத்தில் மைனா, தெய்வதிருமகளுக்குப் பிறகு இந்தப் படம் அமலாபாலுக்கு பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


இயக்குனரின் திறமை:

சென்னையில் உள்ள S.S.N Engg கல்லூரியில் என்ஜினியரிங் படித்து விட்டு, ரயில்வே துறையில் கிடைத்த வேலையையும் விட்டு விட்டு, சினிமாவின் மீதான ஈர்ப்பில் அத்துறைக்கு வந்து, குளிர்100, துரோகி போன்ற படங்களில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டே, கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனரில் கலந்து , போட்டியில் மூன்றாவதாக வெற்றி பெற்று , இன்று ஒரு அழகான ரொமாண்டிக் காமெடி படத்தை தந்த இயக்குனர் பாலாஜி மோகனுக்கு ஹேட்ஸ் ஆஃப்.  இவர் கொடுத்த இந்த வெற்றியின் மூலம் குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இனி தமிழ் சினிமா உலகம் கதவு திறக்கும். அதற்காகவே மறுபடியும் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.


இன்றைய இளைய தலைமுறைகளின் காதல்களை யதார்த்தமாகவும், அதே நேரத்தில் ரசிக்கும் விதத்தில் காமெடி கலந்தும் ஒரு காக்டெயில் தந்திருக்கிறார். படம் பார்க்கும் போது நிச்சயம் புரியும். படத்தில் வரும் சித்தார்த், "அண்ணே" என்றழைத்த பெண்ணையும் காதலிப்பதாக சொல்லும் சித்தார்த் நண்பன், அப்புறம் அந்தக் குண்டு நண்பன்(அடிக்கடி பெண்களிடன் அறை வாங்குவார்.ஆனால் எல்லா லவ்வர்ஸ்களுக்கும் ஐடியா கொடுப்பார்) அனைவரும் ரசிக்கவும் வைக்கின்றனர். சிரிக்கவும் வைக்கின்றனர்., சித்தார்த் அப்பா, அம்மா, அமலாபாலின் அப்பா,அம்மா அவர்களின் காதல் எபிஷோட் நன்றாக இருக்கிறது. அதிலும் ஒரு யூத்புல்னஸ் தெரிகிறது. படத்தில் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட் வசனங்கள்தான் வெரி சூப்பர்ப். எக்ஸெலண்ட் ஷ்கிரீன் ப்ளே..வெல்டன் பாலாஜி மோகன்.

இசை:
எஸ்.தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் படி இல்லை. இருப்பினும் பிண்ணனி இசையால் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். வெல்டன் ஜாப்.


ஒளிப்பதிவு:
நீரவ்ஷாவின் இணைதயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் இது. படம் முழுவதும் அழகழகான ப்ரேம்களை கொடுத்திருக்கிறார். அமலாபாலை ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார். படம் முழுவதும் யூத்புல்னஸ் தெரிகிறது.

காதலில் சொதப்புவது எப்படி - A Wonderful romantic comedy film.Must watch it.

**********************************************************

மற்றவை - முப்பொழுதும் உன் கற்பனைகள்:விமர்சனம்


          * முப்பொழுதும் உன் கற்பனைகள் *
 
சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரியும் ஸ்மார்ட் இளைஞரான அதர்வாவை சுற்றி பெண்கள் கூட்டம். வலிய வந்து அதர்வா மீதான காதலை சொல்லும் ஒர் பெண்ணிடம் , தான் சாரு என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்கிறார். "மேலும் அவளிடம் பழகினால், பெண் என்பதையும் மறந்து நீயும் அவளை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்" என்று தன் காதலியைப் பற்றி  சொல்கிறார். வார விடுமுறை நாட்களை பெங்களூரில் இருக்கும் காதலியுடன் கழிக்கிறார். இந்நிலையில் அதர்வா பணிபுரியும் கம்பெனிக்கு புதிய சி.இ.ஓ ஆக அமெரிக்காவிலிருந்து அமலாபால் (இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் முடித்து விட்டு ) வருகிறார். அதர்வாவைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். ஏனெனில் அதர்வாவிடம் பழகிய பெண் அவர்தான். அப்படி இருக்கையில் பெங்களூரில் இருக்கும் அதர்வா காதலி யார்? என்ற குழப்பதுடன் இருக்கிறார். குழப்பத்துடன் அவர் காதலி குடியிருக்கும் பெங்களூர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு அதிர்ச்சியான விசயங்கள் தெரியவருகிறது.அது என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதர்வாவின் நடிப்பு:
பாணா காத்தாடியில் இருந்த அதர்வாவை விட இதில் ஆள் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சண்டைக் காட்சிகளில் நிறைய உழைத்திருக்கிறார். அடுத்து வரப்போகும் பாலாவின் படத்தில் இன்னும் நிறைய திறமையை எதிர்பார்க்கலாம்.

அமலாபாலின் நடிப்பு:
அதர்வாவின் கற்பனைக் காதலி சாருவாகவும், சாப்ட்வேர் கம்பெனி சி.இ.ஓ லதாவாகவும் இரு வேறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதர்வாவின் காதலியாக வரும் காட்சிகளில் அதர்வாவுக்கும் அமலாபாலுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. சி.இ.ஓ கேரக்டர் அவ்வளவாக ஒட்ட வில்லை.

இயக்குனரின் திறமை:
மேக்கிங்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆனால் அதர்வா கொலை செய்ய வரும் காட்சிகளில் ஏன் முகத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்? வித்தியாசமான மேக்கிங்க் தருவதாக நினைத்துக் கொண்டு நிறைய குழப்பி இருக்கிறார். தொடர்ச்சியாக பாடல் காட்சிகள் வருவதை தவிர்த்திருக்கலாம். ப்ளாஸ்பேக் காட்சிகளில் வரும் அதர்வாவின் அம்மா நடிப்பும், காட்சியமைப்பும் நன்றாக உள்ளது.

இசை:
ஜி.வி.ப்ரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ஓ.கே. மற்றபடி படத்திற்கு தேவையான பிண்ணனி இசையை கொடுத்திருக்கிறார். பாராட்டும்படி  இல்லை.

ஒளிப்பதிவு:
படத்தில் பாராட்டும்படி இருப்பது ஒளிப்பதிவுதான். நிறைய காட்சிகளில் அழகான ப்ரேம்களை ஒளிப்பதிவாளர் தந்திருக்கிறார்.

நாசர், ஜெயப்ரகாஷ்,அனுபமா குமார் போன்றோரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. சந்தானம் வரும் காட்சிகளில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் சிரிக்க முடிகிறது.

முப்பொழுதும் உன் கற்பனைகள - ஆவரேஜ்


*****************************************************

Thursday, February 16, 2012

மற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்

குறும்படம் 1:
நான் பார்த்த வரை, காதல் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் இங்கு எடுக்கின்றனர். காரணம் கற்பனை செய்து காட்சிகளை அமைப்பது மிக மிக எளிது. இருப்பினும் ஒரு சில குறும்பட இயக்குனர்கள் வித்தியாசமான கதை கொண்ட குறும்படங்களையும் எடுக்கின்றனர். அந்த வகையில் குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள எனது அலுவலக நண்பன் "எழிலரசன்", முதன் முதலில் எடுத்த குறும்படம் இது.

படத்தின் கரு:

வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் மனநிலை, செல்வந்தர்களின் மனநிலையை விட எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் படம் இது.

இந்தப் படத்தில் நடித்துள்ள குப்பை பொறுக்கும் சிறுவன், நிஜத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறான். செல்வந்தர்கள் பெருமளவில் வசிக்கும் சென்னை-அடையாறின் தெருக்களில்தான் இந்தச் சிறுவன் தினமும் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நான் கூட பல முறை பார்த்திருக்கிறேன்.

படத்தில் எனக்கு பிடித்த காட்சி:

தன் மகனிடம், ஒரு பிச்சைக்கார சிறுவன்  விளையாடிக் கொண்டிருப்பதை கூட பொறுக்காத ஒரு செல்வந்தரின் பேக்கை திருடர்கள் திருடிக் கொண்டு போக எத்தனிக்கையில், அவர்களின் பைக்கின் குறுக்கே வந்து நின்று கொண்டு தடுக்கும் இந்தச் சிறுவனை திருடர்கள் இடித்து தள்ளி விட்டு ஓடுகின்றனர். அப்போது,  திருடப்பட்ட பேக்கில் இருந்த பல ருபாய் நோட்டுக்கள் நடு ரோட்டில் சிதறிக் கிடக்கின்றன. அந்தச் சிறுவன் அதனை எடுத்து, அந்த செல்வந்தரிடம் காட்டி விட்டு  உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை மெளனமாக எடுத்துரைத்து விட்டு, அடிபட்ட காலுடன், தன் வழியே நடந்து போகின்றான்.

படத்தின் ப்ளஸ்:

* படத்தின் கருவும், க்ளைமாக்ஸ் காட்சியும், அதன் பிண்ணணியில் வரும்  
   இசையும்.

*வசனங்களை குறைவாக அமைத்து இசையின் மூலம் காட்சியை நகர்த்தியது.

இப்படி ஒரு கருவை எடுத்து , அதனை காட்சிப்படுத்திய நண்பன் எழிலரசனுக்கு எனது பாராட்டுக்கள்.

படத்தின் மைனஸ்:

அபார்மெண்ட் சிறுவர்களின் ஆரம்பகாட்சிகள் முழுமை பெறாமல் எடுத்திருப்பது நன்றாகவே தெருகிறது. அப்புறம் அபார்மெண்ட் சிறுவர்கள் பேசிக்கொள்வது செயற்கையாக தெரிகிறது. இருப்பினும் முதல் குறும்படம் என்ற காரணத்தினால் , இது போன்ற குறைகளை விட்டு விடலாம். அடுத்த படத்தில் இது போன்ற குறைகள் இல்லாமல் இருத்தல் நலம்.

Video:



 ==================================================
 குறும்படம் 2 : லவ் புக்

வசனமே இல்லாமல் சுமார் 20 நிமிடங்களில் ஒரு சுவாரசியமான குறும்படத்தை யாரேனும் தர முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கின்ற 
வகையில் அமைந்திருக்கிறது "லவ் புக்" என்ற இந்த குறும்படம். சிறந்த குறும்படமாகவும் அவார்ட் வாங்கியிருக்கிறது. அவார்ட் வாங்குவதற்கேற்ற 
குறும்படம்தான். இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ் மியூசிக் தான். ஒரு சில காட்சிகள் சாதாரணமாக அமைந்திருந்தாலும் மியூசிக்+ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல அவுட்புட்டை கொடுத்திருக்கிறது.  
Video:



======================================================

 குறும்படம் 2 : கண்ணாமூச்சி                                                                                            

ஐடி துறையில் பணிபுரிபவர்கள், கோவா படத்தைப் பார்த்து விட்டு அதே சாயலில்,  எடுத்த முதல் குறும்படம் இது. படத்தில் வரும் ஹீரோ ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படி உள்ளது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. காதல்+காமெடி கலந்த படம் இது.  Hope you guys enjoy with it.

Video:




********************************************************

Wednesday, February 15, 2012

தெரிஞ்சுக்கோங்க - பிளாக் விருது பெற்ற பதிவர்கள்

இப்போதெல்லாம் பதிவுலகத்தில் பதிவு எழுதுபவர்கள் நிறைய பேர் ஏதோ ஒரு காரணத்தால் அடிக்கடி பதிவு எழுதுவதில்லை என்று கரிசனப்பட்டு, "டல்லடிக்கும் பதிவுலகம்" என்ற தலைப்பில் இந்திரா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனை ஆதரித்து தோழி ரமாரவி தனது பதிவிலும் குறிப்பிட்டிருந்தார். நானும் அவர்கள் சொல்வது போல, சில நாட்கள் பதிவு எழுதுவதில்லை.என்ன செய்வது மென்பொருள் துறையில் இருப்பதால் சில சமயங்கள் இப்படி நேர்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.




எனது பதிவுலக பெங்களூர் தோழியான, ரமாரவி அவர்கள் எனது "இக்கரையும் அக்கரையும்" வலைப்பூவிற்கு ஜெர்மனிய விருதான "லிப்ஸ்டர் பிளாக்" விருது கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.  ஈகோயிஷம் நிறைந்த இந்த உலகத்தில், இது போன்ற ஊக்குவிப்பு விசயங்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த ஊக்குவிப்பு விசயங்கள் தான் எழுதுபவர்களை இன்னும் நிறைய நல்ல நல்ல பதிவுகளை எழுத தூண்டும். தோழிக்கு மிக்க நன்றி.



மேலும் நான், இந்த "லிப்ஸ்டர் பிளாக்" விருதை  மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க சொல்லியிருக்கிறார். அந்த வகையில் என்னை மிகவும் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இந்த விருதுடன் "இன்ட்ரெஸ்டிங்க் ப்ளாக் அவார்ட்" என்ற ஒரு விருதை அளிக்கிறேன்.



1. "காற்றைவிட வேகமானது எண்ணம்." என்ற ஷார்ப்பான மேற்கோள் கொண்டு "மதுரகவி" என்ற வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதி வருகிறார் தோழி ரமாரவி . தனது பதிவுகளை சில வகைகளாக பிரித்து இவர் எழுதி வருகிறார். தெளிவான கருத்தோடு, ரசிக்கும்படியான எழுத்துக்களை வார்த்தைகளாக்கி படிப்பவர்களுக்கு தான் சொல்ல வந்ததை அழகான படங்களுடன், நயமாகவும் இவர் தனது கட்டுரைகளை எழுதுகிறார். இவர் எழுதும்  "கட்டுரைகள்" தான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

2. "வாசிப்பது என்பது சுவாசிப்பது, வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற தனது மன எண்ணத்தை மேற்கோளாக்கி "மணிராஜ்" என்ற வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார் இராஜராஜேஷ்வரி. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்கள் தான் இவரின் வலைப்பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களைப் பற்றி இவர் சொல்லியிருக்கும் விசயங்கள், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு  நிச்சயம் வீட்டில் பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளும் அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் இவர் பதிவில் வரும் ஒவ்வொரு கடவுளின் படங்களும் கொள்ளை அழகு. வித விதமான உருவங்களில் அத்துணை இந்து மத கடவுள்களின் படங்களூம் இவரின் வலைப்பூவில் இருக்கும்.  ஆன்மீக சம்பந்தமான வலைப்பூவில் என்னை மிகவும் கவர்ந்ததில் இதுவும் ஒன்று.

3. "வந்தேமாதரம்"  என்ற தலைப்பில் உள்ள சசிகுமார் என்பவரின் வலைப்பூவில், கம்ப்யூட்டர் பாதுகாப்பு, வித விதமான பயனுள்ள புதிய ஃசாப்ட்வேர்கள், மொபைல் ஃபோனுக்கு பயன்படும் பயனுள்ள அப்ளிகேஷன்கள் போன்ற விசயங்கள்தான் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு புதிய ஃசாப்ட்வேர் உங்களுக்கு தேவைப்பட்டால் இவரது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். நிச்சயம் ஃபிரியாக கிடைக்கும்(எளிமையான தமிழ் விளக்கங்களோடு).

4. மூத்தவரானா திரு.ரமணி அவர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வரா" என்ற தலைப்பில் தனது  வலைப்பூவில் எழுதி வருகிறார். இவருடைய வாழ்வியல் அனுபவக் கட்டுரைகள் ஒரு திரைப்படம் போல் படிப்பவர்களின் கண்முன் காட்சியளிக்கிறது. சமீபத்தில் கூட இவர் எழுதிய "உறவுகள்' என்ற கட்டுரை, மனதை நெகிழ வைத்து விட்டது. நிறைய யோசிக்கவும் வைத்தது. அவருக்கு இந்த விருதை பகிர்வதன் மூலம் எனது பாராட்டுக்களை சமர்பிக்கிறேன்.

5. "தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்." என்ற வாக்கியத்தை கொண்டு நமக்கு தன்னம்பிக்கையையும் தரும் விசயங்களை ஒவ்வொரு பதிவிலும் அலசும், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. நகைச்சுவை உணர்வு கலந்த வரிகளைக் கொண்டுதான் இவர் தன் பதிவை எழுதுவார். அதுதான் அவரது சிறப்பு கூட. பாராட்டுக்கள் நண்பரே!

****************************************************************

Thursday, February 02, 2012

தெரிஞ்சுக்கோங்க - சில விசயங்கள்



எலும்பு முறிவை ஏற்படுத்தும் வயிற்றுப்புண் மருந்து:

வயிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ. என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மசாசிஸ்ட் மருத்துவ ஆய்வுக்குழு கூறியுள்ளது.


இந்த மருந்துகளை சாப்பிடும்போது மெல்ல, மெல்ல எலும்புகளை பலவீனப்படுத்துவதாகவும், அதன் மூலம் 45 வயதிற்கு மேல் எலும்பு முறிவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் பெண்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் பலவீனமாகி விடுவார்கள். அப்போது இந்த மருந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி இடுப்பு எலும்புகளை சேதப்படுத்துவதாகவும் அதன் மூலம் முறிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

*****************************************************

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?:

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள்.


எனவே குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.

அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

**********************************************************
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

நமது முந்தைய தலைமுறைகள் கடைபிடித்து வந்த உணவு உண்ணும் முறையை, தற்போது கடைபிடிக்கப்படுகிறதா? என்று பார்த்தால் இல்லைதான்
என்று சொல்ல முடிகிறது. இருப்பினும் முந்தைய தலைமுறைகள் உணவு உண்ணும் முறையை சொல்லியிருக்கின்றனர். அந்த உண்மைகள் இவைதான்.


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.


மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.ஹ

கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

******************************************************