Wednesday, August 31, 2011

மற்றவை - விமர்சனம்: மங்காத்தா

                    * விமர்சனம் - மங்காத்தா *


சல்-ன் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் அஜித்-ன் படம். 50வது படம் வேறு. எனவே நிறைய எதிர்பார்ப்புக்கள் மங்காத்தா மீது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

கிரிக்கெட் சூதாட்டம்தான் படத்தின் மூலக் கரு. காவல்துறை அதிகாரியான அஜித் வில்லனின் அடியாளைக் காப்பாற்றுவதற்காக போலிஸை சுட்டு கொன்று விடுவதால் 6 மாதம் சஸ்பெண்டில் இருக்கிறார். இந்நிலையில் IPL கிரிக்கெட் சூதாட்டத்திற்காக வில்லனிடத்தில் மொத்தப் பணமும் (சுமார் 500 கோடி) வந்து சேருகிறது. அந்தப் பணத்தை வில்லன் ஒரு இடத்தில் பதுக்கி வைக்க முயற்சிகள் செய்கிறார். இந்நிலையில் வில்லனிடம் வேலை செய்யும் ஒருவன் தன் எஸ்.ஐ நண்பன் மற்றும் பார் நடத்தும் நண்பன் மூவரும் சேர்ந்து அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க நினைக்கின்றனர். ஐ.ஐ.டி.யில் படித்தவரான பிரேம்ஜி அமரனும் இந்த மூவரின் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஜித்-க்கு இந்தக் கொள்ளைத்திட்டம் பிரேம்ஜி மூலம் தெரியவருகிறது, அதன் பின் அவர்களின் ஒவ்வொரு மூவ் மெண்ட்ஸையும்  அவர்களுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்கிறார்.அவர்கள் திட்டத்தை செயல்படுத்தும்  நேரத்தில் திடீரென நுழைந்து தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்கும் காவல் அதிகாரியான அர்ஜுனுக்கும் இந்த 500 கோடி விசயம் தெரியவர,   கூட்டத்தை பணத்துடன் பிடிக்க முயற்சிகள் செய்கிறார்.அஜித் டீம்  போட்ட திட்டத்தின்படி பணத்தைக் கடத்துகின்றனர்.கடத்திய 500 கோடி பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கின்றனர் .அப்புறம் ஆளாளுக்கு, டீமிலிருக்கும் நண்பர்களை போட்டுத்தள்ளிவிட்டு தனியாக அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள நினைக்கின்றனர்.



இது ஒரு புறம் இருக்க வில்லனிடம் வேலை செய்பவன் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறான்.அவன் மூலம் பணத்தை மீட்க  வில்லன் கூட்டம் மற்றவர்களைத் தேடுகிறது. அர்ஜுனும் தனது டீமோடு தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் பதுக்கி வைத்திருக்கும் பணம் காணாமல் போகிறது. அதை யார் எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களைத் தேடி அஜித் செல்கிறார். கடைசியில் அந்தப் பணம் கிடைத்ததா? அர்ஜுன் அவர்களைப் பிடித்தாரா?வில்லன கூட்டம் அவர்களைக் கண்டுபிடித்து என்ன செய்தது என்பதை வண்ணத்திரையில் காண்க!

அஜித் நடிப்பு:

படத்தில் நல்லவர்கள் என்றால் த்ரிஸாவும், அஞ்சலியும் தான். மற்றபடி அனைவரும் கெட்டவர்கள். இதில் அஜித் ரொம்பக் கெட்டவராக வருகிறார். அவரது மேனரிஷமும்,கேஷுவலான கெட்டப்பும் மிக மிக அருமை. தொப்பை கொஞ்சம் தெரிகிறது. மற்றபடி பணத்தாசை பிடித்த கெட்ட மனிதனை கண்முன் நிறுத்துகிறார். படத்தில் ஹீரோயிசமே தெரியவில்லை. இருப்பினும் அஜித் வரும் காட்சிகளில்  நடிப்பில் அவர் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார். அதிலும் இடைவேளைக்கு பிற்பாதியில் அஜித்-ன் நடிப்பு அம்சமாக உள்ளது.


அர்ஜுனுக்கு இதில் நல்ல கேரக்டர்தான். படத்தின் பின்பாதியில் தான் அவருக்கு நிறைய காட்சிகள்.  க்ளைமாக்ஸில் அஜித்-க்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் சண்டை காட்சி நன்றாக உள்ளது.

த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று நான்கு பேர் இருக்கின்றனர்.நால்வருக்கும் ஒவ்வொரு பாடல் காட்சிகள் உள்ளது. நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.மற்றபடி ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர். ஒரு பாடல் காட்சியில் லட்சுமிராய் கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரிகிறார்.

வில்லனாக வரும் ஜெயப்ராகாஷ் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறுகிறது.

 வெங்கட் பிரபுவின் சென்னை-28 டீம் இதிலும் நடித்திருக்கின்றனர்(ஜெய்-யை தவிர). சென்னை-28, சரோஜாவில் காமெடியில் கலக்கிய பிரேம்ஜிக்கு இந்தப் படத்தில் காமெடி மிஸ்ஸிங். அதையும் படத்தில் ஒரு கேரக்டர்   "நீ பண்ற காமெடிமொக்கையாக இருக்குது"  என்று சொல்வதுபோல் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இசை - பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். மச்சி ஒப்பன் த பாட்டில் காட்சியமைப்பு நன்றாக இருக்கிறது. அஜித் வரும் காட்சிகளில் ஸ்பெசல் BGM தீம் அருமை. இடவேளைக்கு பின் படத்தின் விறு விறுப்புக்கு ஏற்ப BGM  இருக்கிறது.


இயக்கம்- இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்களில் காமெடி ஸ்பெசலாக இருக்கும் . இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள் தவிர ஏனைய காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம். படத்தின் முற்பாதி திரைக்கதையில் விறு விறுப்பு இல்லை. தேவையில்லாத பாடல் காட்சி வேறு வருகிறது. காமெடியும் இல்லை. எனவே முற்பாதியில் வரும் காட்சிகள் சிலவற்றை வெட்டினால் நல்லது. ஆனால் முதல் பாதியில் இல்லாத விறு விறுப்பை பின் பாதியில்  சரி கட்டியிருக்கிறார். இடவேளைக்கு அப்புறம் திரைக்கதை விறு விறுப்பு + வேகம் கலந்து அமைத்திருக்கிறார்.  வித்தியாசமான அஜித்-ஐ இந்தப் படத்தில் காட்டியதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

மங்காத்தா - கமர்ஷியல் மசாலா ஆட்டம்.

******************************************************












Monday, August 29, 2011

எ.பி.க - 15

                      எ.பி.க - 15 :  நண்பன்



அறை நண்பனின்
 
கைபேசியை காணவில்லை.
 
" கடைசியாக பேசி முடித்து
 
 எங்கே வைத்தாய்?"
 
"சன்னால் வழியாக
 
விழுந்திருக்குமோ?"
 
எல்லா இடங்களிலும் 
 
தேடிக் கொண்டிருந்தோம் நாங்கள்
 
நண்பனோ
 
எங்கள் முகங்களில் 
 
தேடிக் கொண்டிருந்தான்!!!
 
நன்றி - கீதம்லெனின்

******************************************************

Sunday, August 28, 2011

மற்றவை - அன்னாவின் வெற்றி

                   * அன்னாவின் வெற்றி *
 

நேற்று ஜன் லோக்பால் மசோதாவை வலியுறித்தி போராடிய அன்னா ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளையும் பார்லியில் ஏற்றுக் கொண்டு, ஓட்டெடுப்பு  விவாதத்திற்கு O.K சொன்ன மத்திய அரசு, அடுத்து என்ன செய்யப் போகிறது? மசோதா வருமா?வராதா? எது எப்படியோ இந்தப் போராடத்தின் மூலம் இளைய தலைமுறைகளின் நாட்டுப்பற்றும், ஊழலில்லாத இந்தியாவினை பார்க்கும் ஆவலும் நன்றாகத் தெரிகிறது.



அவர்கள் மட்டுமன்றி அனைத்து தர மக்களும்(மேல் மட்ட, நடுத்தர, ஏழை மக்களும்) கொடுத்த ஆதரவுதான் மத்திய அரசை மண்டியிட வைத்து விட்டது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும் அன்னா ஹசாரேதான் இனி அடுத்த மகாத்மாவாக இருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்ற முறை தெரிவிக்காத ஆதரவினை இந்த முறை நிறைய சினிமா நடிகர்கள், நடிகைகள் தெரிவித்திருந்தினர். மேலும் மீடியாவின் பங்குதான் இத்தனை மக்களுக்கும் அன்னாவின் போராட்டத்தை எடுத்துரைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. லோக்பால் மசோதா இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் நம் நாடு எப்படி மாறும்?ஆவலாக உள்ளது? இது சம்பந்தமாக நிறைய நண்பர்கள் பகிர்ந்த விசயம் இது.



நம் நாட்டிற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரில் 1982-ல்தான் ஜன் லோக்பால் மசோதா இயற்றப்பட்டது. இயற்றிய சில வாரங்களில் மொத்தம் 142 அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரே நாளில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். (ஆச்சர்யமாக இருக்கே!). இன்று இந்த சிங்கப்பூரில் 1% மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். அரசும் வரிச்சுமையை மக்களின் மேல் திணிப்பதில்லை. அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம்+பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. மேலும் 8% மக்கள்தான் அங்கு படிப்பறிவில்லாமல் இருக்கின்றனர். 90% மக்களிடம் வெள்ளைப் பணம்தான் புழங்குகிறது(கருப்பு பணத்திற்கு எதிர்பதம்). 



வேலையில்லாத திண்டாட்டம் 1%  தான். நவீன மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் மக்களுக்கு கிடைக்கிறது. இத்தனையும் லோக்பால் மூலமாகத்தான் நடந்ததாக கூறப்படுகிறது. என்னைக் கேட்டால் லோக்பால் மட்டும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுயநலத்திற்காக ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும். உதாரணத்திற்கு ஒரு மருந்து வாங்கினால் அதற்குரிய பில்லை வாங்க வேண்டும்.இல்லையேல் அந்தப் பணம் கடைக்காரருக்கு கருப்புப் பணம்தான். பார்க்கலாம் இனிமேல் என்ன நடக்குமென்று?!

*******************************************

மற்றவை - தவறு செய்தால்?? தண்டனை .....!!

         * தவறு செய்தால்? தண்டனை  .....!! *




                                 படம்: ராஜிவ் காந்தி படுகொலை செய்த தனு(இடது முதல்)

செப்டம்பர்-9ந்தேதி தூக்கு:  
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தூக்குதண்டனையை எதிர்த்து நிறைய அரசியல்வாதிகளும், ஈழத்து மக்களுக்கு ஆதரவு தருபவர்களும் பேரணியும் , ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர். இதனைப் பற்றி எனது கருத்துக்கள்.


                                                      படம்: ராஜிவ் காந்தி படுகொலை

1991 மே 21 அன்றுதான் ராஜீவ் காந்தியை தனு என்கிற தேன்மொழி ராஜரத்தினம் மனித வெடிகுண்டு வடிவில் வந்து படுகொலை செய்த நாள். ஒரு பெண்ணுக்கு எப்படி இந்த துணிச்சல் வந்தது என்ற கேள்வி எனக்கு பல முறை வந்தது. படுகொலை தொடர்பான நிறைய விசயங்களைப் படித்த போது, தனுவின் தந்தை LTTE போராளி என்பது, LTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் கூட அவரது திறமைக்காக மெடல் வாங்கியது, போன்ற விசயங்கள் தெரிய வந்தது. மேலும், தனுவின் சகோதரரை இந்தியா அனுப்பிய அமைதிப்படையினரால் கொல்லப் பட்டதும், அந்தப் படையினரால் தனு கற்பழிக்கப்பட்டு சின்ன பின்னமானதும் தெரிய நேர்ந்தது. அந்தக் கோபத்தில் தான் அவர் ஒரு மனித வெடிகுண்டாக மாறி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டதாக சில பத்திரிக்கை செய்திகள் சொல்லியிருந்தது.


                                                படம்: தனியே கிடந்த தனுவின் தலை

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ஈழத்தில் போர்களின் போது நடந்த தாக்குதல்களின் வீடியோக்களைப் பார்க்கும் போது, ஈழத்து ஆண்களை ஆடையின்றி சிங்கள அரசு ராணுவத்தினர் பலவாறு கொடுமைப் படுத்தியது மனதை வருந்தச் செய்தது. மேலும் ஈழத்து பெண்களை எல்லாம் அவ்வீரர்கள் அனைவரும் கற்பழித்து துன்புறுத்தி கொல்வது, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை துகிலுறுத்தி அந்த உடல்களைப் பற்றி அவர்கள் ஏளனமாக பேசுவதும் பார்த்த போது ஏன் இவ்வளவு வஞ்சம் இவர்கள் மனிதில் என்று கேட்க தோனியது.




மொத்தத்தில் ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்த்தியது ஒரு குற்றம்தான். அந்தக் குற்றத்தில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது ஒரு விதத்தில் நியாயமாகப் படுகிறது. ஏனெனில் அந்தப் படுகொலையை இவர்கள் நிகழ்த்திய போது, எத்தனை அப்பாவி மக்கள், சிறுமிகள் இறந்தனர். இன்று இந்த மூவருக்கும் வழங்கிய தண்டனையை எதிர்க்கும் நபர்கள், அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அந்தச் சம்பவத்தில் இறந்திருந்தால் அவர்கள் மன நிலை இப்போது எப்படி இருக்கும். என்ன, குற்றம் செய்தவர்களுக்கு இவ்வளவு தாமதமாக தண்டனையை அறிவித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏளனமாகத்தான் பார்க்க முடிகிறது. நிச்சயம் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

                                                                          படம்: நளினி

குற்றம் செய்ததாக சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ஒரு பெண் என்பதாலும் , அவரது மகள் (தற்போது பாட்டியிடம் வசித்து வருகிறார்) எதிர்கால வாழ்க்கைக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்தது கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கிறது. ராஜிவ் கொலையாளிகளை தனது வீட்டில் தங்க வைத்ததனால்( அவரின் காதலன் தான் முருகன், பின்புதான் திருமணம் செய்து கொண்டனர்) அதாவது குற்றம் செயதவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தினால், இத்தனை ஆண்டுகளாய் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். எப்பொது நளினியை விடுதலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

படம்: நளினியின் அம்மா மற்றும் நளினியின் மகள்

சிறையில் இருக்கும் நளினி தனக்கு சிறையில் நிகழும் கசப்பான அனுபவங்களை விளக்கி சிறை அதிகாரிக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதனைப் படிக்கும் போது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களின் உரிமைகள் அனுமதிக்கப்படுகிறதா?இல்லை மறுக்கப் படுகிறதா? என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது.

நளினியின் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்:


Link:
http://3.bp.blogspot.com/_RqRxxuxVUDY/S83vK77oRXI/AAAAAAAAArI/Dz-eOvX4v-w/s1600/Nalani-10001.jpg

(continue...)
http://3.bp.blogspot.com/_RqRxxuxVUDY/S83vfXJW0gI/AAAAAAAAArM/QkJDZRCuT-w/s1600/Nalani-20001.jpg

(continue...)
http://3.bp.blogspot.com/_RqRxxuxVUDY/S83vvEnwQFI/AAAAAAAAArQ/vDAzTnC9gPU/s1600/Nalani-30001.jpg

#################################################

Thursday, August 25, 2011

எ.பி.க - 14

                     * எ.பி.க - 14  *

10,000 ஹிட்ஸ்களைத் தாண்டி விட்டது எனது வலைப்பூவின் விசிட்டர்ஸ் கவுன்டர்ஸ். மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தை சில நிமிடங்கள் எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்வதற்காக பயன்படுத்தியமைக்கும், என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் உங்கள் கருத்துக்களை சொன்னதற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!. உங்கள் ஆதரவுதான் எனது வலைப்பூவிற்கு பச்சையம். எனவே வலைப்பூவின் சுவாசத்திற்கு தினமும் பச்சையம் கொடுங்கள். நன்றி!.


இதுவரை எனக்கு பிடித்த கவிதைகளில் நிறைய வகைகளை வெளியிட்டுள்ளேன். விலங்குகளை பற்றின கவிதை எதுவும் வெளியிடவில்லை. எழுதுவதும் மிக அரிது. யாராவது எழுதியிருப்பார்களா என்று அதனைப் பற்றி தேடிய போது இந்தக் கவிதை படிக்க நேர்ந்தது. ஒரு ஐந்தறிவு ஜீவன் படும் பாட்டை அது நம்மிடம் சொல்வது போல் எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

* ஆடு *



பசும்புல் வெளியில்
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன

காந்திக்கு பால்சுரந்த
கருணைக்கு பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு

காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி

இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்

சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்

வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்

எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்

விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்

ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.

நன்றி - அண்ணாமலை

*****************************************************

Tuesday, August 23, 2011

தெரிஞ்சுக்கோங்க - ஆச்சர்யமான சில விசயங்கள்

தெரிஞ்சுக்கோங்க - ஆச்சர்யமான சில விசயங்கள்

1. நான்கு வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகளை கேட்கிறது.

2. ஆடுகளுக்கு மேல் முகவாயில் முன் பற்கள் இல்லை.

3. வாஷ் பேஷினில் நின்று கொண்டு, உங்கள் பற்களை brush செய்யும் போது திறந்து விடும் தண்ணீரினால் ஒரு நிமிடத்திற்கு நான்கு கேலன்கள் வீதம்  தண்ணீர் வீணாகிறது.

4. 18 வயதிற்கு மேற்பட்ட மனித உடலிற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 88 பவுண்டுகள் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

5. ஒரு நபரை கார்பன் மோனாக்சைடு மூலம் 15 நிமிடங்களுக்குள் கொல்ல முடியும்.

6. இடது கை பழக்கம் கொண்டவர்கள் பெண்களை விட ஆண்களே அதிகம்.

7.லியனார்டோ டாவின்சி-யினால்தான் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டது.

8. முயல்களுக்கு வாந்தி வராது.

9. ஒரு பவுண்டு வெண்ணெய் எடுக்க 29 கப் பால் தேவை.

10. உலகிலுள்ள மொத்த எறும்புகளின் எடையானது, மொத்த மக்களின் எடையை விட அதிகம்.

11. கொசுக்களுக்கு பற்கள் உண்டு.

12.எகிப்து மன்னன் இரண்டாம் ராம்செஸ்(Ramses) இறந்த வருடம் 1225 B.C. அவரது மரணத்தின் போது அவரருக்கு 96 மகன்கள் மற்றும் 60 மகள்கள் இருந்தது.

13.அமெரிக்காவில் தர்பூசணிகள் 200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகைகளில்  வளர்க்கப்படுகின்றன.

14. சராசரி மனிதனின் வாயை விட ஒரு நாயின் வாய்தான் சுத்தமாக உள்ளது.

15. ஒவ்வொரு வருடமும் சுமார் 20 பில்லியன் தேங்காய்கள் பறிக்கப்படுகின்றன.

16. ஒரு பென்சிலைக் கொண்டு ஒரு கோடு வரைந்தால் அதனை 35 மைல்கள் வரைதான் நீட்டிக்க முடியும்.

 17. நிமிடத்திற்கு 11,500 முறை ஒரு தேன் பூச்சி தன் இறக்கைகளை விரிக்கிறது.

****************************************************





Monday, August 22, 2011

எ.பி.க : 13

னக்கு  அடிக்கடி ஒரு விசயம் மனதில் தோன்றுகிறது. காதல் கவிதைகள் மட்டும் ஏன் நம் மனதை நெருடி. இளக வைக்கிறது? மற்றவை எல்லாம் அந்த அளவிற்கு இல்லை என்ற கூற்று உண்மையா? இருப்பினும் இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். கவிதை உங்கள் மனதை தொடுகிறதா? இல்லையா? என்று தெரிந்து விடும். 
 
                      * காதல் தோல்வி *



என் இளைஞனே.....
எண்ணத்தில் எவளைப் பதித்து
கன்னத்தில் தாடி வளர்த்தாய்?

தாடிக்குள் இருக்கிறது ஆயிரம் சங்கதி! அது
...காதல் தோல்வியெனில் கேவலம்
உன் கதி!

காதலிக்கும் முன் கற்றுக்கொள்!
கண்ணீர் விடுவோமென்று!

நேசிக்கும் முன் கற்றுக்கொள்!
மறந்து விடுவாளென்று!

வெற்றிக்கு முன் கற்றுக்கொள்!
தோல்வி வருமென்று!

லட்சியத்திற்கு தாடி வை!
லட்சணத்திற்கு தாடி வை!
ஏன்?
நாடித் தேமலை மூடி மறைக்கக் கூட
தாடி வைத்துக் கொள் தப்பில்லை!

காதலில் தோல்வி
என்று மட்டும் தாடி வளர்க்காதே!

நீ தத்துவம் பேசி
ஞானியாக வேண்டாம்
போதனை செய்து
புத்தனாக வேண்டாம்!

நாட்டுக்காக உயிர் கொடுத்து
தியாகியாகக் கூட வேண்டாம்!

உன் உள்ளத்தில் சம்மணமிட்டிருக்கும்
காதல் தோல்வியை மட்டும் விரட்டு!

நீ காதலித்தவள் என்ன
இவ்வுலகின் கடைசிப் பெண்ணா?

காதல் என்பது அன்பைக் குறிக்கும்
பொதுச் சொல்!
அது எப்படி தோல்வியாகும்
பதில் சொல்!

நீ வளர்க்கும் தாடி
உன் இன்பத்தின் விரோதி!

அட பைத்தியக்காரனே....
இன்னும் நீ அந்தத் தாடியில்
ஆசை வைத்திருந்தால் தேவையில்லாத
உன் மீசையை மட்டும் எடுத்து விடு!

நன்றி - சாம்ராஜ் மகேந்திரன்

#####################################################

துவும் காதல் தோல்வி சம்பந்தப் பட்டதுதான் . ஆனால் முந்தைய கவிதையை விட வேறுபட்டது.
                * நான் உன்னை நேசிப்பதால்.....*


உனக்காக மட்டும் சிரிக்கத் துடிக்கும் என் இதழ்கள்..
உன்னை மட்டும் பார்க்கத் துடிக்கும் என் கண்கள்...

உன் குரல் கேட்க மட்டுமே துடிக்கும் என் செவிகள்...
உன் அழைப்பிற்காக மட்டுமே காத்திருக்கும் என் கைபேசி ...

உனக்காக என்னை நான் மாற்றியவை...
உனக்காக நான் இழந்த வாழ்க்கை...

இதில் எதுமே உனக்கு மட்டும் தெரியாமல் போனதா...
நேசிப்பது நான் மட்டுமே என்று எனக்கு தெரியாமல் போனது...

நீ நேசிப்பதோ வேறொரு நெஞ்சம் என்ற போது ....
நேசிக்கிறேன் உன்னை மட்டும் அல்ல...
உன் காதலையும் நீ நேசிக்கும் இதயத்தையும்...

நன்றி - சிம்சன்

*************************************************

Sunday, August 21, 2011

கேள்வி - பதில் : 8

                     * கேள்வி - பதில் : 8 *

1. கேள்வி : நாம் குடிக்கும் கோக், பெப்சி, ஸ்லைஸ் மற்றும் இதர கூல் டிரிங்ஸ் எல்லாம் வெவ்வேறு கலரில் இருக்கின்றன. அது போன்ற கூல் டிரிங்ஸ்-ஐ குடித்தாலும் யூரின் கலர் மட்டும் கலர்லெஸ்(Colourless) ஆக இருக்கிறதே? என்ன காரணம்?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]


பதில் :
சுரேஷ் , நீங்க சொல்றது மாதிரி யூரின் கலர் கலர்லெஸ் கிடையாது. அதற்கு நிறைய கலர் இருக்கிறது. பொதுவாக யூரின்-க்கு ஒயிட், ரெட், ஆரஞ்சு, ப்ளாக், கிரீன், ப்ளூ , க்ரே, பிரவுன் அல்லது கோக் கலர் உண்டு. யூரினுக்கு கலர் கொடுப்பவை " யூரோக்ரோம், யூரோஎரித்ரின் மற்றும் யூரோபிலின் " என்னும் பிக்மெண்ட்ஸ் தான். இத்தனை கலர்களில் யூரின் தோன்றுவதன் காரணம் நாம் அருந்தும் திரவ, திட வகை உணவுகளாலும், சிறு நீரகத்தின் வேலையாளும். எடுத்துக்காட்டாக நிறைய தண்ணீர் குடித்தால் , வெளி வரும் யூரின் கலர் ஒயிட். ஏதாவது மெடிகேஷன் எடுத்திருந்தாலோ அல்லது தண்ணீர் குறைவாக குடித்தாலோ வெளி வரும் யூரின் கலர் லைட் ஆரஞ்சு. இது நார்மல் கலர்தான். இந்தக் கலரில் வெளி வந்தால் உடல் நிலை நார்மலாக இருப்பதாக அர்த்தம். வேறு கலரில் இருந்தால் நிச்சயம் உடலிலோ அல்லது சிறுநீரகத்திலோ ஏதாவது கோளாறு இருக்கும். அவசியம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.

2. முதன் முதலில் சேலையை நெய்து உருவாக்கியவர் யார்? சரித்திரம் பார்த்துக் கூறவும்?
[மதுவந்தி, ஈரோடு]


பதில் : 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தில்தான் முக்கியமான இரண்டு விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் பருத்தி,கரும்பு.  மேலும் இன்று உலகமெங்கும் எல்லாரும் டிரஸ் அணிந்து கொண்டு ஸ்வீட் சாப்பிடுவதற்கு இந்தியர்கள்தான் காரணம். மொகஞ்சதாரோ பெண்கள் எடுத்த எடுப்பில் பருத்தியால் ஆன ' மினி ஸ்கர்ட்' டே தயாரித்து அணிந்து கொண்டார்கள். பிறகுதான் சேலை வந்தது..!

3. கேள்வி : மனிதன் தன் மூளையை அதிக பட்சம் 10% தான் உபயோகிக்கிறானாமே?! அப்படியா?
[அறிவழகன்,கரூர்]

 


பதில் : அப்படியும் சொல்ல முடியாது. எல்லா பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சம் உபயோகிக்கிறோம் என்பதுதான் உண்மை!. காமம்,மத, ஜாதி வெறியெல்லாம் கிளம்பும்போது மட்டும் மூளையின் எல்லாப் பகுதிகளும் வேலை செய்வது நின்று போய், ஆழத்தில் Limbic ஏரியாவில் இருக்கும் Reptile என்ற பகுதி மட்டும் வேலை செய்யும்..!

4. கேள்வி : பைபிளின் கூற்றுப்படி, ஆதாம்-ஏவாளுக்குப் பின் அவர்களது குழந்தைகள் நிச்சயமாக சகோதர, சகோதரிகளாக இருப்பர். அப்படி இருக்கையில் புதிய தலைமுறைகள் எப்படி இவ்வுலகில் தோன்றியிருக்கும்?தயவு செய்து பதிலளிக்கவும்?
[ரமேஷ், கோவை]



பதில் :  அப்படிப் பார்த்தால் ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவான ஏவாள் , ஆதாமின் மகள் என்று சொல்லலாமா?! 'சகோதர சகோதரிகளெல்லாம், மனிதப் பரிணாம வளர்ச்சியில் ரொம்பப் பிற்பாடு வந்த உறவு முறைகள்!

5. கேள்வி : ஓவரா சீன் போடறதுன்னா என்ன? கதையாக சொல்லுங்க.
[கீதா, கோவை]

 

பதில் :
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்  நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு  இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு  நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,  குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் திருடன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. " கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கே "- ன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான். இதனால நான் சொல்றது என்னன்னா, ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன்  போட்டா இப்படித்தான்.


********************************************************

Saturday, August 20, 2011

மற்றவை - விமர்சனம் : Final Destination 5

       * விமர்சனம் : Final Destination  5 *

Director: Steven Quale

Cast: Nicholas D'Agosto, Emma Bell, Miles Fisher



தற்கு முன் வெளி வந்த Final Destination 1,2,3 & 4 அனைத்து பார்ட்களையும் நான் பார்த்திருக்கிறேன். சில காட்சிகளைக் கண்டு மிரண்டிருக்கிறேன். இந்த 5-ம் பார்ட்டைப் பார்த்து முன்னை விட மிரண்டு விட்டேன்(நிறைய காட்சிகளில்). காரணம் இந்தப் பார்ட்  3D -ல் வெளி வந்திருக்கிறது(+ஆங்கில சப்-டைட்டில்).


நான் பார்த்தது 3D-ஆங்கிலத்தில். நாவலூர் AGS-ல் பார்த்தேன். தியேட்டரின் கட்டமைப்பு அருமையாக உள்ளது. A.C. இருந்தும் குளிர்ச்சியாக இல்லை. குளிர்ச்சி குறைவாகவே இருந்தது. சத்யம், சங்கம் போன்ற தியேட்டரில் இருக்கும் A.C.-ல் உடல் சில்லித்து விடும். AGS நிர்வாகம் சரி செய்வார்களா? அடுத்த முறை  பார்க்கலாம். சரி படத்திற்குப் போவோம்.

படத்தின் கதை:


முந்தைய பார்ட்களில் வந்த கதை போலத்தான் இதிலும். இந்த பார்ட்டில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் மற்றும் அவர்களின் கேர்ள் பிரண்டுகளுக்கும் மரணம் எப்படி நிகழ்கிறது என்பதை மிரள வைக்கும் விஷுவல் ட்ரீட் - ஐ 3D-ல் காட்டியிருக்கிறார்கள்.


படத்தின் முதல் காட்சியில் நண்பர்களும், கேர்ள் பிரண்டுகளும் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். ஒரு மிக உயரமான பாலத்தின் மீது பயணம் செய்து கொண்டிருக்கும் போது, நண்பர்களில் ஒருவன் பாலம் இடிந்து விழுந்து ஒவ்வொருவராக இறப்பது போல் கனவு காண்கிறான். அதனால் எச்சரிக்கை செய்து , பஸ்ஸிலிருந்து இறங்கச் செய்து தன் சகாக்களை காப்பாற்றி விடுகிறான். அதற்கப்புறம் கனவில் கண்ட விபத்தில் வரிசையாக இறந்தவர்களுக்கு எல்லாம், அதே வரிசை முறையில் ஒவ்வொரு நபர்களுக்கும் மரணம் ஏற்படுகிறது. மரணத்திற்கு முன்னரே ஒருவர் வந்து கெட்டது நடக்கப் போகிறது என்று எச்சரிக்கை கூட செய்கிறார். முதல் இரண்டு மரணம் நிகழ்ந்த பின்னர் மற்றவர்களுக்கு " அடுத்தது நான் தான் என்ற " மரண பயம் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அடுத்து தனக்கு நிகழும் மரணத்தை  மற்றவர்க்கு ஏற்படுத்தி விட்டால் தான் உயிர் வாழலாம் என்ற எண்ணம் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சக நண்பனை கொல்ல முயற்சி செய்கிறான் .இறுதியில் அனைவரும் இறந்து விடுகின்றனர்.


இந்தப் படத்தில் ஜிம்னாஸ்டிக், அக்குப்பஞ்சர், ஜன்னலில் இருந்து விழுதல், மெஷின் ஷாப் விபத்து, LASIK சர்ஜரி ஸ்டாண்ட் மற்றும் நெருப்பு+,விமானம் வெடித்தல் போன்ற முறைகளில் ஒவ்வொருவருக்கும் மரணம் நிகழ்கிறது.


படத்தின் முதல் காட்சியில்(15 நிமிடங்கள்) வரும் அந்த மிக மிக உயர்ந்த பாலத்தில் நடக்கும் காட்சிகள் நிச்சயம் மிரள வைக்கும். அதுவும் 3D-ல் பார்த்த போது அப்பப்பா அவ்வளவு அமர்க்களமான விஷுவல் ட்ரீட். அதற்கப்புறம்  ஜிம்னாஸ்டிக் மூலம் நிகழும் மரணம்.  அதற்கப்புறம் வரும் LASIK சர்ஜரி ஸ்டாண்ட் , மெஷின் ஷாப் விபத்து மற்றும் கடைசி காட்சி இவையனைத்தும் நிச்சயம் மிரள வைக்கும். அருமையான காட்சியமைப்பு.

படம் பார்ப்பவர் நிச்சயம் பயப்படும் இடங்கள் கம்பிகள் வந்து ஒருவனின் உடலைக் கிழித்து வெளிவரும் காட்சி, ஒருத்தியின் கண் தெறித்து விழும் காட்சி. திடீரென்று நம் கண்ணை நோக்கி கூர்மையான கம்பிகள் , கத்திகள் வந்து விழும்.  கண்ணாடியைக் கழட்டிப் அனைவரின் ரியாக்ஸன்சைப் பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாக இருந்தது. இந்தப் படத்தின் முழு திரில்லரை அனுபவிக்கவேண்டுமானால் அவசியம் 3D-ல்தான் பார்க்க வேண்டும். படம் முடியும் போது முந்தைய பார்ட்களின் சில காட்சிகளையும் 3D-ல் காட்டுகின்றனர்.

இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

* Final Destination  5 - Fantastic thriller *


****************************************************

மற்றவை - மூன்று விசயங்கள்.

                    * மூன்று விசயங்கள் *

இந்தியா ஏழை நாடா?

" இந்தியா ஒரு ஏழை நாடு என்று யார் சொன்னது?. உங்களுக்கு தெரியுமா? எத்தனை இந்தியர்கள் எங்கள் சுவிஸ் பேங்கில் மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர் என்று? இனிமேல் இந்தியா ஒரு ஏழை நாடு என்று சொல்லாதீர்கள்". 
 
இந்த வார்த்தைகள் சுவிஸ் பேங்கில் பணி புரியும் ஒரு அதிகாரி சொன்னது. அவர் சொன்னதும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இருப்பினும் இன்னும் இந்தியர்கள் ஏழைகளாக இருக்க என்ன காரணம். யோசித்துப் பார்த்தால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
" முதலாளிகள் எல்லாம் நாளுக்கு நாள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு லாபம் ஈட்டினாலும் , பெரும்பான்மை முதலாளிகள் அதில் சிறிதும் கூட தொழிலாளிகளுக்கு தருவதில்லை. ஏன் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கூட யோசித்து, கடைசியில் சிறிதளவே அதிகப்படுத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பணமும் இன்றைய விலைவாசி ஏற்றத்தினால் தேவைகளுக்கே செலவாகிவிடுகிறது.  விலைவாசிக்கேற்ற சம்பளம் இல்லாததால்தான் இன்னமும் நடுத்தர மக்களும், அதற்கு கீழே உள்ள மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை."


ஏழ்மையைப் பற்றிய ஒரு குறும் படம்

ரண்டு ஏழைச் சிறுவர்களின் தன்னம்பிக்கையில் அவர்களின் வாழ்வு மேம்படுவதை மிக அழகான திரைக்கதையில் "ரோட் சைட் அம்பானிஸ்" என்ற  குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள்;

அந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.
 
எனது கருத்து:

அந்தக் கிரிக்கெட் காட்சிகளை இயக்குனர் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம்.  மற்றபடி பார்க்கத்தகுந்த படம்தான்.



அம்மா செய்வது சரியா?

மிழக முதல்வர் அம்மா அவர்கள், கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை டெல்லியில் உள்ள Aim மருத்துவமனை போன்று
சிறப்பான வகையில் நவீன மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை பற்றிய எனது கேள்விகள்.

இடப்பற்றாக்குறை காரணமாகத்தான் புதிய தலைமை செயலகத்தை கலைஞர் கட்டினார். இப்போது பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக் குறை இல்லையா? அதற்கு அம்மா என்ன செய்யப் போகிறார்? மக்கள் வரிப்பணத்தில் இவரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டிடம் கட்டுவாரா?

இப்போது அழகாகக் காட்சியளிக்கும் புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றியதும், மெயிண்டெனஸில்  எப்படி இருக்கப் போகிறது. அரசு மருத்துவமனைப் போல் மாறிவிடுமா? அப்படி மாறினால் கலைஞரின் மனம் என்ன யோசிக்கும்?

சென்ற முறை அம்மா ஆட்சியில், காலில் விழும் கலாச்சாரத்தை தமிழக மந்திரிகளுக்கு பழக்கப் படுத்தியவர், இப்போது அந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. மேலும் சென்ற கலைஞர் ஆட்சியில் இருந்த பவர் கட் இப்போது நிறைய ஊர்களில் குறைந்திருக்கிறது. இதனையும் பாராட்டத்தான் வேண்டும். இருப்பினும் இந்தச் தலைமை செயலகம் விசயத்தில்  அம்மா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்னும் என்னென்ன செய்வார்?பார்க்கலாம்..

********************************************************

Tuesday, August 16, 2011

எனது படைப்புகள் - 12: சமத்துவம்

                                * சமத்துவம்  *


அலுவலகத்தில் மேலாளராய்

இருப்பவள்..,

தனக்கு கீழ் வேலை பார்ப்பவரையும்

சமத்துவம் பேசி

இருக்கையில் அமர்ந்து

பேசச் சொல்பவள்..!

இன்று அவளின் வீட்டினுள்

அனைவரின் முன்னிலையில்

எழுந்து நின்று கொண்டிருக்கிறாள்

பெண் பார்க்கும் படலத்தில்..,
இதுதான் சமத்துவமோ?!! 

********************************************************



Monday, August 15, 2011

தெரிஞ்சுக்கோங்க - சிந்தனை செய் மனமே

             *  சிந்தனை செய் மனமே *

காங்கிரஸின் அடக்குமுறை அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு டெல்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். அதில் 6 நிபந்தனைகளை அன்னா ஹசாரேவின் தரப்பு ஏற்கவில்லை. 5000 பேருக்கு மேல் உண்ணாவிரதம்  இருக்கும் இடத்தில் கூடக் கூடாது. 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம்  நடத்த வேண்டும் இரவு 9 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள் அந்த 6-ல் அடக்கம். டெல்லி போலிஸார் எல்லாம் ஏன் இப்படி செய்கிறார்கள்? யாருக்காக  அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறார்? நமக்காகத்தானே.!.மக்களுக்காகத்தானே.!.
 

சராசரி மக்களில் ஒருவர்கள்தானே அவர்களும்;ஏன் இப்படி செய்கிறார்கள்? அது சரி எய்தவன் இருக்க அம்பை நோவானேன். வெள்ளையர்களிடம் வாங்கிய சுதந்திரம் இன்று அரசியல் அதிகார வர்க்கத்தினரின் கையில் தானே இருக்கிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் லோக் பால் மசோதாவை கொண்டு வர ஏற்பாடு செய்வோம் என்று சென்ற முறை பிரதமர் தரப்பில் கொடுத்த வாக்குறுதி இப்போது என்ன ஆயிற்று. இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையா? அடக்க அடக்க , தறிக் கெட்டு ஓடும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதா? இந்த விசயத்தில் ஏன் பயப்படுகிறது?

தனது எண்ணத்தை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டு லோக்பால் மசோதாவினை நிறைவேற்றினால் மக்களிடத்தில் கொஞ்சம் நல்ல பேரை வாங்கலாம். இல்லையேல் தி.மு.க வின் நிலைதான்.

###################################################
              * கேட்டால் கிடைக்கும் *

ங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு உங்கள் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் அநியாயம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை எதிர்த்து நம் உரிமையை நாம் கேட்டுப் பெறும் வகையில், வலைப்பூவின் சீனியர்கள் சுரேகா சுந்தர் மற்றும் கேபிள் சங்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் சங்கர் நாராயண் அவர்களும் ஃபேஸ் புக்கில் ஒரு கம்யூனிட்டியை ஆரம்பித்துள்ளார்கள். அதுதான் " கேட்டால் கிடைக்கும்" . நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், நாம் கேட்டுப் பெறுவதுதான் இந்த கம்யூனிட்டியின் நோக்கம். அதன் ஃபேஸ் புக் லிங்க் இதுதான் .

http://www.facebook.com/groups/249616055063292/


தற்போது நிறைய நண்பர்கள் இதில் உறுப்பினர்களாகக் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர ஆரம்பித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

அனுபவம் 1:
 

 
சுரேகா சுந்தர்:

" திருச்சியிலிருந்து ஓசூர் செல்லவேண்டும். பெங்களூர் செல்லும் அரசுப்பேருந்தில் சென்று ஓசூர் டிக்கெட் கேட்டால், பெங்களூர் டிக்கெட் வாங்கிக்கொண்டால்தான் பயணிக்கமுடியும் என்றார் கண்டக்டர். பஸ்ஸுக்கு முன்னால் நின்றுகொண்டு, ஓசூர் டிக்கெட் கொடுப்பதுதான் சரி என்று வாதிட்டேன். (இரண்டுக்கும் 40 ரூபாய் வித்தியாசம்) முதலில் சண்டைபோட எத்தனித்தவரிடம், சரி நீங்கள் சொல்லுவதை அப்படியே உங்கள் பெயருடன் சொல்லுங்கள். எனக்கு ஒரு பேட்டி எடுத்த மகிழ்ச்சி கிடைக்கும் என்று பேச்சை பதிவு செய்ய ஆரம்பித்தேன். வாய் மூடிக்கொண்டு ,எங்களுக்கான 3 ஓசூர் டிக்கெட் கொடுத்தார். இதில் மிகக்கொடுமை, ஏற்கனவே 7 ஓசூர் டிக்கெட், பெங்களூர் செல்ல பணம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்ததுதான்!! "

அனுபவம் 2:
 
 

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.

சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.

“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”

”சேஞ்ச் இல்லை சார்..”

“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”

“நாலனாதானே சார்..”

“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”

சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல,  நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”

அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.

நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.

இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன்  கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately…. "


அனுபவம் 3:

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய  புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.


நான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒரு ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன்.  ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.

இப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா? அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும்.  அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா? என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே?” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.

“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.

தியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள். ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள்.

இதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள்.  நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும். "

**************************************************


Sunday, August 14, 2011

மற்றவை - இதயம் கவர்ந்தவை

          * இதயம் கவர்ந்தவை *
மிழ் சினிமாவின் வரலாறைப் பற்றி நிறைய பேர் நிறைய விசயங்களைச் சொல்லிருக்கின்றனர். டி.ஆர்.மகாலிங்கம் காலத்திய படங்களில் எல்லாம் பாடல்கள் அதிகம் இருக்கும். கதாநாயகன், கதாநாயகியை நினைக்கும் போது ஒரு பாட்டு வரும்.அப்புறம் அவளைப் பார்க்கச் செல்லும் போது ஒரு பாட்டு வரும்.பார்த்த பின் இருவருக்கும் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு வரும். இது அப்போதைய டிரெண்ட். காலம் மாற மாற படத்தின் நீளமும், பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இப்போதெல்லாம் ஆறு பாடல்கள் ஒரு படத்தில் காட்டினாலே நம்மை அறியாமல் படத்தின் மீது ஒரு சலிப்பு வந்து விடுகிறது. ஆடியோ ரிலீஸுக்காக மட்டும் ஆறு பாடல்களை வெளியிட்டு, படத்தில் ஒரு சிலவற்றை கட் பண்ணி விடுகின்றனர்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களில் கிடைக்கும் ஆனந்தம், எண்டெர்டெயின்மெயிண்ட் இப்போதெல்லாம் வெறும் இருபது நிமிடங்களில் வரும் சார்ட் ஃபில்ம் எனப்படும் குறும்படங்களில் கிடைத்துவிடுகிறது. ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணினால் ஒரு நாளுக்கு அட்லீஸ்ட் ஒரு குறும் படமாவது நமது நண்பர்கள் மூலம் பகிர்ந்து கொண்டு, காணும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் எனக்கும் நிறைய படங்கள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 சில படங்கள் மொக்கையாக இருக்கும். சில அட போட வைக்கும். சில பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும். காதல் பற்றிய குறும் படங்கள் காணும் போது நிறைய தடவை படத்தோடு லயித்திருக்கிறேன். படத்தை எடுப்பவர்கள் இளைஞர்கள் அல்லது இளைஞிகளாக இருப்பதால் காதல் பற்றிய குறும் படங்கள், ரசிக்கும் வகையில் அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்பிய "மாலை நேரம்" இந்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுவும் ஒரு காதல் கதைதான். இந்தப் படத்தில் வரும் ஹீரோ , ஹீரோயின் இருவரும் அவ்வளவு இயல்பாக நடித்திருகின்றனர். இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது படத்தின் ஹீரோயின். குட்டிப் பெண் தான். ஆனால் நடிப்பில் சுட்டிப் பெண். நீங்களும் பாருங்கள். அவசரகதியில் பார்க்க வேண்டாம். ஓய்வு நேரத்தில் நிதானமாக பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.


#####################################################

கிரெடிட் கார்டு என்ற ஒரு டாபிக்கை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் "தேய் மச்சி தேய்" இந்த குறும்படம் டாக்குமெண்டரி போல இல்லாமல், சிறப்பான மேக்கிங்கால் ரசிக்கும் படி எடுத்திருக்கிறார்கள். இதுவும் உங்கள் பார்வைக்கு.



*****************************************************

Friday, August 12, 2011

எ.பி.க - 12 - விலைமதிப்பில்லா மாது

               * விலை(மதிப்பில்லா) மாது(18+) *

த்தனையோ கவிதைகளை நான் நித்தமும் படித்து வருகிறேன். காதல், கோபம், சமூகம், வெறுப்பு இன்னும் நிறைய வகையறாக்களில் வெளி வந்த கவிதைகள் நிறைய என்னக் கவர்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் நிதர்சனமான ஒரு நிகழ்வை தன் ஷார்ப்பான வார்த்தைகளில் நெற்றிப் பொட்டில் தட்டியது போல ஒருவர் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். எழுதியவர் பெயர் தெரியவில்லை. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கும் ஒரு விலைமாதுக்கும் நடக்கும் உரையாடலை மிக மிக நாஷுக்காகவும் நயமாகவும் சொல்லியிருக்கிறார். இதில் காமமும் கலந்திருப்பதால் 18+ போட்டு விடுகிறேன். படித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

விலைமதிப்பில்லா மாது



தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்..

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை..

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்..

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்..

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்.
 

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வே
சி தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."

பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.

தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!


*********************************************

Thursday, August 11, 2011

மற்றவை - திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள்

              * திரையுலகில் வாழ்ந்து கெட்டவர்கள் *

ன்று எதேச்சையாக சிவாஜி , சாவித்திரி நடித்த பாசமலர் படத்தில் வரும் "மலர்ந்து மலராத" பாடலை டி.வி.யில் பார்த்தேன். சாவித்திரியின் நடிப்பைப் பார்த்து வியந்தேன். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகையின் திரையுலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைப் பற்றிய கட்டுரைகளை இணையத்தில்  தேடிப்பார்த்தேன். படித்தவற்றை தொகுத்து கொடுத்திருக்கிறேன். படித்த பின் புத்திசாலித்தனம் இல்லாமல் அப்பாவியாக இருந்ததால்தான் நடிகை சாவித்திரியின் பிற்பகுதி வாழ்க்கை மிகவும் சோகமாக போனது என்ற விசயம் என் மனதிற்கு தோணியது.

படித்துப் பாருங்கள்.



* நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகதுறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

* எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார்.

* தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.

* தமிழில் குழந்தை உள்ளம் பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

* மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி தந்திருக்கிறார் சாவித்திரி.



திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர் காதல் மன்னன் என்றழைக்கப்படும் ஜெமினி கணேசனை "மணம் போல் மாங்கல்யம்" என்ற படத்தில் நடித்த போதுதான் காதலிக்க ஆரம்பித்தார்.   கி.பி. 1956-ல் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அன்றைய நாட்களில் வெளி வந்த லக்ஸ் விளம்பர அட்டையில் சாவித்திரி கணேசன் என்று கையெழுத்துப் போடும் போதுதான் ஜெமினி கணேசனை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்தது. ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசனை அவர் இரண்டாம் திருமணம் செய்த பின் சில காலம் சந்தோசமாகச் சென்றது. அவர் விஜய சாமுண்டேஸ்வரி மற்றும் சதீஸ் என்ற இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார். குழந்தைகள் வளர்ப்பில் ஸ்டிரிக்டாகவும், ஒழுக்கமாகவும், மிகுந்த அன்பாகவும் இருந்தார். தொலைகாட்சிகளே இல்லாத அந்தக் காலத்தில் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக 16MM புரஜெக்டரை வீட்டில் வைத்திருந்தார். இடது கை பழக்கம் உடையவர். கிரிக்கெட் மேல் அலாதி பிரியம் கொண்டவர். சென்னையில் சிவாஜி கணேசனுடன் ஸ்டார் கிரிக்கெட் மேட்சில் கலந்து விளையாடி இருக்கிறார். சாவித்திரி பொதுவாக இரக்க சுபாவம் உடையவர். எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகுவார். ஆனால் அப்பாவி. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.  அவரது அப்பாவித்தனத்தை நிறைய பேர் சுயலாபத்துக்காக பயன்படுத்தினர். உதவும் மனப் பான்மை கொண்டவர். ஒரு முறை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியைச் சந்தித்து தனது தங்க, வைர நகைகளை பிரதமரின் ரிலீஃப் பண்ட்-க்காக கொடுத்திருக்கிறார்.

சாவித்திரி வசதியாக இருந்த போது, காலில் தங்கக்கொலுசு அணிந்தார். 
"தங்க நகை என்பது லட்சுமிக்கு சமம். தங்க நகைகளை கழுத்திலும், கையிலும் அணியலாம். காலில் அணியக்கூடாது" என்று பெரியவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தங்கக் கொலுசுகளைக் கழற்றிவிட்டு, வெள்ளிக்கொலுசு அணியலானார்.

இந்த சமயத்தில் தனது காதல் கணவர் , தன்னை விட்டு பிரிந்து, முதல் மனைவியிடம் சென்றபின். நொடித்துப் போனார். அப்புறம் கடன் வாங்கி சொந்தமாகப் படங்கள் எடுத்து நஷ்டப்பட்டு, இருந்த வீடு, சொத்துக்களை விற்று அண்ணா நகரில் வாடகை வீடு எடுத்து குடியிருந்தார்.ஜெமினிகணேசனைப் பிரிய நேரிட்டதாலும் மனம் உடைந்த அவர், துக்கத்தை மறப்பதற்காக மது அருந்தலானார். நாளடைவில் மதுவுக்கு அடிமையானார். அதனால் அவர் உடல் நலம் சீர்கெட்டது.

இடையில் "புகுந்தவீடு", "வல்லவனுக்கு வல்லவன்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

சுருக்கமாகச் சொன்னால், "பிராப்தம்" படத்துடன் தமிழ்ப்பட உலகில் சாவித்திரி சகாப்தம் முடிந்து விட்டது.
01-05-1980  அன்று மைசூரில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்காக நடிகை சாவித்திரி பெங்களூர் சென்றார். பெங்களூரில் "சாளுக்கியா" என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் அவர் அறையில் மயங்கி விட்டார்.

அப்புறம் அன்று காலை அவர் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாவித்திரியை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தவர், சரோஜாதேவி. அன்றைய முதலமைச்சர் குண்டுராவை சந்தித்து, சாவித்திரிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

உடனடியாக ஜெமினிகணேசன் பெங்களூருக்கு விரைந்து சென்றார். சாவித்திரியைப் பார்த்து கண் கலங்கி அருகிலேயே இருந்தார். கோமா நிலையில் இருந்த அவர் பின்னர் உணர்வு நிலைக்குத் திரும்பினார். இருப்பினும் சில மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து பெற்றார். இடையில் "ஆ..அம்மா" என்ற வார்த்தையை மட்டும்தான் உச்சரித்தார்.

டிசம்பர் 26, 1981 அன்று மறைந்து விட்டார்.

அவரின் கடைசி நேரத்தில் எடுத்த புகைப்படம் இது.


இவரைப் பற்றி ஒரு பிரபல எழுத்தாளர் சிவசங்கரி தனது அனுபவத்தை எழுதியுள்ளார்……..கீழே வெளியிட்டுள்ளேன்.

அன்று…
அப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?
பத்து..? பதினொன்று..?

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!

எங்கு பார்ப்பது? எப்படிப் பேசுவது?

”பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு.” தெருப் பெயர், வீட்டு நம்பர் தெரியாது. யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி வீடு எது?’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம். பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று, சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.

எங்கள் அதிர்ஷ்டம்… மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார். ஓட்டமும் நடையுமாக அந்த வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக, நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது.

பொசு பொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு, கேட்டைத் தாண்டி, போர்ட்டிகோவில் நின்றோம்.

”எவரும்மா அதி?” – தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.

”சாவித்திரியைப் பார்க்கணும்.”

”அதெல்லாம் முடியாது. அவங்க வீட்டுல இல்லே!”

”இப்பப் பார்த்தோமே, தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே..!”

”அது சாவித்திரி இல்லே, அவங்க அக்கா! போங்க, போங்க..!”

மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், அடுத்த நிமிஷம்… யார் செய்த புண்ணியமோ, சாவித்திரியே வாசலுக்கு வந்து விட்டார்.

மேக்கப் போட்ட முகம்; கோடு போட்ட ஷிபானோ ஏதோ… மெல்லிய புடவை; திலகம்; சிரிப்பு; அழகு.

”யாரும்மா?”

”நாங்க உங்க ஃபேன்ஸ். ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.”

”அப்படியா? ஷூட்டிங்லேர்ந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப்
போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?”

”ஆட்டோகிராப்…”

”அவ்வளவுதானே… கொடுங்க.”

நீட்டிய புத்தகத்தை மாரீஸ் மைனர் கார் மேல் வைத்து ‘சாவித்திரி’ என்று இடது கையால் கையெழுத்துப் போட்டார்.

கிட்டத்தில் – ரொம்பக்கிட்டத்தில், அவர் சேலை நம் மேல் படுமளவுக்குக் கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

நாங்கள் ”மனம்போல மாங்கல்யத்தில் உங்க நடிப்பு பிரமாதம்” என்று சொல்லவும், அவர் சிரித்தார். ”தாங்க்ஸ்” என்றார்.

அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனசில் பசுமையாக இருந்தது நிஜம்.

இன்று…

சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்து ஒரு வருஷமாகிவிட்டது!

அண்ணா நகர்; சின்ன வீடு; வாசலில் பழசாகி, உதிரும் நிலையில் ஒருதென்னங்கீற்றுப் பந்தல்.

நுழைந்ததும் ஒரு ஹால்.

மேஜை மேல் – ஒருக்களித்து உட்கார்ந்து, தலையை மேலே நிமிர்த்தி, கூலிங்கிளாஸ், பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம். ஈரம் பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்! மங்கி,
பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு…

கிழிந்த அழுக்கு சோபாக்கள், காற்றில் ஆடும் பழைய கர்ட்டன்கள், சொறி பிடித்த வெள்ளை நாய் ஒன்று….

முன்கூட்டியே தெரிவித்துவிட்டுச் சென்றதால் மகன் சதீஷூம், உறவினர்
வெங்கடரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

”அம்மகாருவைப் பார்க்கிறீங்களா?”

உள்ளே இன்னொரு அறைக்குள் நுழைகிறோம்.

படுக்கையில் எலும்புச்சுருளாக அவர். ரொம்ப சூம்பிப் போன கை, கால்கள்…
கறுத்துப்போன தோல்… மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி. மூடின கண்கள்; மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய்; மழமழவென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி, மடித்துக் கட்டப்பட்ட முடி; சிவப்புப் பொட்டு.

”அம்மகாரு ச்சூடு… அம்மகாரு இக்கட ச்சூடு! மீ ப்ரெண்ட் ஒச்சுண்டாரு…
ச்சூடும்மா” என்று நர்ஸூம் பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி
மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.

உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும், அப்படியும் சுழற்றுகிறார்; மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக் நக்’ கென்று கடிக்கிறார்; அரை நிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி, அமைதியாகிறார்.

ஹோ… சாவித்திரியா! இவரா!

நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி, உதட்டசைவால் அனைவரையும் ஆக்கிரமித்து, நடிகையர் திலகம் என்ற பட்டப் பெயரோடு பவனி வந்த சாவித்திரி இவரா?

இல்லை, இல்லை… நம்பமாட்டேன்! சத்தியம் பண்ணினாலும் இது சாவித்திரி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன்.

கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தைச் சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்து கொள்கிறேன். கவனத்தை அறையின் மற்ற விவரங்களில் செலுத்துகிறேன்.

ஒரு பக்கமாய் ஸ்டெரலைஸ் செய்யும் பாத்திரம்… ஒரு மேஜையில் காம்ப்ளான், ப்ரொடீனெக்ஸ், மருந்துகள்… உடம்புப் புண்களைத் தவிர்க்க ‘ஆல்ஃபாபெட்’ என்ற படுக்கையை உபயோகிக்கிறார்கள்.

இது குமிழ் குமிழான ரப்பராலான படுக்கை. மின்சாரத்தில் இயங்கி, சிறு அலைகளை உண்டாக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உண்டாக்கி, நோயாளியின் உடம்பை ரணத்திலிருந்து காக்கிறது.

”இந்தப் படுக்கை இல்லேன்னா அம்மகாரு நிலைமை மோசமா ஆகி யிருக்கும்…”

இதைத் தவிர டானிக், மருந்து வகையறா… முழு நேர நர்ஸ் ஒருவர்…

சாவித்திரிக்கு பெங்களூரில் கோமா வந்தபோது அதை முதலில் பார்த்த நபர் சாவித்திரியின் பதினாறு வயசு மகன் சதீஷ் தான்.

”ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால, அம்மா இன்ஸூலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இஞ்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்ப அம்மா வாயில நுரையோட, நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை அம்மாவுக்கு ‘கோமா’ வந்து, உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறைதான் ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க” என்கிறார்.

நாலு பேராய், பத்துப் பேராய் சாவித்திரிஅபிமானிகள் யார் யாரோ வந்து, ஜன்னல் வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பேரின் அன்புக்கும் பரிவுக்கும் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கவேண்டும். தனித்துத் தவிக்கும் பிள்ளைக்காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும்.


** சிவசங்கரி **

அவரின் நினைவாக இந்திய அஞ்சல் துறை நினைவு தபால் தலையை பிப்ரவரி 13 2011 அன்று வெளியிட்டது.

அவரின் வாழ்க்கையைப் படித்துப் பார்க்கும் போது, எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. புத்திசாலித்தனமாக பிழைக்க வேண்டும். எது நடந்தாலும் நொடித்துப் போகக் கூடாது.

Wednesday, August 10, 2011

தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும்


சூர்யாவின் முப்பரிமாண நடிப்பில் விரைவில் வெளி வரும் 'ஏழாம் அறிவு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் போதி தர்மர் என்ற யோகியின் கதாபாத்திரம். அந்த போதி தர்மர் கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காஞ்சிபுரத்தில் பிறந்த ஒரு தமிழனுடைய வரலாற்றைச் சொல்கிறது. அவரின் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போமா..

போதி தருமன் - 1887ஆம் ஆண்டு யோஷிடோஷி என்ற கலைஞரால் வரையப்பட்ட ஒரு படம்


காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மன் IV-க்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்(பௌத்தவர்மப் பல்லவன்).  கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்:

1. நந்திவர்மன் I
2. குமாரவிஷ்ணு II
3. புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே  பல்லவ மன்னன் கந்தவர்மன் IV, மகனின் குருகுல வாழ்க்கைக்காக பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார் . இவர் காஞ்சியில் தங்கி பௌத்த சிந்தனைகளைப் பரப்பி வந்தவர். சிறுவன் போதியின்  அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது குருவாக போதியை  நியமிக்கிறார். காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத் தேர்கிறார்.  இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. காஞ்சியிலிருந்து நாலந்தா சென்று அங்கிருந்து கி.பி.526-ல் தெற்கு சீனாவிற்குச் செல்கிறார் போதி தர்மர்.போதிதர்மாவின் காலம்  கி.பி.475-550 என்று பதிவுகள் கூறுகின்றன.

அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில் கொண்ட ஈடுபாட்டால் பௌத்த  ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப் பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான  போதி தர்மரை கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும், அன்போடும் உபசரித்து சீனாவில் தங்கிவிட  வேண்டுகிறார். அங்கு ஷாஓலின் என்ற இடத்தில் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர், தமிழகத்தில் தான் கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர் கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.


போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும் சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.

அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.


போதி தர்மர் வாழ்ந்த இடத்தை சீனாவில் "ஷாஓலின் கோயில்" என்று இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள்.  அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘தென் இந்தியாவிலிருந்து வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை  குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர். இந்த ஆதாரத்துடன் ஏழாம் அறிவு படத்தை மிரட்டலாக எடுத்திருக்கின்றனர்.

குங்ஃபு கலையை சீனாவிற்கு அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்ற விசயம் நிச்சயம் பெருமையான விசயம்.  போதி தர்மர் வளர்த்த கலையை இன்றும் சீனாவில் தலைமுறை தலைமுறையாக கற்று வருகின்றனர்.

இந்த பதிவுடன் போதி தர்மர் கற்றுக் கொடுத்த குங்ஃபூ கலையின் முழு நீள டாக்குமெண்டரி வீடியோவை வெளியிட்டுள்ளேன். இதில் வரும் ஆக்சன் காட்சிகளைக் காணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

நம்ம சூர்யா வீடியோவில் வருவதைப் போல சண்டை போடுவாரா?. அப்ப படம் நிச்சயம் சூப்பராக இருக்கும். மேலும் எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் பர்பெக்ஷ்னாக நடிப்பவர் சூர்யா. இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அவரின் ஆக்சன் காட்சிகளைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறது. பார்க்கலாம் எப்படி நடித்திருக்கிறார் என்று.


***********************************************