Sunday, February 19, 2012

மற்றவை - முப்பொழுதும் உன் கற்பனைகள்:விமர்சனம்


          * முப்பொழுதும் உன் கற்பனைகள் *
 
சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரியும் ஸ்மார்ட் இளைஞரான அதர்வாவை சுற்றி பெண்கள் கூட்டம். வலிய வந்து அதர்வா மீதான காதலை சொல்லும் ஒர் பெண்ணிடம் , தான் சாரு என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்கிறார். "மேலும் அவளிடம் பழகினால், பெண் என்பதையும் மறந்து நீயும் அவளை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்" என்று தன் காதலியைப் பற்றி  சொல்கிறார். வார விடுமுறை நாட்களை பெங்களூரில் இருக்கும் காதலியுடன் கழிக்கிறார். இந்நிலையில் அதர்வா பணிபுரியும் கம்பெனிக்கு புதிய சி.இ.ஓ ஆக அமெரிக்காவிலிருந்து அமலாபால் (இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் முடித்து விட்டு ) வருகிறார். அதர்வாவைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். ஏனெனில் அதர்வாவிடம் பழகிய பெண் அவர்தான். அப்படி இருக்கையில் பெங்களூரில் இருக்கும் அதர்வா காதலி யார்? என்ற குழப்பதுடன் இருக்கிறார். குழப்பத்துடன் அவர் காதலி குடியிருக்கும் பெங்களூர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு அதிர்ச்சியான விசயங்கள் தெரியவருகிறது.அது என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதர்வாவின் நடிப்பு:
பாணா காத்தாடியில் இருந்த அதர்வாவை விட இதில் ஆள் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சண்டைக் காட்சிகளில் நிறைய உழைத்திருக்கிறார். அடுத்து வரப்போகும் பாலாவின் படத்தில் இன்னும் நிறைய திறமையை எதிர்பார்க்கலாம்.

அமலாபாலின் நடிப்பு:
அதர்வாவின் கற்பனைக் காதலி சாருவாகவும், சாப்ட்வேர் கம்பெனி சி.இ.ஓ லதாவாகவும் இரு வேறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதர்வாவின் காதலியாக வரும் காட்சிகளில் அதர்வாவுக்கும் அமலாபாலுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. சி.இ.ஓ கேரக்டர் அவ்வளவாக ஒட்ட வில்லை.

இயக்குனரின் திறமை:
மேக்கிங்கில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆனால் அதர்வா கொலை செய்ய வரும் காட்சிகளில் ஏன் முகத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார்? வித்தியாசமான மேக்கிங்க் தருவதாக நினைத்துக் கொண்டு நிறைய குழப்பி இருக்கிறார். தொடர்ச்சியாக பாடல் காட்சிகள் வருவதை தவிர்த்திருக்கலாம். ப்ளாஸ்பேக் காட்சிகளில் வரும் அதர்வாவின் அம்மா நடிப்பும், காட்சியமைப்பும் நன்றாக உள்ளது.

இசை:
ஜி.வி.ப்ரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ஓ.கே. மற்றபடி படத்திற்கு தேவையான பிண்ணனி இசையை கொடுத்திருக்கிறார். பாராட்டும்படி  இல்லை.

ஒளிப்பதிவு:
படத்தில் பாராட்டும்படி இருப்பது ஒளிப்பதிவுதான். நிறைய காட்சிகளில் அழகான ப்ரேம்களை ஒளிப்பதிவாளர் தந்திருக்கிறார்.

நாசர், ஜெயப்ரகாஷ்,அனுபமா குமார் போன்றோரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. சந்தானம் வரும் காட்சிகளில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் சிரிக்க முடிகிறது.

முப்பொழுதும் உன் கற்பனைகள - ஆவரேஜ்


*****************************************************

2 comments:

RAMA RAVI (RAMVI) said...

விமர்சனம் நன்றாக இருக்கு. அதர்வக்காக பார்க்கலாம்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! நன்றி நண்பரே !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...