Wednesday, June 12, 2019

Review: Goodbye Madame Butterfly written by an intelligent Japanese Woman Reporter Sumie Kawakami


முன்பெல்லாம் ஜப்பானிய மக்களைப் பார்க்கும் போது, அவர்களின் மேல் ஒரு மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால் இப்போது இவர்களும் நம் இந்திய மக்களைப் போலத்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
காரணம் என்னவென்றால்,  சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானிய பத்திரிக்கையாளர் எழுதிய ஒரு புத்தகம் ஆங்கில வடிவில் எனக்கு கிடைத்தது.

சுமியே கவாகமி( Sumie Kawakami ) என்பவர் எழுதிய "Goodbye Madame Butterfly" தான் அது.

 இந்த புத்தகம் படித்து முடித்தவுடன்,  இளைய வயது முதல் முதிய வயது வரை நவ நாகரீக உடையில் நகர் முழுவது வலம் வரும்  இந்த ஜப்பானிய பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்வியல் முறையில் இவ்வளவு சிக்கல்களாக என்று நினைக்காமல் இல்லை.



இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த விசயம். எழுத்தாளர் இந்த புத்தகத்தை,  இன்றைய ஜப்பான் நாட்டு நாகரீக கலாச்சாரத்தில் தற்போது வாழ்ந்து வரும் சில ஆண்கள் மற்றும் நிறையபெண்கள் 100 பேரிடம் பழகி , பேட்டி எடுத்து அவர்களின் வெவ்வேறு வகையான வாழ்க்கை நிகழ்வுகளை அத்தியாயங்களாக தொகுத்து வழங்கியதுதான்.

எழுத்தாளர் சொல்ல வந்த விசயம் என்னவென்றால்,
 "மனிதனின் இயல்பான வாழ்வியல் விசயங்களான  இளமை , காதல் , அலுவலகம், வேலை, திருமணம், தாம்பத்யம், விவாகரத்து, வேறொரு நபருடனான அன்பு, காமம், பிரிவு, துக்கம், தனிமை இவை அனைத்தும் ஜப்பான் நாட்டின் பெண்கள் மற்றும் ஆண்கள் சமுதாயத்திலும் உண்டு. பெரிதாக சொல்லும்படி அவர்களின் வாழ்க்கை மேன்மையானது இல்லை, அவர்களின் மனதிலும் நிறைய சோகமும் உள்ளது", என்பதுதான்.  

குழந்தை பிறந்த பின்பு, கணவன் மனைவியை பார்க்கும் விதம்("தாய்") கொஞ்சம் இயல்பானதாக இல்லை என்றும் எனக்குத் தோன்றியது.

பெரும்பான்மையான ஜப்பானிய குடும்ப பெண்கள் சந்தோசமாகவே இல்லையா? என்றும் நினைக்கத் தோன்றியது.


மேலும் இந்த புத்தகத்தைப் படித்த பின்பு ஜப்பான் நாட்டு பெண்கள் மற்றும் ஆண்களின் மேல் கொஞ்சம் பரிதாப உணர்வு வரும். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அது நமது தமிழ் கலாச்சாரம்.  தனி மனித ஒழுக்கம், பெற்றோரின் பேரன்பு, பிள்ளைகளின் மீதான அரவணைப்பு(திருமணத்திற்கு முன்/பின்),  எதிர்கால வாழ்க்கை அமைக்க உதவி செய்தல், பேரன் பேத்தி வளர்ப்பு, இறை பக்தி, தியானம் இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.!

தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, ஜப்பான் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்களின் "அடுல்டரி சம்பந்தமான அவர்களின் விளக்கம் ( "உடல் வேறு , மனம் வேறு" )", எனக்கு மிகவும் விசித்திரமாகப் படுகிறது. 
மேலும் 40 வயதிலும் கூட கன்னித்தன்மையுடன் வாழும் சில ஆண் மற்றும் பெண் வாழ்வியல் முறை எனக்கு மனித வாழ்க்கையின் சோகமான விசயமாகத்தான் நினைக்கமுடிகிறது.


நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். நிச்சயம் நிறைய தெரிந்து கொள்வீர்கள்.

இப்போதெல்லாம் , சாலைகளில் நடக்கும் போது, ஜப்பான் நாட்டு பெண்கள் மற்றும் ஆண்களைப் பார்க்கும் போது, இவர்களின் ஒவ்வொருவருக்குள்ளும் " இரட்டை முகங்கள்..!" தான் இருக்கின்றன என்று அனு தினமும் எண்ணி வருகிறேன். நாமும் அப்படித்தானே..!


!------------------------------------------------------------------------------------------------------------------------!

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...