Wednesday, October 26, 2011

மற்றவை:வேலாயுதம் விமர்சனம்

* மற்றவை:வேலாயுதம்  விமர்சனம் *


இந்த வருட தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்களில் எது வெற்றி பெறும், எது ப்ளாப் என்ற கேள்விக்கு இந்த விமர்சனத்தில் பதில் கிடைக்கும். இப்போது விஜய்-ந் வேலாயுதம் படத்தைப் பற்றி பார்ப்போம்.


ஜர்னலிஸ்ட் ஜெனிலியா, தன் சக நண்பர்களுடன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தாதாக்கள் செய்யும் அண்டர்கிரவுண்ட் தொழில்களை எல்லாம் கண்டுபிடிக்கும் போது அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போது நண்பர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். ஜெனிலியாவையும் கத்தியால் குத்திவிட்டு உடலை வீசி விடுகின்றனர். அந்த சம்பவத்தில் ரவுடிகளும் தவறுதலாக செத்து விடுகின்றனர். உயிர் பிழைத்த ஜெனிலியா, சூப்பர் ஹீரோ வேலாயுதம் என்ற ஒரு கற்பனை மனிதனை உருவாக்கி, சூப்பர் ஹீரோ வேலாயுதம் தான் ரவுடிகளையும்  அழித்தான் , மேலும் தவறு செய்பவர்களை அவன் நிச்சயம் அழிப்பான், என்ற ஒரு பொய்யான தகவலை மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நம்புமாறு செயல்களை செய்கிறார். இந்நிலையில்   தங்கச்சியின் திருமணத்திற்காக , சிட்பண்டில் சேமித்த பணத்தை பெற்றுக் கொள்ள சென்னைக்கு வருகிறார் வேலாயுதம் என்கிற பால்காரர் விஜய். வில்லன்களின் ஒவ்வொரு ப்ளான்களும் சந்தர்ப்பவசத்தால்  விஜய்யின் மூலம் நிறுத்தப்படுகிறது. மக்களும் மீடியாக்களும் வேலாயுதம் என்கிற சூப்பர் ஹீரோ தான் வில்லன்களின் ப்ளான் களை நிறுத்துவதாக நம்புகின்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யே நிஜ வேலாயுதமாக மாறி வில்லன்களை அடக்குகிறார். இதனால் வில்லன் கூட்டம் அவரை கொல்ல நினைத்து, பாம் வைக்க, அதில் விஜய்யின் தங்கச்சி இறந்து போகிறார். இதனால் வெகுண்டெழும் விஜய் வில்லன்களை அழிக்கிறார். இதுதான் படத்தின் கதை.

விஜய்யின் நடிப்பு:
காமெடி, டான்ஸ், ஆக்சன் என அனைத்து விசயங்களிலும் விஜய் தனது வழக்கமான பாணியை செய்திருக்கிறார். அவ்வப்போது, தங்கச்சியிடம் பாசத்தில் உருகுகிறார். முறைப் பெண் ஹன்சிகாவை டீசிங்க் செய்கிறார். சந்தானத்துடன் காமெடி செய்கிறார். ஆக்சன் காட்சிகளில் விஜய் மிரட்டுகிறார்.
சூர்யா தன் படங்களில் தன் சிக்ஸ்பேக் உடலைக் காட்டுவது போல, விஜய்யும் ஒரு காட்சியில் தன் உடலைக் காட்டுகிறார். சூர்யாவிடம் இருக்கும் சிக்ஸ் பேக் விஜய்யிடம் இல்லை. இருப்பினும் ஒரு பில்டப்பிற்காக அப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். 

ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன் அனைவரும் தங்கள் கடமையை செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.

விஜி ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஆவரேஜ்தான், ரத்தத்தின் ரத்தமே பாடல் திரையில் பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. பிண்ணனி இசையும் நன்று.

ஒளிப்பதிவும் மிக நன்று.


 எப்போதும் ரீமேக் படங்கள் எடுக்கும் இயக்குனர் ராஜா , இந்தப்படத்தில்தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ் பற்றி நினைத்து,
அவருக்கு ஏற்ற ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். பக்கா கமர்சியல் கதையை எடுத்து, அதற்கேற்ற வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் சந்தானத்தின் காமெடி சிரிக்கும்படி சிறப்பாக உள்ளது. ஆக்சன் சீன்கள் மிரட்டலாக உள்ளன. ஏழாம் அறிவை விட, வேலாயுதம் பெட்டர்.

வேலாயுதம் - கமர்சியல் மசாலா எண்டெர்டெயின்மெண்ட்
கமெண்ட் கார்னர் - விஜய் ரசிகர்களுக்கும், மசாலா பட பிரியர்களுக்கும் இந்தப்படம் ஒரு சரவெடி.


*******************************************************


மற்றவை: ஏழாம் அறிவு - விமர்சனம்

                 * ஏழாம் அறிவு - விமர்சனம் *


மக்கெல்லாம் தெரியாத ஒரு தமிழனின் வரலாற்றுச் சிறப்பை சொல்லியிருக்கும் படம்தான் ஏழாம் அறிவு. 1600ம் ஆண்டில் காஞ்சிவரத்தை தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்த பல்லவ மன்னர்களில், போதி தர்மர் என்ற இளவரசனின் வாழ்க்கைதான் படத்தின் கரு. போதி தர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவான இதை "தெரிஞ்சுக்கோங்க - போதி தர்மரும் 'ஏழாம் அறிவு' சூர்யாவும் " க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இனி படத்திற்குப் போவோம்.

1600ம் ஆண்டில் சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வித புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றனர். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி , தனது கடமையைச் செய்ய அந்த கிராமத்திற்கு சென்ற போதி தர்மரை, அந்த கிராமத்து மக்கள் அவரை அனுமதிக்க மறுக்கின்றனர். அதனால் அவர் ஊரின் எல்லையில் ஒரு குகையில் வாழ்கிறார். ஆபத்தான அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவர் குணப்படுத்தி விடுவதால் , அதன் பின் அம்மக்கள் அவரை வணங்குகின்றனர். எதிரிகளின் படையெடுப்பிலிருந்து  மக்களைக் காத்துக் கொள்ள , போதி தர்மர் அவர்களுக்கு தற்காப்புக் கலையைச் கற்றுக் கொடுக்கின்றார். தனது கடைமையை முடித்து, சொந்த ஊருக்கு செல்ல விளையும் போது,  அவர் உடல் அந்த மண்ணில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உணவில் விசம் வைத்து அவரை கொன்று விடுகின்றனர். காலம் உருள்கிறது. தற்காலத்தில் சீனாவில் இருப்பவர்கள் திரும்பவும் அந்த நோயை இந்தியாவில் பரப்பி, இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கின்றனர். அந்த நோயைப் பரப்புவதற்கு போதி தர்மரின் அனைத்துக் கலைகளையும் கற்றுள்ள ஒரு சீன இளைஞனை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறார்கள்., போதி தர்மரின் அனைத்து திறமைகளையும் , அவரது டி.என்.ஏ. வைக் கொண்டிருக்கும் அவர் சந்ததியில் வந்த ஒருவருக்கு  தூண்டச் செய்து திரும்பவும் போதி தர்மரின் திறமைகளையும் வெளிக்கொணர ஒரு மரபியல் துறை ஆராயச்சி மாணவி முயல்கிறார். அவரை அழிக்க அந்த சீன இளைஞன் முயல்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க!

சூர்யாவின் பர்பெக்டான நடிப்பு, இந்திய சினிமாவில் முக்கியமானவராக உருவாகியிருக்கும் இயக்குனர், தலை சிறந்த ஒளிப்பதிவாளர் என டாப் லெவல் நபர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு ஏக போக எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? மேலும் படியுங்கள்.

பர்பெக்ஷனிஸ்ட் சூர்யா படத்தில் தன் பங்கை அருமையாக செய்திருக்கிறார். அந்த போதி தர்மர் கேரக்டர், சர்க்கஸ் இளைஞன் என இரண்டிலும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. பாராட்டுக்கள் சூர்யா. க்ளைமாக்ஸ் ஆக்சன் சீனில்  சூர்யாவின் உழைப்பு தெரிகிறது. வெல்டன் சூர்யா.

கமலின் வாரிசான ஸ்ருதி முதன் முதலில் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். டப்பிங்கும் அவரே. படத்திற்கு இவருடைய கேரக்டர்தான் மிக மிக முக்கியமானது. நடிப்பில், தான் கமலின் வாரிசுதான் என்பதை நிரூபித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார்.

படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் திறமையும் சிறப்பும் படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. அட்டகாசம். "முன் அந்தி சாரல் "பாடலை எடுத்த விதம் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
 

இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கில்லை. காட்சிக்கேற்ப பிண்ணனி இசை உள்ளது. பாடல்கள் ஒக்கே.

படத்தின் இயக்குனரான முருகதாஸ், இந்த படத்தில் ஒரு தமிழனின் பெருமை மறைக்கப்பட்டிருப்பதை ஆதங்கத்துடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தமிழன் அடக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை படத்தின் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு மனிதர் காஞ்சிவரத்தில் இருந்தாரா? என்று நினைக்கும் வண்ணம் அவரது சிறப்பை, முக்கியத்துவத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

 
அருமையான கதை இருந்தும் , அட்டகாசமான திரைக்கதையுடன் விறு விறுப்பாக எடுத்திருக்கவேண்டிய படம் இது. ஆக்சன் சீன்கள் நிறைய வைப்பதற்கு படத்தில் வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் அதனை செய்யாதது படத்திற்கு மைனஸ்தான். படம் மென்மையாகத்தான் செல்கிறது. அட்டகாசமான தொடக்கத்துடன் படத்தின் ஆரம்பத்தில் பயமூட்டிய வில்லன் நடிப்பு, படம் முழுவதும் ஒரே மாதிரி பார்ப்பது, வசியம் பண்ணுவது போன்ற காரணத்தால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஒரு காட்சியில் சாக்கடை அல்லுபவர்,ரோட்டில் செல்லும் ஒரு பெண் போன்றவர்கள் எல்லாம் வில்லனின் வசியத்தால் திடீரென்று குங்க்-பூ ஸ்டைலில் சூர்யாவை அடிப்பது பார்க்க காமெடியாக உள்ளது. இருந்தாலும் சூர்யாவிற்காகவும் , ஸ்ருதிக்காகவும், ஒளிப்பதிவிற்காகவும், போதி தர்மருக்காகவும் இந்தப் படத்தைப் ஒருமுறை பார்க்கலாம்.

ஏழாம் அறிவு - தமிழனின் வரலாறு.
கமெண்ட் கார்னர் - விறு விறுப்பு குறைவு.

****************!!**Happy Diwali**!!*************

Saturday, October 22, 2011

தெரிஞ்சுக்கோங்க - ஸ்டீவ் ஜாப்ஸ்



நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.

மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது.


நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்குமளவு முன்னேறியிருந்தார். பில் கேட்ஸ் அவ்வளவு பணம் சம்பாதிக்க அவரும் ஒரு காரணம். ஏன், அவர் தான் காரணம் என்றும் சொல்லலாம்.. மென்பொருள் எழுதுபவரா என்று கேட்க வேண்டாம். சம்பிரதாயத்திற்குக் கூட மென்பொருள் மொழிகளில் ஒரு வரி அவர் எழுதியதில்லை. மென்பொருளின் மகத்துவத்தை மிகவும் லேட்டாகவே புரிந்துக் கொண்டவர்!


கணினியை வீட்டிற்குள் கொண்டு வந்த அவரால், வீட்டுக்குள் வரும் உலகமான இணையத்தில் இணைய முடியவில்லை. ஆனால் இணையம் சிருஷ்டிக்கப்பட்டதே அவரின் சிருஷ்டியில்தான்.

கணினித் துறையின் முதல் அடியை எடுத்து வைத்த அவர், தமது முதல் கனவான கணினியைக் கடந்து மூவிஸ், மியூசிக், மொபைல் என மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டார்.

தற்காலத் தலைமுறை குழந்தைகள் கண்டுகளிக்க கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார், பலர் ஆஸ்கர் விருது வாங்கக் காரணமானார். உலகில் மொத்தமாக இருக்கும் பாடல்களை நம் பாக்கெட்டிற்குக் கொண்டு வந்தார். இசை இப்படித்தான் விற்கப்படும் என்ற வியாபார விதிகளை உடைத்தெறிந்தார். அமெரிக்க செல்போன் துறையைத் திகைக்க வைத்தார்.



ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் உருவான  விதம்:

சென்ற நூற்றாண்டில் உலகை மாற்றிய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பிறந்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்ததும் அங்கே தான்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோயன் கரொல் சியபல்-க்கும் (Joanne Carole Schieble) சிரிய நாட்டை சேர்ந்த அப்துல் பட்டா ஜான் ஜன்டாலிக்கும் (Abdulfattah John Jandali) உண்டான காதல் கருவாகியது.

அமெரிக்காவிலும் அக்காலத்தில் மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாட்டை விட்டுப் போகமுடியாது. ஆனால் இடம் மாறலாமே? நம் ஊரில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஏதாவது கண் காணாத ஊரில் பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் முடிவு செய்த இடம் சான் பிரான்சிஸ்கோ!


படிப்பை முடித்து பட்டம் வாங்கினால்தான் கல்யாணம் என்று அவர்கள் இருவருக்குமிடையே உறுதிமொழி இருந்திருக்க வேண்டும். அல்லது கல்யாணமே வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. அந்நாளில் ‘கருக்கலைப்பு' உண்டு என்றாலும்  அதுவும் ஆபத்தானது. எனவே, பிப்ரவரி 24, 1955-ல் பிறந்த அந்த ஆண் குழந்தையைத் தத்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

தத்தெடுக்கத் தயாராக இருந்த லாயர் ஒருவர், ஆஸ்தி இல்லாமல் இருந்திருப்பார் போல. பெண் பிள்ளைதான் வேண்டும் என ஆசையை மாற்றிக் கொள்ள, தத்தெடுக்க பதிவு செய்திருந்தவர்களில் அடுத்த இருந்த பவுல் ஜாப்ஸ் பவுலா ஜாப்ஸ் தம்பதிக்கு குழந்தை கைமாறியதன் விளைவு, அந்த குழந்தைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற நாமகரணம் ஆனது.

பவுல் ஜாப்ஸ் யார்?

அமெரிக்காவின் இண்டியானா மாநில விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர், பவுல் ஜாப்ஸ். பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கடற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் சண்டை எல்லாம் போட்டு சான்பிரான்சிஸ்கோவிற்கு வந்து ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தார்.

ஒய்வாக ஒதுங்கிய இடத்தில் பவுலா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். மணந்த பின்பு பிறந்த ஊர்ப் பக்கம் போனாலும், கலிபோர்னியா காந்தமாய் கூப்பிட்டது. அது கலிபோர்னியாவின் மகிமை. மீண்டும் சான்பிரான்சிஸ்கோவிற்கே வந்து சேர்ந்தார். பவுலா, பவுல் ஜாப்ஸ் தம்பதிக்கு எல்லாம் நலமாய் இருந்தும் ஏனோ அவர்களின் கெட்ட நேரம் குழந்தை பிறக்கவில்லை.  தத்து எடுக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபின் குழந்தை கிடைத்தும் கொஞ்ச முடியாத ஒரு சூழ்நிலை.

அம்மா கல்லூரிப் படிப்பை தாண்டவில்லை. அப்பா பள்ளிக்கூடத்தையே தாண்டவில்லை. இவர்களை நம்பி எல்லாம் எப்படிக் குழந்தையை தத்துக் கொடுப்பது என ஸ்டீவ் ஜாப்ஸை பெற்ற அம்மா பிடிவாதம் பிடிக்க, நாங்கள் படிக்கவில்லையென்றாலும் இவனைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைப்போம் என்று பலவாறாக ஜாப்ஸ் தம்பதியினர் உறுதிமொழி தந்தபின்தான் தடங்கல் நீங்கி தத்து நிறைவேறியது. ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பின்னரும் ஒரு பெண் குழந்தையை இவர்கள் தத்தெடுத்தனர்.


பள்ளிப் படிப்பு:

வாழ்வில் மிகப் பெரிதாக சாதித்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பள்ளிப் படிப்பு பாகற்காயாகத்தான் இருந்திருக்கிறது. இவன் தேறாதவன் என்ற வாத்தியார்களின் வாக்கைப் பொய்யாக்கியவர்கள். இந்த விதிக்கு ஸ்டீவ் ஜாப்ஸும் விலக்கல்ல.

பள்ளிப் படிப்பு போரடிக்கிறதென வகுப்பில் பாம்புகள் விடுவது பட்டாசுகள் வெடிப்பது எனப் போக்கிரியாய் திரிந்துகொண்டிருந்தவரை வழிக்குக் கொண்டு வந்தவர். Imogene “Teddy” Hill என்ற அவரின் நான்காம் வகுப்பு வாத்தியாரம்மா. நன்றாகப் படித்தால் காசு, மிட்டாய், விளையாட்டுப் பொருள் எல்லாம் தருவதாகக் கூறி அவரின் கவனத்தை படிப்பின்பால் திருப்பினார். வாத்தியாரம்மாவின் வாக்குறுதிகளை எல்லாம் கேட்டு இந்த அம்மாவிற்கு கிறுக்காயிருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டதாகவும், அவர் மட்டுமில்லையென்றால் ஜெயிலுக்குப் போகுமளவு மோசமானவனாக மாறியிருப்பேன் என்றும் பிற்கால பேட்டியில் சொல்லி அந்தக் கல்விக் கடனை தீர்த்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

வாக்குறுதியின் விளைவாக வீறுகொண்டு, விடாமல் படித்ததன் விளைவு, ஸ்டீவ்விற்கு டபுள் பிரமோஷன். ஆனால் மேல்வகுப்புகள் செல்லச் செல்ல, பள்ளி மீண்டும் பாகற்காயானது. பிறவிக் குணமான பிடிவாதம் எட்டிப் பார்த்தது. ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் காரணமில்லை. பள்ளி பிடிக்கவில்லை. மாற்றினால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் பிற்காலப் பிடிவாதங்கள் போலவே இந்தப் பிடிவாதமும் பிரமாதமான பிள்ளையாரானது. சுபமான வாழ்விற்குப் பிள்ளையார் சுழியும் போட்டது.


புதுப் பள்ளிக்காக அவர்கள் குடியேறியிருந்த இடம் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள். புதுப் பள்ளியும் எலக்ட்ரானிக்ஸ் கற்பிப்பதற்கு மிகவும் பெயர் பெற்றது. ஸ்டீவ் வளர்ந்தோரோ இல்லையோ அவரது எலக்ட்ரானிக்ஸ் அறிவு வளர்ந்தது..
[இன்னும் வளரும்...]

**********************************************

Wednesday, October 19, 2011

தெரிஞ்சுக்கோங்க - மதராசப்பட்டிணம்

                * மதராசப்பட்டிணம் *

தராசப்பட்டிணத்தின் அரிய பழைய போட்டோக்கள் எனது பார்வைக்கு கிடைத்தது.அதனைப் பார்க்கும் போது எப்படி இருந்த மதராசப்பட்டிணம் இப்போது எப்படி இருக்கு? என்று எண்ணத்தான் தோன்றியது. இன்னும் ஒரு 50 வருடங்கள் முன்னோக்கிப் போகும் போது நிச்சயம் இப்போது இருக்கும் சென்னை வேறு மாதிரியாக மாறி விடும். என்ன ஒரு காலத்தின் மாற்றம்...ஆச்சர்யமாகத்தான் இருக்கு...


Marina Beech


Moubrays Road

Mount Road


 Mylapore


 Parrys


Pycrofts Road


First Lane Beach



Central


Egmore 1912


Chennai Market (Kothaval Chawadi) 1939


Chennai Library 1913 (college studensama)


Chennai Marina beech 1913
 Multi complex Departmental Store 1883



எல்லா போட்டோக்களும் எப்படி இருக்குங்க?

**************************************************

Monday, October 17, 2011

மற்றவை- ஸ்பெஷல் நியூஸ்


உள்ளாட்சி தேர்தல் : சில முக்கிய விசயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், அனைத்து இடங்களிலும் ஏகபோகமாக நடந்தேறிய பணப்பட்டுவாடாவை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய தேர்தல் ஆணையம், சிறப்பாக செயல்பட்டதற்காக மக்களிடத்தில் நல்ல பேரை சம்பாதித்தது. ஓரளவு பணப்பட்டுவாடாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இன்று நடந்தேறிய உள்ளாட்சி தேர்தலுக்காக, எனக்குத் தெரிந்த வரை அனைத்து இடங்களிலும் மக்களுக்கு பணம், பாத்திரங்கள், சிலிண்டர் கனெக்சன், இன்னும் நிறைய விதத்தில் வேட்பாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்டன. நான் வசிக்கும் ஏரியாவில் கூட தே.மு.தி.க சார்பில் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.கோடிக்கணக்கில் பணத்தை வேட்பாளர்கள் செலவழித்திருப்பது, அவர்கள் ஓட்டு கேட்க வரும் போது நன்றாகத் தெரிந்தது.

எப்போதும் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு இப்போது தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் செயல் நடுநிலைமையாக இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதற்கு யார் காரணம்?

ஆளும் கட்சியினர் காவல்துறையினரின் துணையுடன் நிச்சயம் அவர்கள் நினைத்ததை செயல்படுத்திவிடுவர். எனவே அதிக பட்சமாக ஆளும் கட்சியினரின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பம் நிகழ வாய்ப்புண்டு. எந்தக் கட்சியினர் பெரும்பான்மை வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்..!
###################################################
இதர விசயங்கள்:

உள்ளாட்சி தேர்தலுக்குப்  பின் நடக்கவுள்ள விசயங்கள் இவைதான்:(எனது எண்ணத்தில் தோன்றியவை)

இத்தனை நாள் மெளனமாக இருந்த எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த், ஆளும் கட்சி மீதான தனது கசப்பை எதிர்ப்பாக காட்டுவார்.

ஜாமினுக்கு அப்பீல் செய்த கனிமொழிக்கு ஜாமின் கிடைத்து விடும்.

தயாநிதி விசயத்தில் சில விசாரணைகள் மட்டும் நடைபெற்று முடிவில் அவரது கைது விசயம் புஸ்வாணமாக ஆகலாம்.

உள்ளாட்சியில் ஒரு வேளை ஆளும் கட்சியினர் அதிகளவில் வெற்றி பெற்றால், அதற்கப்புறம் தி.மு.க.வினரின்  மீதான நில அபகரிப்பு + கைது நிகழ்ச்சிகள் இன்னும் தீவிரமடையும்.
###################################################

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் போது, 7ம் அறிவு, வேலாயுதம் படங்கள்தான் ரிலிஸுக்கு கன்பார்ம் ஆகியிருக்கிறது. சூர்யாவின் படத்தைப் பார்ப்பதில்தான் நிறைய பேருக்கு எண்ணம்.அப்புறம்தான் விஜய் படம். ஒரு வேளை 7ம் அறிவு வெற்றி பெற்று , வேலாயுதம் தோல்வி அடைந்தால் நிச்சயம் சூர்யாவின் மார்க்கெட் இன்னும் எகிறும். விஜய் தனது ரூட்டை மாற்ற வேண்டும்.

லேட்டஸ்ட் டெக்னாலஜியில் 3D தொழில் நுட்பத்தைக் கொண்டு சென்னை-மாயாஜாலில் நடத்திய ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நினைத்தமாதிரி
வெற்றியடையவில்லை. காரணங்கள் நிறைய உள்ளன..சொன்ன நாளில் நடத்தாமல் சில நாட்கள் கழித்து நடத்தியது, ஒளிபரப்பும் உரிமையை திடீரென்று விஜய் டி.வியிடமிருந்து , ஜெயா டி.விக்கு கைமாற்றியது என இன்னும் நிறைய. இப்போது கோயம்புத்தூரில் நடத்த வேண்டிய நிகழ்ச்சியைவேறு தாமதப்படுத்தியிருக்கிறார்கள்.. என்ன இருந்தாலும் நம்ம இசைப்புயல் ரஹ்மானை மிஞ்ச முடியுமா?
####################################################
விலைவாசி??:
 
சில மாதங்களுக்கு முன்பு நான் வாங்கிய மருந்து, மாத்திரைகள், இப்போது வாங்கிய போது அதிகபட்சமாக விலையேற்றப்பட்டிருந்தது தெரிந்தது. அதனைப்  பற்றிக் கேட்ட போது மருந்துப் பொருட்கள் மீதான் வாட் வரி ஏற்றியதால்தான் இந்த விலையேற்றம் என்று மெடிக்கல் உரிமையாளர்கள் சொன்னார்கள். 25 ரூபாய்க்கு விற்ற பட்டர் ஸ்காட்ஸ் ஐஸ் கிரிம் திடிரென்று ஏற்றிய விலையினால் இப்போது அதன் விலை 30 ரூபாய். பெட்ரோலின் விலை லிட்டருக்கு 70 ரூபாய். அடுத்த வருட முடிவிற்குள் நிச்சயம் பெட்ரோலின் விலை 85 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

மூன்று வருடத்திற்க்கு முன்பு ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்வது மிக அதிகபட்சமாக இருந்தது. ஆனால் இப்போது 100 ரூபாய் நினைத்த மாத்திரித்தில் பாக்கெட்டை விட்டு சென்று விடுகிறது. விலைவாசியை நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஊதியத்திலும் ஏற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் மகிழ்ச்சியடைவர். ஆனால் அது மட்டும் ஏன் நடக்கவே இல்லை...?  எங்கேயோ தப்பு இருக்குதுங்க...!
####################################################

நூறு கோடி மரங்கள் வளர்ப்போம் என்று தனது பிறந்த நாளில் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம். பணத்தின் தேவை அதிகமானதால் இருக்கின்ற விளை நிலங்களை ப்ளாட்டுகளாக மாற்றி,  சுற்றுப்புற சூழ்நிலையை மேலும் மேலும் வெப்பப்படுத்தி வரும் மக்களுக்கு அவரின் அழைப்பு புரியுமா? அவர் சொன்னதைப் போல் செய்தால் மீண்டும் ஒரு பசுமையான இந்தியாவை நாம் பார்க்கலாம். But இது நடக்குமா?
******************************************************









Saturday, October 01, 2011

மற்றவை: வாகை சூடவா விமர்சனம்

           * வாகை சூடவா விமர்சனம் *

றுபதுகளில் வாழும் படிப்பறிவில்லாத மக்களின் வாழ்க்கைதான் படத்தின் கதை களன் .அரசாங்க உத்யோகத்தில் தன் மகன் அமர வேண்டும் என்ற இலட்சியத்தில் இருக்கும் பத்திரபதிவு எழுத்தர் பாக்யராஜ். அவரின் மகனான விமல் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர். ஏதேனும் ஒரு ஊரில் சில மாதங்கள் கிராம சேவா என்ற அமைப்பின் கீழ் ஆசிரியப்பணி செய்தால் அரசாங்க உத்யோகம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தால் கண்டெடுத்தாங்காடு என்னும் ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறார். படிப்பறிவு சிறிதும் இல்லாது, செங்கல் சூளையில் வேலை செய்யும் உழைப்பாளிகள் அந்த ஊரின் மக்கள். சிறுவர்களும் கூட அங்கு வேலை செய்கின்றனர்.


எப்பாடுபட்டாவது அந்தச் சிறுவர்களுக்கு படிப்பறிவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் விமல். ஆனால் படிப்பின் மீது சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கின்றனர் அங்கு வாழும் மக்களும் அவர்களின் குழந்தைகளும். தொடக்கத்தில் இருந்தே அவருக்கு சில பல பிரச்சனைகள் அங்கு இருப்பவர்களால் ஏற்படுகிறது. இடையில் அங்கிருக்கும் டீக்கடை வைத்திருக்கும் கதாநாயகி இனியா , விமலை காதலிக்கிறார். தனது விருப்பத்தை விமலிடம் சொல்லியும் விடுகிறார். இனியாவின் காதலை விமல் ஏற்றுக் கொண்டாரா? சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடிந்ததா?அவருக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததா? பதில்களை வண்ணத்திரையில் காண்க.

விமலின் நடிப்பு:
கொடுத்த வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார் விமல். காலத்திற்கு ஏற்றார் போல் அவரின் கெட்டப் இருக்கிறது.க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது.
புதுமுகம் இனியாவின் நடிப்பு:
இன்னொரு கேரளத்து வரவு. நடிப்பும் மிக அருமை. விமலைப் பார்த்து குழைவது, விமலிடம் தன் காதலைச் சொன்னதற்கு அப்புறம் விமலின் பதிலைக் கேட்டு கலங்குவது போன்ற அனைத்து காட்சிகளிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்.அவருக்கும் காலத்திற்கு ஏற்றார் போல் மேக்கப்தான். 

பாக்யராஜ் படத்தின் முதல் காட்சியிலும் , கடைசியிலும் எட்டிப்பார்க்கிறார். "இனியாதான் தனக்கு சமைக்கிறார்" என்ற விமலின் பேச்சுக்கு அவர் பதில் சொல்லும் விதம் அக்மார்க் பாக்யராஜ் டிரேட் மார்க். பொன்வண்ணன் கெட்டவராக வருகிறார். நடிப்பும் ஒ.கே. படத்தில் சிறிது நேரம் கலகலக்க வைப்பது சிறுவர்களின் நடிப்புதான்.

இயக்குனரின் திறமை:
 60பதுகளில் இருப்பது போன்ற அருமையான செட்டை கலை இயக்குனரை அமைக்க செய்தமைக்காக இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம். ஒளிப்பதிவு அதற்கேற்றார் போல் இருக்கிறது. சிறுவர்களை நன்கு நடிக்கவைத்திருக்கிறார். ஆனால் கலகலப்பான காட்சிகள் நிறைய வைத்திருந்தாலும் களவாணியில் இருந்த இம்பாக்ட் இதில் இல்லை. படிப்பே வேண்டாம் என்று இருக்கும் மக்கள் மனம் மாறி படிக்க அனுப்பும் காட்சிக்கான காரணத்தை இயக்குனர் இன்னும் பலப்படுத்தி இருக்கலாம். அபியும் நானும் படத்தில் வேலைக்காரராக வருபவர் இதில் ஒரு பைத்தியக்காரர் போல வருகிறது. இரண்டு வரி வசனங்களை அவ்வப்போது சொல்கிறார். இடைவேளையின் போது ஒரு ஹைப் தருகிறார். ஆனால் அந்த ஹைப்பினால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அவருடைய காட்சியமைப்பு படத்திற்கு தேவையா? இயக்குனர் யோசிக்க வேண்டும். 
புதுமுக இயக்குனர் ஜிப்ரானின் இசையில் "செங்கல் சூளைக்காரா", "சர சர காத்து", "போறாளே" பாடல்கள் அருமை. பிண்ணனி இசை ஓ.கே.

சத்யராஜ்  நடித்த திருமதி பழனிச்சாமி படத்தின் கதையும் இந்தப்படத்தின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் சத்யராஜும், கவுண்டமணியும் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார்கள். இந்தப் படத்தில் அது இல்லாதது படத்திற்கு பலவீனம்தான். பொறுமையாகத்தான் படத்தைப் பார்க்க வேண்டும். 

வாகை சூடாவா - ஆவரேஜ்


********************************************************