Saturday, April 16, 2011

எனது படைப்புகள்-2

                                                        
                                காத்திருத்தல்...
                              ------------------------
                                              

அக்கம் பக்கம் பார்க்காம..
சிற்றின்பம் தேடாம...
சீக்கிரமா வீட்டுக்கு போ...
சீமான் வீட்டு சின்னராசு...

ரோட்டோரம் நின்னுக்கிட்டு...
கால் வலிக்க வேலை செஞ்சு...
நாள் கூலி வாங்கிக் கிட்டு...
சாயந்திரமா போகும்போது...

தெருவோரம் சைகை காட்டி...
கூப்பிடுவான் பங்காளி...
பக்கத்தில ' டாஸ்மார்க் '-கு...

அதைத் தாண்டிப் போகையிலே...
சிவப்பு நிற சேலைக்காரி...
பல்லிளிப்பாள் பணம் கறக்க...

மனசைக் கொஞ்சம் கல்லாக்கி...
மகிழ்வோட நடையைக் கட்டு...
மகராசி உன் புள்ள...
காத்திருக்கா தூங்காம...

இருந்த கொஞ்சம் அரிசிச் சோறு...
பெத்த புள்ள வயித்துக்காச்சு...
இனிமேல்தான் சமைத்திடுவாள்...
இன்றிரவு நீ வந்தால்...

அந்தி சாயும் வேளையிலும்...
அடுப்பின்னும் பற்றலையே...
அத்தை மகள் உனக்காக...
அமர்ந்திருப்பாள் ஆசையோடு...

கண்ணில் பல கனவோட...
கதவோரம் கண் விழிச்சு...
காத்திருக்கா பொஞ்சாதி - அதனால
நினைவோடு நீ கொஞ்சம்...
நினைத்துத்தான் பாரு ராசா...

**********************************************************

Friday, April 15, 2011

கடவுள் இருக்கிறாரா?






" பூஜைக்கேத்த பூவிது...", எனக்கு மிகவும் பிடித்த பாடல்..சித்ராவின் குரல்  
  அவ்வளவு இனிமை...

  இன்று அவரின் 8 வயது மகள் இறந்த செய்தியை கேட்டதும்...

  எனக்குள் ஏற்பட்ட சோகத்தை மறைக்க முடியவில்லை...

  14 வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை அவள்...என்று சித்ரா ஒரு
  பேட்டியில் சொல்லிருந்தார்...

  எப்படி இனி அவர், மகளை இழந்த துக்கத்தை ஆற்றமுடியும்..

  உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா...?

  இந்த மாதிரி சூழலில் எனக்கும் கடவுளின் மீது சந்தேகம் வருகிறது....

Thursday, April 14, 2011

எனது படைப்புகள்-1


                           ***** ஏனப்பா எனைப் படைத்தாய்..?*****

அல்லும் பகலும் அந்நியரிடம்,
அழுதழுது பெற்றுள்ளோம் சுதந்திரத்தை-இதனை
தவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...

ஓடித்திரிந்தேன்...
சுதந்திரத்தின் அருமையை உணர்ந்தேன்...

நாட்கள் நகர்ந்தன...
நியாயங்களும் நித்திரையில் மூழ்கின...
பண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...

ஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,
மறுபக்கம் வெள்ளத்தில் மனக்கலக்கம்...,
மதத்தின் பேரால் ஒரு கலகம்...,
நிறத்தின் பேரால் ஒரு கலகம்.

ஏன் இந்த மாற்றம்...?
அரவணைத்த அரசியல்வாதிகள் அழிந்துவிட்டனர்...,
அறிவற்ற அரசியல்வாதிகள் பெருகிவிட்டனர்...,
L.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...!,
ஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...!

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.

வாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...

   " ஆயி அப்பன் என்னை விட்டு...,
     பாதியிலே போயிட்டாங்க.

     கை பிடிச்சு வந்தவளும்...,
     கள்ளனோட போயிட்டாளே...,
     கைக்குழந்தையை விட்டு புட்டு.

    " ' யாரும் வேண்டாம் என் மகனே...!
        நானிருக்கேன் உனக்காக.
        கஷ்டப்பட்டு நான் உன்னை...,
        கரை சேர்த்து விட்டுவேன்.
        காலமெல்லாம் நான் உன்னை...,
        காத்திடுவேன் நிழல் போல...!' "

என்றெல்லம் நான் சொல்லி...,
எடுத்து வளர்த்தேன் என் மகனை.

காடு கழனி வேலை செஞ்சு
நாலு காசு சேர்த்து வச்சேன்.
பக்குவமாய் படிக்க வச்சேன்.

அறிவாளி என் புள்ள
அருமையாகப் படிச்சானே.
அசலூரு போனானே...அழகாவும் மாறினானே...!

கண்ணில் ஒளி மங்கிடவே...,
உடம்பில் குறை வந்திடவே...,
தங்க மகன் வீட்டுக்கு...,
தங்கிடவே நான் போனேன்.

வாசல் பக்கம் வந்தானே...,
பரிவாக என் புள்ள...
பக்கத்தில பணக்கார பொஞ்சாதி..!

ஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.
அடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...
அமைதியாக சொன்னானே...
" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...!,
   அன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.

   நாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,
   நன்றாக பார்த்துக்கொள்வேன் உங்களைத்தான்...,
   காசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' ".

சொன்னானே எம்புள்ள நொடிப்பொழுதில்...
நொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.

கலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...
தயக்கத்துடன் வந்தானே...வாட்சுமேனு...
House full-லு, இடமில்லை என்று சொன்னான்.

ஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த
அண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்?."

*******************************************************************

Wednesday, April 13, 2011

தெரிஞ்சுக்கோங்க: ( IQ )



மாப்ள.. IQ அப்டின்னா என்ன?கொஞ்சம் வெளக்கி சொல்லு?

மச்சான்.. Intelligence Quotient -யோட சுருக்கம் தான் IQ. அப்டின்னா நமக்கு
எவ்ளோ அறிவு இருக்குங்கிறதை , நம்ம அறிவு மற்றும் வயசோட கணக்கிட்டு
சொல்றது. அதோட ஃபார்முலா இதுதான் தெரிஞ்சுக்கோ..

      IQ score  =  (mental age / chronological age) * 100 .

ஒரு சர்வே ரிபோர்ட் சொன்னது...

* 50% மக்களின் IQ ஸ்கோர் 90 முதல் 115 வரை .(ஆவரேஜ்).
* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 130-க்கு மேல். (சிறந்த புத்தி கூர்மைஉள்ளவர்கள்).
* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 70-க்கு கீழ். (நம்ம பாஷையில சொல்லனும்னா
    இவங்களுக்கு மண்டைய்ல களிமண்ணுதான் இருக்கும்).
* 0.5% மக்களின் IQ ஸ்கோர் 140-க்கு மேல். (மிகச்சிறந்த புத்தி
   கூர்மைஉள்ளவர்கள்).

நாம அடிகடி நம்ம பங்காளிகளை jenious, Brilliant, Average-னு சொல்றமே.. உண்மையிலேயே இந்த லிஸ்ட்-ல இருக்கறவங்கதான் ரியல் jenious.

1. Kim Ung-Yong – IQ = 210
2. Christopher Michael Langan – IQ = 195
3. Philip Emeagwali – IQ = 190
4. Garry Kasparov – IQ = 190
5. Marilyn Vos Savant – IQ = 186
6. John H. Sununu – IQ = 180
7. Judit Polgár – IQ = 170
8. Stephen Hawking – IQ = 160
9. William James Sidis – IQ = 250

மச்சான்..உன்னோட IQ score  தெரிஞ்சுக்கனும்னா இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி அதுல கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லு...உன் அறிவுகூர்மையை அது சொல்லும்...

                         http://www.123test.com/iq-test/index.php


நம்ம தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் எவ்வளவு தேறுவார்கள்???!!!..

-------------------------------------------------------------------------------------------------------



மக்கள் தீர்ப்பு...

இன்று தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.. கடந்த சில வாரங்களாக நடை பெற்ற பிரசாரங்களை எல்லாம் பார்க்கும் பொது என் மனசுல சில விசயங்கள் கேட்க தோணிச்சு..
  1. பலம் தின்று கோட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு கூட நாகரீக அரசியல் பற்றி ஏன் தெரியவில்லை?
  2. பிரசாரம் செய்த நடிகர்கள் நடிகைகள் எவ்ளோ பணம் வாங்கினாங்க?
  3. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய பட்ட வழக்குகள் இனி என்ன ஆகும்?
  4. மக்களின் பிரச்சினைகள் இனியாவது தீருமா?
சென்ற வாரம் இந்தியாவில் நடந்த , அன்னா ஹசாரேவின் போராட்டம் நிச்சயம் நம் மனதில் ஒரு எழுச்சியை எற்படுதிருக்கும். அன்னாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.


பாராட்டு:
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும்.. தினமலர் பத்திரிக்கைக்கும் ... தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும் ...



திட்டு:
அன்னா ஹசாரே வின் போராட்டத்தை கொஞ்சங்கூட ஒளிபரப்பாத மீடியாவுக்கும் .

Tuesday, April 12, 2011

வணக்கம் நண்பர்களே...






அனைத்து
பதிவுலக நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம்... இன்று முதல் எனது பதிவை துவங்குகிறேன் . எனது பதிவை படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை பதிவுங்கள்...