மயக்கம் என்ன - விமர்சனம்
ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு வந்திருக்கும் செல்வராகவனின் படமாதலால் படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. படத்தின் டிரெய்லரும் ரசிக்க வைத்து விட்டதால் ஹைப் நிறைய இருந்தது. அந்த எதிர்பார்ப்பை செல்வாவும், தனுஷும் நிறைவு செய்தார்களா? படியுங்கள்.
அப்பா, அம்மா இல்லாது தனது தங்கை மற்றும் நண்பர்களின் பராமரிப்போடு வாழும் ஒரு சராசரி இளைஞனுக்கு(தனுஷ்), Wild Life Photography-ல் சாதிக்க நினைக்கும் எண்ணம். எப்படியாவது வாழ்க்கையில் தன் இலட்சியத்தில் முன்னேற துடிக்கிறார். ஒரு சமயத்தில், தனுஷின் நெருங்கிய நண்பன் தனது கேர்ள் பிரெண்டை அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த கேர்ள் பிரெண்டுக்கும்(ரிச்சா), தனுஷுக்கும் ஆரம்பம் முதலே சண்டையோடு நட்பு வளர்கிறது. ஒரு கட்டத்தில் ரிச்சா , தனுஷை லவ் பண்ண ஆரம்பிக்கிறார். தனுஷுக்கும் போக போக ரிச்சாவை பிடிக்கிறது. இருப்பினும் தனது நண்பனின் கேர்ள்பிரண்டை காதலிப்பது தவறு என்று நினைத்து விலக நினைக்கிறார். பின்பு ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஃபாரஸ்டில் எடுத்த போட்டோக்களை கொடுத்து, மிகப்பெரிய Wild Life Photographer-ஆன ஒருவரிடம் அசிஸ்டெண்டாக சேர வேண்டுகிறார். ஆனால் அவர் தனுஷை ஏமாற்றி விடுகிறார். தனுஷின் போட்டோவை வைத்து அவர் பெயர் வாங்கி கொள்கிறார். இதனால் மனமுடையும் தனுஷுக்கு விபத்து ஏற்படுகிறது. இயலாமையினால் மனம் வருந்தி குடிக்க ஆரம்பிக்கிறார். கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு தனுஷின் மனைவி ரிச்சா, தனுஷின் மேல் ஒரு நம்பிக்கை வைத்து வாழ்கிறார். அவரின் நம்பிக்கை நிறைவேறியதா? வெள்ளித்திரையில் காண்க!
தனுஷின் நடிப்பு:
படத்தின் பலத்திற்கு தனுஷின் நடிப்பு ஒரு காரணம். ஒரு சராசரி புகைபட கலைஞராக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் வசனங்களை விட பாடி லாங்குவேஜ் மற்றும் எக்ஸ்பிரஷங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் ஒவ்வொரு ப்ரேமிலும் தனுஷின் நடிப்பு அற்புதம். க்ளைமாக்சில் தனுஷின் நடிப்பைப் பார்க்கும் போது இதயம் கொஞ்சம் இளகிப்போகிறது.

ரிச்சாவின் நடிப்பு:
தெலுங்கு வரவான ரிச்சாவிற்கு இதுதான் முதல் படம். படத்தின் முதல் பாதியில் தனுஷோடு சண்டை போட்டு, பின்பு சிறிது சிறிதாக அவரை லவ் பண்ண ஆரம்பிக்கும் காட்சிகளிளெல்லாம் ரசிக்க வைக்கிறார். படத்தின் பிற்பாதியில் இவரது கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் இருப்பதால் அதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் க்ளைமாக்சில் காட்சியில் வசனமின்றி வெறும் முக பாவனையிலேயே நடித்து கைதட்டல் பெறுகிறார். சில காட்சிகளில் ரிச்சாவின் கண்கள் கூட பேசுகிறது.சூப்பர்ப்.
மேலும் தனுஷின் நண்பர்களாக வரும் அனைவரும் காட்சிக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

இயக்கம்:
செல்வராகவனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஹிட் படம்தான். படத்தில் முதல் பாதியை தனுஷ், ரிச்சா இருவருக்கும் காதல் வருவதுவரை கொண்டு செல்கிறார். பிற்பாதியில் கொஞ்சம் சீரியஸாக கொண்டு சென்று க்ளைமாக்சில் கைதட்டல் பெறுகிறார். வசனங்களை குறைத்து எக்ஸ்பிரஸென்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செல்வாவின் டிரேட் மார்க் காட்சிகள் வருகிறது. கணவன் மனைவி உறவை இந்தப் படத்தில் கொஞ்சம் டீசெண்டான காட்சிகளோடு அமைத்திருக்கிறார். முதல் பாதியில் வரும் ஒரு காட்சியில் தனுஷின் நண்பன் ஃபாரஸ்ட் டிரிப்புக்கு ரிச்சாவை அழைக்கும் போது அவர் சரியென்று சொல்வது, தனுஷைக் காதலிப்பதற்கென்றே காட்சியமைத்தது போல இருக்கிறது.
ஒளிப்பதிவு:
படத்திற்கு மிகப் பெரிய பலம் இதுதான். ஆயிரத்தில் ஒருவனில் அசத்திய ராம்ஜியின் கேமிரா வொர்க் இந்தப் படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. படம்
போட்டோகிராபி சம்பந்தமாக இருப்பதால் ஒவ்வொரு ப்ரேமும் அவ்ளோ அழகு. அதிலும் அந்த ஃபாரஸ்ட் போட்டோஷூட் கொள்ளை அழகு. ஓட ஓட பாடலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது. ஒளிப்பதிவிற்காகவே படத்தைப் பார்க்கலாம்.

இசை:
ஜி.வி.ப்ரகாஷ்-க்கு இன்னோரு ஹிட் ஃபிலிம். தெய்வதிருமகளில் பேசப்பட்ட இவரது இசை+பிண்ணனி இசை நிச்சயம் இதிலும் பேசப்படும். படத்தில் நிறைய காட்சிகளில் வரும் அந்த ஒரு ட்யூன் மனதை அள்ளுகிறது.
ஜி.வி.ப்ரகாஷ்-க்கு இன்னோரு ஹிட் ஃபிலிம். தெய்வதிருமகளில் பேசப்பட்ட இவரது இசை+பிண்ணனி இசை நிச்சயம் இதிலும் பேசப்படும். படத்தில் நிறைய காட்சிகளில் வரும் அந்த ஒரு ட்யூன் மனதை அள்ளுகிறது.
மயக்கம் என்ன - மனதை அள்ளும்
*************************************
6 comments:
நல்ல விமர்சனம்! நன்றி நண்பரே!
விமர்சனம் நன்றாக இருக்கு.ஆனால் முடிவை சொல்லாம விட்டதுதான்,எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
. ஓட ஓட பாடலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளில் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது. ஒளிப்பதிவிற்காகவே படத்தைப் பார்க்கலாம்.
மயக்கம் என்ன - மனதை அள்ளும்
nice .
ம். நல்ல விமர்சனம்.
விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...