Wednesday, February 01, 2012

மற்றவை - அரசியலில் புதிதாக கிளம்பிய புயல்

நேற்றைய சட்டசபையில் அ.தி.மு.க விற்கும், தே.மு.தி.க விற்கும் நடந்த விவாதங்கள், அதனைத் தொடர்ந்த தே.மு.தி.க வின் வெளிநடப்பு செயல்கள் அனைத்தும் நிறைய விசயங்களை தமிழக அரசியல் வட்டாரத்திற்கு உணர்த்தி விட்டது. அதற்கு முன் சில முன்னோட்ட விசயங்களைப் பார்ப்போம்.

தே.மு.தி.க , அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது முதல் விஜயகாந்த் ஒரு போதும் அம்மாவின் பெயரை தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை.


அம்மாவும் அப்படியே.  "எம்.ஜி.ஆர் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். அதுவும் தி.மு.கவை ஜெயிக்க வைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்", என்றெல்லாம் விஜயகாந்த் சொல்லி வந்தார். மேலும் எந்த ஒரு பிரசார மேடையிலும் இருவரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்யவில்லை.  பா.ம.க., ம.தி.மு.க வைப் போல தன் கட்சியையும் அம்மா கிள்ளுக்கீரையாக நினைத்து விடக்கூடாது. அதனால் தன் கட்சியின் அந்தஸ்து பாதித்து எதிர்கால அரசியலுக்கு ஆப்பு வைத்தது போலாகி விடும் என்றெல்லாம் விஜயகாந்த் தரப்பில் ஒரு கருத்து இருந்தது. அதை நினைத்துதான் விஜயகாந்த் ஆரம்பித்திலிருந்தே தன் கட்சியின் செல்வாக்கை தளர்த்தாமல் பார்த்துக் கொண்டார். தன்னுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகளெல்லாம் தன் கீழ் வந்து, தனது பேச்சைத்தான் கேட்டாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தே.மு.தி.க விலகி இருந்த காரணத்தால் , நேற்றைய சட்டசபையில் அதற்கான விளைவுகள் விவாதமாகி வெட்டவெளிச்சமாகிவிட்டது. அ.தி.மு.க பெரும்பான்மையோடு ஜெயித்தபோது ,  அம்மாவும், விஜயகாந்தும் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஆளுங்கட்சி செய்யும் ஒவ்வோர் விசயங்களுக்கும் , அதனை கவனித்து சட்டசபையில் விவாதிப்பதுதான் எதிர்கட்சியின் பணி. அந்த வகையில் முதன்முதலில் எதிர்கட்சி அங்கிகாரம் பெற்ற தே.மு.தி.கவின் செயல் ஏமாற்றத்தைதான் அளித்தது. இத்தனை நாள் எங்கு போய் விட்டீர்கள் என்ற வகையில்தான் தே.மு.தி.க இருந்தது.




ஆனால் நேற்றைய சட்டசபை விவாதம்,(எங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.கவிற்கு இவ்வளவு வெற்றிகளும், எதிர்கட்சி அந்தஸ்த்தும் கிடைத்தது என்று அ.தி.மு.க தரப்பு சொல்ல, அம்மா சவாலே விட்டு விட்டார். அதற்கேற்ற பதிலை விஜயகாந்த் நயமாக சட்ட சபையில் எடுத்துரைத்தார். விஜய்காந்த்தின் பேச்சு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அம்மா அவர்களின் அகந்தை இன்னும் மாறவில்லையே? என்ற கேள்வியும் எழுந்தது.)  ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் உள்ள பல நாள் பகையை உணர்த்தி விட்டது. இனி மேல் என்ன நடக்கும் என்பதை யூகித்து சொல்கிறேன். இது எனது மனதில் தோன்றிய எண்ணங்கள்தான்.

தே.மு.தி.க கட்சியினர் நிறைய பேர் , இனி அ.தி.மு.க விற்க்கு தாவலாம்.

தி.மு.க கட்சியினர் மீதான நில அபகரிப்பு கைது போன்ற நிகழ்வுகள், இனி தே.மு.தி.க வினருக்கும் நடக்கலாம். அதனையெல்லாம் தே.மு.தி.க கட்சியினர் கண்டு பயப்படாமல் இருப்பார்களா என்பது கொஞ்சம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க விற்கு கட்சிதாவல்களை அவர்கள் மேற்கொள்ளலாம்.

இனி, ஆழுங்கட்சியின் ஒவ்வோர் நடவடிக்கையையும் , எதிர்கட்சி கண்காணித்து விவாதத்தை ஆரம்பிக்கலாம். நிறைய அறிக்கைகள் இனி தே.மு.தி.க தரப்பில்
பத்திரிக்கைகளில் வெளிவரலாம். தன் பணியை விஜயகாந்த் சரியாக செய்தால் நிச்சயம் இனி அவரது கட்சிக்கு செல்வாக்கு பெருக ஆரம்பிக்கும்.

அம்மாவின் அதகளத்தைக் கண்டு அ.தி.மு.க வினரே ஆடிப் போகின்றனர். எத்தனை முறை பதவி பறிப்பு, பதவி ஏற்பு நடந்து விட்டது. அப்படிப்பட்ட மலை போல இருக்கும் ஆளுங்கட்சியின் தலைமையை, எதிர்கட்சி எப்படி சமாளிக்கும் என்பதை இனி மேல் நாம் பார்க்கலாம்.

 இன்றைய தினமலரில் எதற்கு கொடுத்தோம் இலஞ்சம் என்ற பகுதியில் ஒரு கட்டுரை வந்துள்ளது. இது போல் மக்கள் அனைவரும் இலஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்பட்ட விவரங்களை கட்டுரையாக அனுப்பினால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். மறக்காமல் அந்தப் பகுதியைப் படித்துப் பாருங்கள்.



***********************************************************

Tuesday, January 31, 2012

எ.பி.க - 17

தன்னம்பிக்கையைத் தரும் நிறைய கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதைதான் இது.  எதிர்பார்க்காத தருணங்களில் துன்பங்கள் வந்தாலும் அதனுள் மீண்டு வரவேண்டும் என்பதை ஒரு பறவையின் மூலம் நயமாக சொல்லியிருக்கிறார் கவிதையின் ஆசிரியர். அந்தக் கவிதை உங்கள் பார்வைக்கு...

                         ** வாசலில் விழுந்த பறவை **


தற்செயலாக

வாசலில் விழுந்த ஒரு பறவை

காலூன்றி நிற்க முற்சித்தது

தடுமாறித் தடுமாறி விழுகிறது

இடைவிடாமல்

சிறகுகளை அடித்துக்கொள்கிறது

ஐயோ எனத் தாவி

அள்ளியெடுத்து

நீவித்தந்த விரல்உதறி

நழுவி நழுவி விழுகிறது

அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை

நொண்டி நொண்டி

நடந்து செல்வதிலும்

பறப்பதிலும்தான்

அதன் கவனம் குவிந்திருக்கிறது

எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை

விடையறியா வலியில் துவள்கிறது மனம்

சில கணங்களுக்கு முன் பார்த்தேன்

பாடி முடித்த ஆனந்தத்தில்

தாழ்வான மரக்கிளையில்

துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது

அதன் சிறகின் மஞ்சள் அழகால்

மாலைப்பொழுதே வசீகரமானது

அதன் சின்னச்சின்ன நடை

அழகான ஒரு சித்திரம்

எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்

எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது

எவ்வளவோ தடுமாற்றம்

எவ்வளவோ வேதனை

எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது.

-பாவண்ணன்
**********************************************************

Saturday, January 28, 2012

எ.பி.க - 16

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில், வாழும் முறை வெவ்வேறாக இருந்தாலும் ஒரு சில விசயங்கள் பொதுவாகத்தான் இருக்கும். அந்த விசயங்களை ஒருவர் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.  எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. படித்துப் பாருங்கள்.

*** வாழ்க்கைப் புத்தகம் ***

வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை
வலிகளும் நிறைந்தவை!

பாசமுள்ள உறவுகள்
வேசமுள்ள நெஞ்சங்கள்
தோள் கொடுக்கும் உறவுகள
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.....!

வாழ்க்கை அா்த்தத்தோடு
வாழும் உறவுகள்
எப்படியும் வாழலாம்
என்றெண்ணும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

பாசத்தை விலை பேசி
பங்கு போடும் உறவுகள்
வறுமையிலும் வாழ்ந்து காட்ட
போராடும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்!

துவழ்ந்து போனால்
தூக்கி வீசும் உறவுகள்
நிமிர்ந்து நிற்கையில்
மார்தட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் உறவுகள்
தன்னை விட உயர்ந்திட்டால்
பழமை குத்திக்காட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.......!

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
பக்கங்கள் இரண்டு
நல்லதும் கெட்டதும்
நானிலத்தில் உண்டு
புரிந்து கொண்டால்
சொர்க்கமே நமக்கு....!

-அருந்ததி

*********************************************************

Friday, January 27, 2012

மற்றவை - சிரிக்க ஒரு கவிதை

நான் படித்த ரசித்த கவிதைகளில் சில வகைகள் அழகான வர்ணனைகள் கொண்டதாக இருக்கும். சில வகைகள் கருத்தாழமிக்கதாக இருக்கும். சில வகைகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்ற வரிகளைக் கொண்டவையாக இருக்கும். ஒரு சில வகைகள் நக்கலாக இருக்கும். அந்த வகையில் நான் ரசித்து சிரித்த ஒரு நக்கலான கவிதை இதுதான்.படித்துப் பாருங்கள். கவிதை வகையில் இதனை சேர்க்கலாமா என்று யோசிக்க வைக்கும் வகையில் உரைநடை வடிவில் இருக்கின்ற ஒரு கவிதை.


என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

- வருத்தப்படாத வாலிபர் சங்கம்
                             
********************************************************

Thursday, January 26, 2012

தெரிஞ்சுக்கோங்க - மச்சத்திற்கேற்ற பலன்கள்

சமீபத்தில் ஒரு இணையதளத்தில் படித்த இண்ட்ரஸ்டிங்கான விசயமிது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களின் உடலில் உள்ள மச்சத்தை வைத்து
பலன்களை சொல்லியிருக்கின்றனர். எந்த அளவுக்கு இது உண்மை என்று தெரியவில்லை. படிச்சு பாருங்க. உங்களோட மச்சத்திற்கேற்ற பலன் இருக்கா?
இல்லையா? பதிலை பதிவு பண்ணுங்கள். இந்த பதிவைப் படித்ததும் பதில் சொல்வீர்களோ இல்லையோ தெரியாது, ஆனால் நிச்சயம் உங்கள் உடம்பில் உள்ள மச்சங்களை தேடுவீர்கள் என்பது மட்டும் எனக்கு தெரியும்.:)

உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம்.


பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்
புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
    நெற்றியின் வலது புறம் – தனயோகம்
    வலது புருவம் – மனைவியால் யோகம்
    வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
    வலது கண் – நண்பர்களால் உயர்வு
    வலது கண் வெண்படலம் – புகழ் ஆன்மீக நாட்டம்
    இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
    மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
    மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
    மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
    மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
    மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
    மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில்         நாட்டம்
    வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
    இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
    வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
    இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
    காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
    தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
    கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
    இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
    வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
    வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
    அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை


பெண்களுக்கான பலனகள்
    
நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
    நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
    நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
    மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
    மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
    மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
    மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
    மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
    இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
    வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
    வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
    நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
    கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
    இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
    தலை – பேராசை, பொறாமை குணம்
    தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
    தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
    தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
    வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
    அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
    இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
    வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.

************************************************************

Wednesday, January 25, 2012

தெரிஞ்சுக்கோங்க - கள்ள நோட்டு கண்டறிதல்

கள்ள நோட்டு கண்டறிந்து கொள்ளுங்கள்:

தமிழகத்தின் சமீபத்திய ஹாட் நியூஸ் கள்ளநோட்டு புழக்கம்தான். பாண்டிச்சேரியில் பரவி இப்போது சென்னை மற்றும் இதர பெரு நகரங்களில்
பெருகி விட்டது.

ஏ.டி.எம்-க்கு சென்று நீங்கள் எடுக்கும் 500 மற்றும் 1000 ருபாய்களில் கூட கள்ள நோட்டு கலந்து இருக்கலாம். அதற்காக ரிசர்வு வங்கி மக்களுக்கு கள்ள நோட்டைக் கண்டறிய ஆலோசனை வழங்கி இருக்கிறது. அதற்கான சாம்பில் படங்கள் கீழே காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவைப் படிக்கும் நண்பர்களும், நண்பிகளூம் மறக்காமல் படித்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

படம் சிறியதாக தெரிந்தால் , படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.
500 Rs:

1000 Rs:





Maxsell -- Mx50i என்ற பெயரில் கள்ள நோட்டைக் கண்டறியும் மெஷினை அந்த பெயரில் இருக்கும் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனைத்து வங்கிகளும் இனி
அதனைப் பயன்படுத்தினால் மிக்க உபயோகமாக இருக்கும்.

அதனைப் பற்றிய வீடியோ:

                    
 
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

**************************************************

Tuesday, January 24, 2012

தெரிஞ்சுக்கோங்க - வரி விலக்குத் திட்டங்கள்


"மார்ச்" இந்தியாவில் பலபேருக்கு இரத்தக் கொதிப்பினை அதிகரிக்கும் மாதம். மார்ச் 31 என்பது நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும், அந்த நிதியாண்டின் வருமானவரியினை செலுத்தும் இறுதி நாள். இப்போது நாம் ஜனவரியில் இருக்கிறோம். இப்போதிலிருந்தே திட்டமிட்டால் மார்ச் இறுதிநாள் மனக் கஷ்டத்தை  தவிர்க்கலாம்.


இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் விசயங்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் , தெரிந்துகொள்ளுவதற்காகத்தான் நான் பகிர்கிறேன்.

இனி கட்டுரைக்கு போகலாமா?

வரி செலுத்துதல் என்பது ஒன்று. வரி விலக்குகள் என்பது இன்னொன்று. இந்தியாவில், வருமான வரி விலக்கு என்பது பல சலுகைகளாக பரவிக் கிடக்கிறது. என்னென்ன வகையில் வரி சலுகைகள் இந்தியாவில் இருக்கிறது என்பதற்கான கையேடு இது.

    காப்பீடு
    வீட்டு வாடகை
    வீட்டுக் கடன்
    ப்ராவிடண்ட் பண்ட்
    பென்ஷன் திட்டம் (NPS)
    பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (ULIPs)
    பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (ELSS)
    கட்டமைப்பு கடன் பத்திரங்கள்
    கல்விக் கடன்
    கல்வி - ட்யூஷன் தொகை
-------------------------------------------------------------------------------
காப்பீடு:

இந்தியாவில் தொடர்ச்சியாக தவறாக மார்க்கெட் செய்யப்படும் நிதி விஷயங்களில், காப்பீட்டுக்குதான் முதலிடம். ஏஜெண்ட்கள் கமிஷன்களுக்காக, நம்மை டபாய்த்து காப்பீடினை எடுக்க வைத்து விடுகிறார்கள். முதலீடும், காப்பீடும் வெவ்வேறு. நீங்கள், உங்கள் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட வாழ்வியல் காப்பீட்டின்(Life Insurance Policy) ப்ரீமியத்தினை வரிச் சலுகையாக பயன்படுத்தலாம். செக்‌ஷன் 80C யின் கீழ் ஒரு லட்சம் வரை நீங்கள் வரிச் சலுகை கோரலாம்.

அதே போல மெடிக்கல் காப்பீட்டிலும் செக்‌ஷன் 80D யின் கீழ் ரூ.15,000 வரை வரிச் சலுகைக்குப் பயன்படுத்தலாம். உங்களின் பெற்றோர்களுக்கான மெடிக்கல் காப்பீட்டில் இன்னொரு ரூ.15000 வரை சலுகையுண்டு.
-------------------------------------------------------------------------------
வீட்டு வாடகை:

பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA - House Rent Allowance) இருப்பதைப் போலத் தான் சம்பளத்தினை நிர்ணயிப்பார்கள். இது வரிச் சலுகைக்கு உரியது. ஒரு வேளை HRA இல்லையென்றால், உங்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 40% வரைக்கும் (நகரங்களில் இது 50%) நீங்கள் சலுகைகள் கோரலாம். செக்‌ஷன் 80GG யின் கீழ் இது சாத்தியம்.

ஒரு வேளை நீங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு, வருமானம் ஈட்டினால், அதன் வருடாந்திர வருமானத்திலிருந்து 30% வரை கழிப்பினை (deduction) செக்‌ஷன் 24 வழியாக கோரலாம். மேலும், கழிவுநீர் வரி, வீட்டு வரி போன்ற முனிசபல் வரிகளையும் அதிலிருந்து கழித்து விட்டு, மீதம் வரும் தொகைக்கு மட்டும் வரிக் கட்டலாம்.
-------------------------------------------------------------------------------
வீட்டுக் கடன்:

என்னதான் நச்சுபிடித்த மனைவியாய் இருந்தாலும், வீட்டுக் கடன் எடுக்கும் போது இருவருமாய் சேர்ந்தெடுப்பது நலம். நீங்கள் மட்டுமே கடன்காரராய் இருந்தால், வீட்டுக் கடனுக்காக நீங்கள் மாதாமாதம் கட்டும் EMIயின் வருடாந்திரத் தொகையில் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் விலக்கு கோரலாம். இருவருமாய் சேர்ந்து கடனை எடுத்திருந்தால், தனித்தனியாய் 1.5 லட்சம் வரைக்கும் செக்‌ஷன் 24B யின் கீழ் கோரலாம். இரடிப்பு லாபமது.
-------------------------------------------------------------------------------
ப்ராவிடண்ட் பண்ட்:

மாதாமாதம் உங்கள் சம்பளத்திலிருந்து போகும் ப்ராவிடண்ட் பண்ட் தொகையும் வரி சலுகைக்கு உதவும். ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம். இது பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF)க்கும் உண்டு. ஆனால், அதிகப்பட்ச கழிப்பு ரூ.70,000.
 -------------------------------------------------------------------------------
தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme - NPS):

நல்ல படங்களின் தியேட்டர்கள் காற்று வாங்கும். அந்த மாதிரி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக நல்லத் திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். யாருக்குமே தெரியாது. உங்கள் ஆடிட்டரையும் சேர்த்து, யாருமே சொல்ல மாட்டார்கள். தேசிய பென்ஷன் திட்டம் என்பது உங்களின் ரிட்டயர்மெண்ட் பணத்தினை சேர்க்கும் திட்டம். அதில் வரிச் சலுகைகளும் உண்டு. இதில் போடப்படும் பணத்தில், ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோர முடியும்.
-------------------------------------------------------------------------------
பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (Unit Linked Insurance Plans - ULIPs):

தனிப்பட்ட ரீதியில் எந்நாளும் யூலிப்களை நான் பரிந்துரை செய்வது கிடையாது. காப்பீடு வேறு. முதலீடு வேறு. ஆனாலும், இந்தியாவின் எல்லா முன்னோடி நிதி நிறுவனங்களும் சந்தையில் யூலிப்களை இறக்கி, மக்களை வாங்க வைத்து விட்டார்கள். அதிலும் எல்.ஐ.சி 2007களில் செய்தது அநியாயம். இப்போது காப்பீடு கண்காணிப்பு அதாரிட்டியால் (IRDA - Insurance Regulatory Development Authority) ஒரளவுக்கு இதன் அயோக்கியத்தனங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிகப்பட்சமாய் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.
-------------------------------------------------------------------------------
பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (Equity Linked Savings Scheme - ELSS):

யூலிப்பினையும், தேசிய பென்ஷன் திட்டத்தையும் விட மேம்பட்ட திட்டமிது. இதில் நேரடியாக சந்தையில் பங்குப் பெறும் வாய்ப்புகள் அதிகம். அதனால் ரிஸ்க்கும் அதிகம். இதன் பெரிய லாபம், ஒரு பக்கம் பங்குச் சந்தையின் மேம்பாட்டில், போட்ட காசும் பெருகும்; இன்னொரு பக்கம், வரிச் சலுகைகளும் கோர முடியும். அதிகப்பட்சமாக ஒரு லட்சம் வரைக்கும் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.

இப்போதைக்கு கண்ணுக்குத் தெரிந்தவரை முதலீடும், வரி சலுகைகளும் நிரம்ப இருக்கும் ஒரே விஷயமாக தேசிய பென்ஷன் திட்டம் தெரிகிறது. போன வருட நேரடி வரி குறியீடு மறுசீராக்கத்தில், தே.பெ.திட்டம் EEE ஸ்டேட்டஸையும் பெற்று விட்டது.

EEE - Exempt-Exempt-Exempt என்பது வரி, உங்கள் பணத்தின் எதிர்கால ஸ்டேட்டஸ் என்பதைப் பற்றியானது. இந்தியாவின் பெரும்பாலான வரிச்சலுகை சமாச்சாரங்கள் EET (Exempt Exempt Tax). அதாவது, ஒரு திட்டத்தில் நீங்கள் பணம் போடும்போது அது வரிக்குள் வராது. இது முதல் E. (விலக்கு) அந்தத் திட்டத்தில் முதலீடாய் உங்கள் பணம் இருக்கும்போது வரி வராது. இது இரண்டாவது E. (விலக்கு) ஆனால், அந்தப் பணத்தினை பின்னாளில் எடுக்கும்போது, எடுத்த பணத்துக்கு வரி வருமா, வராதா என்பது தான் மூன்றாவது E / T. (விலக்கு / வரி) அதனாலேயே EEE பெற்றிருக்கும் தேசிய பென்ஷன் திட்டம் முக்கியமானதாகிறது. ஆக, இதுவரை தே.பெ.திட்டம் பற்றி யோசிக்கவில்லையானால், உங்களின் வங்கியினை அணுகுங்கள். எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இதை செய்ய முடியும்.
-------------------------------------------------------------------------------
கட்டமைப்பு கடன் பத்திரங்கள் (Infrastructure Bonds):

மேற்சொன்ன விஷயங்களில் நீங்கள் ஏற்கனவே ஒரு லட்சம் அதிகப்பட்ச தொகையை தாண்டிவிட்டால், கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். இந்தியாவில் கட்டமைப்பு என்பது நீங்கள் ரிட்டயர் ஆகும் வரை நடக்கக்கூடிய விஷயம். அடுத்த 30-40 ஆண்டுகள், இது இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. செக்‌ஷன் 80C யின் கீழ் ரூ.20,000 கூடுதலாக கழிப்பினை, கட்டமைப்பு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதின் மூலம் பெறலாம். சராசரியாக எல்லா கட்டமைப்பு கடன் பத்திரங்களும் 8% மேலான ரிடர்னை வழங்குகின்றன. ஆக, சலுகைக்கு சலுகையுமாச்சு. போட்டப் பணமும் 8% பாதுகாப்பாக வளரும் வழியுமாச்சு.
-------------------------------------------------------------------------------
கல்வி - ட்யூஷன் கட்டணம்:

செக்‌ஷன் 80C யின் கீழ், ஒரு லட்சம் வரையிலானக் கழிப்பினை உங்களின் இரண்டு குழந்தைகளுக்குப் பெறலாம். உ.தா. பொறியியல் படிப்பு படிக்கும் மகன்/ள் இருந்தால், அவர்களின் ட்யூஷன் பீஸ்ஸினை ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும், உங்கள் வருமானத்திலிருந்து கழிப்பு செய்து பயன் பெறலாம். ட்யூஷன் பீஸ் என்பது மொத்த பொறியியல் படிப்பின் கட்டணைத்தை சாராது. உ-தா ஹாஸ்டல் கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள்
-------------------------------------------------------------------------------
கல்விக்கடன்:

நீங்களோ, உங்கள் மனைவியோ, குழந்தைகளோ மேற்படிப்புக்காகக் கல்விக் கடன் வாங்கியிருந்தால், அதன் வட்டித் தொகையினை வரிக் கழிப்பிற்கு செக்‌ஷன் 80E யின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன, செக்‌ஷன் 80C யின் கீழ் வந்த ஒரு லட்சத்திற்கும் மேலே பயன்படக்கூடியது. கல்விக்கடனில் கட்டும் வட்டிக்கு மட்டுமே இந்த கழிப்புச் சலுகையுண்டு. அசலுக்கு இல்லை.


-------------------------------------------------------------------------------