Friday, September 02, 2011

தெரிஞ்சுக்கோங்க - பேட்டரியில் இயங்கும் இஸ்திரி பெட்டி(Iron Box)

                * பேட்டரியில் இயங்கும் 
                 இஸ்திரி பெட்டி(Iron Box) *

எத்தனையோ எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தற்போது பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மிக முக்கியமான சாதனமான அயர்ன் பாக்ஸ் என்றழைக்கப்படும் இஸ்திரி பெட்டி மட்டும் இன்னமும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தான் தயாரிக்கப்படுகின்றது. அதை மட்டும் ஏன் பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கவில்லை? என்ற கேள்வி எனக்குள் நிறைய தடவை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் அயர்ன் பாக்ஸ் விற்பனைக்கு வந்திருக்கிறது. இங்கல்ல. வெளிநாடுகளில் தான். இதன் பெயர் Playazon என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். விலை கொஞ்சம் அதிகம்தான்.


இந்த அயர்ன் பாக்ஸ் 12V , 14.5V அல்லது 18V பேட்டரியால் இயங்கும். இந்த பேட்டரியால் சூடாகும் அயர்ன் பாக்ஸைக் கொண்டு  சுமார் 1 அல்லது 4 நிமிடங்கள் வரை(அவரவர் வசதிற்கேப்ப நிமிடங்களை மாற்றிக் கொள்ளலாம்) துணிகளை அயர்ன் பண்ணலாம்.

############################################################

                    * எப்படி தூங்குவாங்க? *

மலையேறுபவர்கள் பற்றி நீங்கள் ரொம்பவே அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய செங்குத்தான மலைகளில் ஏறுபவர்கள் அதன் உச்சியை தொடுவதற்கு பல நாட்கள் கூடி ஆவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓய்வெடுக்க அல்லது தூங்குவதற்கு என்ன செய்வார்கள் என நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா? நாம் தந்திருக்கும் படங்களை பாருங்கள் அப்போது புரியும் செங்குத்தான மலைகளில் நாட்கணக்காக ஏறுபவர்கள் எங்கே எப்படி தூங்குவார்கள் என்று.


****************************************************

Thursday, September 01, 2011

தெரிஞ்சுக்கோங்க - சுவிஸ் கருப்பு பணம்


சுவீஸ் வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. சுவிஸ் வங்கியில் பணி புரிந்த ருடால்ஃப் எல்மர் என்பரிடமிருந்து இது சம்பந்தமான இரண்டு சிடிக்களைப் பெற்றிருக்கிறது. இந்த சிடியில் சுமார் 2000 இந்தியர்களின் பெயர்கள்  இருக்கிறது. டெபாசிட் செய்த பணம் ஹெட்ஜ்(Hedge), இல்லீகல் ஷேர் இன் ஸ்டாக் மார்க்கெட்(Illegal share in stock market), ட்ரக் டீல்(Drug deal) மற்றும் ஃபேக் புராஜெக்ட்(Fake Project) மூலம் பெறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன, 1970களிலிருந்துதான் சுவிஸ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது ஆரம்பமானது. கருப்பு பணத்தை இந்தியா டெபாசிட் செய்வதற்கு முன்னோடியாக இருந்த நாடு பாகிஸ்தான் தான். கீழ்கண்ட தகவல்கள் அனைத்தையும் Server Ip 88.80.16.63, Port No 9999(SSL enabled) மூலம் பெற்றதாகக் கூறுகின்றனர்.

இந்த பட்டியிலில் இருக்கும் முக்கிய தலைகள்:

ராஜிவ் காந்தி
நீரா ராடியா
கருணாநிதி
ஆ.ராசா
ஸ்டாலின்
கலாநிதி மாறன்
ஹர்ஸத் மேத்தா
S.S.பழனிமாணிக்கம்
லல்லு பிரசாத் யாதவ்
******************************************************

Wednesday, August 31, 2011

மற்றவை - விமர்சனம்: மங்காத்தா

                    * விமர்சனம் - மங்காத்தா *


அசல்-ன் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் அஜித்-ன் படம். 50வது படம் வேறு. எனவே நிறைய எதிர்பார்ப்புக்கள் மங்காத்தா மீது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

கிரிக்கெட் சூதாட்டம்தான் படத்தின் மூலக் கரு. காவல்துறை அதிகாரியான அஜித் வில்லனின் அடியாளைக் காப்பாற்றுவதற்காக போலிஸை சுட்டு கொன்று விடுவதால் 6 மாதம் சஸ்பெண்டில் இருக்கிறார். இந்நிலையில் IPL கிரிக்கெட் சூதாட்டத்திற்காக வில்லனிடத்தில் மொத்தப் பணமும் (சுமார் 500 கோடி) வந்து சேருகிறது. அந்தப் பணத்தை வில்லன் ஒரு இடத்தில் பதுக்கி வைக்க முயற்சிகள் செய்கிறார். இந்நிலையில் வில்லனிடம் வேலை செய்யும் ஒருவன் தன் எஸ்.ஐ நண்பன் மற்றும் பார் நடத்தும் நண்பன் மூவரும் சேர்ந்து அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க நினைக்கின்றனர். ஐ.ஐ.டி.யில் படித்தவரான பிரேம்ஜி அமரனும் இந்த மூவரின் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஜித்-க்கு இந்தக் கொள்ளைத்திட்டம் பிரேம்ஜி மூலம் தெரியவருகிறது, அதன் பின் அவர்களின் ஒவ்வொரு மூவ் மெண்ட்ஸையும்  அவர்களுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்கிறார்.அவர்கள் திட்டத்தை செயல்படுத்தும்  நேரத்தில் திடீரென நுழைந்து தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்கும் காவல் அதிகாரியான அர்ஜுனுக்கும் இந்த 500 கோடி விசயம் தெரியவர,   கூட்டத்தை பணத்துடன் பிடிக்க முயற்சிகள் செய்கிறார்.அஜித் டீம்  போட்ட திட்டத்தின்படி பணத்தைக் கடத்துகின்றனர்.கடத்திய 500 கோடி பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கின்றனர் .அப்புறம் ஆளாளுக்கு, டீமிலிருக்கும் நண்பர்களை போட்டுத்தள்ளிவிட்டு தனியாக அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள நினைக்கின்றனர்.



இது ஒரு புறம் இருக்க வில்லனிடம் வேலை செய்பவன் வில்லனிடம் மாட்டிக் கொள்கிறான்.அவன் மூலம் பணத்தை மீட்க  வில்லன் கூட்டம் மற்றவர்களைத் தேடுகிறது. அர்ஜுனும் தனது டீமோடு தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் பதுக்கி வைத்திருக்கும் பணம் காணாமல் போகிறது. அதை யார் எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து அவர்களைத் தேடி அஜித் செல்கிறார். கடைசியில் அந்தப் பணம் கிடைத்ததா? அர்ஜுன் அவர்களைப் பிடித்தாரா?வில்லன கூட்டம் அவர்களைக் கண்டுபிடித்து என்ன செய்தது என்பதை வண்ணத்திரையில் காண்க!

அஜித் நடிப்பு:

படத்தில் நல்லவர்கள் என்றால் த்ரிஸாவும், அஞ்சலியும் தான். மற்றபடி அனைவரும் கெட்டவர்கள். இதில் அஜித் ரொம்பக் கெட்டவராக வருகிறார். அவரது மேனரிஷமும்,கேஷுவலான கெட்டப்பும் மிக மிக அருமை. தொப்பை கொஞ்சம் தெரிகிறது. மற்றபடி பணத்தாசை பிடித்த கெட்ட மனிதனை கண்முன் நிறுத்துகிறார். படத்தில் ஹீரோயிசமே தெரியவில்லை. இருப்பினும் அஜித் வரும் காட்சிகளில்  நடிப்பில் அவர் மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார். அதிலும் இடைவேளைக்கு பிற்பாதியில் அஜித்-ன் நடிப்பு அம்சமாக உள்ளது.


அர்ஜுனுக்கு இதில் நல்ல கேரக்டர்தான். படத்தின் பின்பாதியில் தான் அவருக்கு நிறைய காட்சிகள்.  க்ளைமாக்ஸில் அஜித்-க்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் சண்டை காட்சி நன்றாக உள்ளது.

த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என்று நான்கு பேர் இருக்கின்றனர்.நால்வருக்கும் ஒவ்வொரு பாடல் காட்சிகள் உள்ளது. நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.மற்றபடி ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர். ஒரு பாடல் காட்சியில் லட்சுமிராய் கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரிகிறார்.

வில்லனாக வரும் ஜெயப்ராகாஷ் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறுகிறது.

 வெங்கட் பிரபுவின் சென்னை-28 டீம் இதிலும் நடித்திருக்கின்றனர்(ஜெய்-யை தவிர). சென்னை-28, சரோஜாவில் காமெடியில் கலக்கிய பிரேம்ஜிக்கு இந்தப் படத்தில் காமெடி மிஸ்ஸிங். அதையும் படத்தில் ஒரு கேரக்டர்   "நீ பண்ற காமெடிமொக்கையாக இருக்குது"  என்று சொல்வதுபோல் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இசை - பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். மச்சி ஒப்பன் த பாட்டில் காட்சியமைப்பு நன்றாக இருக்கிறது. அஜித் வரும் காட்சிகளில் ஸ்பெசல் BGM தீம் அருமை. இடவேளைக்கு பின் படத்தின் விறு விறுப்புக்கு ஏற்ப BGM  இருக்கிறது.


இயக்கம்- இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்களில் காமெடி ஸ்பெசலாக இருக்கும் . இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள் தவிர ஏனைய காட்சிகளில் காமெடிக்கு பஞ்சம். படத்தின் முற்பாதி திரைக்கதையில் விறு விறுப்பு இல்லை. தேவையில்லாத பாடல் காட்சி வேறு வருகிறது. காமெடியும் இல்லை. எனவே முற்பாதியில் வரும் காட்சிகள் சிலவற்றை வெட்டினால் நல்லது. ஆனால் முதல் பாதியில் இல்லாத விறு விறுப்பை பின் பாதியில்  சரி கட்டியிருக்கிறார். இடவேளைக்கு அப்புறம் திரைக்கதை விறு விறுப்பு + வேகம் கலந்து அமைத்திருக்கிறார்.  வித்தியாசமான அஜித்-ஐ இந்தப் படத்தில் காட்டியதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

மங்காத்தா - கமர்ஷியல் மசாலா ஆட்டம்.

******************************************************












Monday, August 29, 2011

எ.பி.க - 15

                      எ.பி.க - 15 :  நண்பன்



அறை நண்பனின்
 
கைபேசியை காணவில்லை.
 
" கடைசியாக பேசி முடித்து
 
 எங்கே வைத்தாய்?"
 
"சன்னால் வழியாக
 
விழுந்திருக்குமோ?"
 
எல்லா இடங்களிலும் 
 
தேடிக் கொண்டிருந்தோம் நாங்கள்
 
நண்பனோ
 
எங்கள் முகங்களில் 
 
தேடிக் கொண்டிருந்தான்!!!
 
நன்றி - கீதம்லெனின்

******************************************************

Sunday, August 28, 2011

மற்றவை - அன்னாவின் வெற்றி

                   * அன்னாவின் வெற்றி *
 

நேற்று ஜன் லோக்பால் மசோதாவை வலியுறித்தி போராடிய அன்னா ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளையும் பார்லியில் ஏற்றுக் கொண்டு, ஓட்டெடுப்பு  விவாதத்திற்கு O.K சொன்ன மத்திய அரசு, அடுத்து என்ன செய்யப் போகிறது? மசோதா வருமா?வராதா? எது எப்படியோ இந்தப் போராடத்தின் மூலம் இளைய தலைமுறைகளின் நாட்டுப்பற்றும், ஊழலில்லாத இந்தியாவினை பார்க்கும் ஆவலும் நன்றாகத் தெரிகிறது.



அவர்கள் மட்டுமன்றி அனைத்து தர மக்களும்(மேல் மட்ட, நடுத்தர, ஏழை மக்களும்) கொடுத்த ஆதரவுதான் மத்திய அரசை மண்டியிட வைத்து விட்டது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும் அன்னா ஹசாரேதான் இனி அடுத்த மகாத்மாவாக இருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்ற முறை தெரிவிக்காத ஆதரவினை இந்த முறை நிறைய சினிமா நடிகர்கள், நடிகைகள் தெரிவித்திருந்தினர். மேலும் மீடியாவின் பங்குதான் இத்தனை மக்களுக்கும் அன்னாவின் போராட்டத்தை எடுத்துரைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது. லோக்பால் மசோதா இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் நம் நாடு எப்படி மாறும்?ஆவலாக உள்ளது? இது சம்பந்தமாக நிறைய நண்பர்கள் பகிர்ந்த விசயம் இது.



நம் நாட்டிற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரில் 1982-ல்தான் ஜன் லோக்பால் மசோதா இயற்றப்பட்டது. இயற்றிய சில வாரங்களில் மொத்தம் 142 அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரே நாளில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். (ஆச்சர்யமாக இருக்கே!). இன்று இந்த சிங்கப்பூரில் 1% மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். அரசும் வரிச்சுமையை மக்களின் மேல் திணிப்பதில்லை. அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம்+பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. மேலும் 8% மக்கள்தான் அங்கு படிப்பறிவில்லாமல் இருக்கின்றனர். 90% மக்களிடம் வெள்ளைப் பணம்தான் புழங்குகிறது(கருப்பு பணத்திற்கு எதிர்பதம்). 



வேலையில்லாத திண்டாட்டம் 1%  தான். நவீன மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் மக்களுக்கு கிடைக்கிறது. இத்தனையும் லோக்பால் மூலமாகத்தான் நடந்ததாக கூறப்படுகிறது. என்னைக் கேட்டால் லோக்பால் மட்டும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுயநலத்திற்காக ஊழல் செய்வதை நிறுத்தினால் போதும். உதாரணத்திற்கு ஒரு மருந்து வாங்கினால் அதற்குரிய பில்லை வாங்க வேண்டும்.இல்லையேல் அந்தப் பணம் கடைக்காரருக்கு கருப்புப் பணம்தான். பார்க்கலாம் இனிமேல் என்ன நடக்குமென்று?!

*******************************************

மற்றவை - தவறு செய்தால்?? தண்டனை .....!!

         * தவறு செய்தால்? தண்டனை  .....!! *




                                 படம்: ராஜிவ் காந்தி படுகொலை செய்த தனு(இடது முதல்)

செப்டம்பர்-9ந்தேதி தூக்கு:  
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தூக்குதண்டனையை எதிர்த்து நிறைய அரசியல்வாதிகளும், ஈழத்து மக்களுக்கு ஆதரவு தருபவர்களும் பேரணியும் , ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர். இதனைப் பற்றி எனது கருத்துக்கள்.


                                                      படம்: ராஜிவ் காந்தி படுகொலை

1991 மே 21 அன்றுதான் ராஜீவ் காந்தியை தனு என்கிற தேன்மொழி ராஜரத்தினம் மனித வெடிகுண்டு வடிவில் வந்து படுகொலை செய்த நாள். ஒரு பெண்ணுக்கு எப்படி இந்த துணிச்சல் வந்தது என்ற கேள்வி எனக்கு பல முறை வந்தது. படுகொலை தொடர்பான நிறைய விசயங்களைப் படித்த போது, தனுவின் தந்தை LTTE போராளி என்பது, LTTE இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் கூட அவரது திறமைக்காக மெடல் வாங்கியது, போன்ற விசயங்கள் தெரிய வந்தது. மேலும், தனுவின் சகோதரரை இந்தியா அனுப்பிய அமைதிப்படையினரால் கொல்லப் பட்டதும், அந்தப் படையினரால் தனு கற்பழிக்கப்பட்டு சின்ன பின்னமானதும் தெரிய நேர்ந்தது. அந்தக் கோபத்தில் தான் அவர் ஒரு மனித வெடிகுண்டாக மாறி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டதாக சில பத்திரிக்கை செய்திகள் சொல்லியிருந்தது.


                                                படம்: தனியே கிடந்த தனுவின் தலை

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ஈழத்தில் போர்களின் போது நடந்த தாக்குதல்களின் வீடியோக்களைப் பார்க்கும் போது, ஈழத்து ஆண்களை ஆடையின்றி சிங்கள அரசு ராணுவத்தினர் பலவாறு கொடுமைப் படுத்தியது மனதை வருந்தச் செய்தது. மேலும் ஈழத்து பெண்களை எல்லாம் அவ்வீரர்கள் அனைவரும் கற்பழித்து துன்புறுத்தி கொல்வது, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை துகிலுறுத்தி அந்த உடல்களைப் பற்றி அவர்கள் ஏளனமாக பேசுவதும் பார்த்த போது ஏன் இவ்வளவு வஞ்சம் இவர்கள் மனிதில் என்று கேட்க தோனியது.




மொத்தத்தில் ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்த்தியது ஒரு குற்றம்தான். அந்தக் குற்றத்தில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது ஒரு விதத்தில் நியாயமாகப் படுகிறது. ஏனெனில் அந்தப் படுகொலையை இவர்கள் நிகழ்த்திய போது, எத்தனை அப்பாவி மக்கள், சிறுமிகள் இறந்தனர். இன்று இந்த மூவருக்கும் வழங்கிய தண்டனையை எதிர்க்கும் நபர்கள், அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அந்தச் சம்பவத்தில் இறந்திருந்தால் அவர்கள் மன நிலை இப்போது எப்படி இருக்கும். என்ன, குற்றம் செய்தவர்களுக்கு இவ்வளவு தாமதமாக தண்டனையை அறிவித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏளனமாகத்தான் பார்க்க முடிகிறது. நிச்சயம் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

                                                                          படம்: நளினி

குற்றம் செய்ததாக சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ஒரு பெண் என்பதாலும் , அவரது மகள் (தற்போது பாட்டியிடம் வசித்து வருகிறார்) எதிர்கால வாழ்க்கைக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைத்தது கொஞ்சம் ஏற்புடையதாக இருக்கிறது. ராஜிவ் கொலையாளிகளை தனது வீட்டில் தங்க வைத்ததனால்( அவரின் காதலன் தான் முருகன், பின்புதான் திருமணம் செய்து கொண்டனர்) அதாவது குற்றம் செயதவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தினால், இத்தனை ஆண்டுகளாய் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். எப்பொது நளினியை விடுதலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

படம்: நளினியின் அம்மா மற்றும் நளினியின் மகள்

சிறையில் இருக்கும் நளினி தனக்கு சிறையில் நிகழும் கசப்பான அனுபவங்களை விளக்கி சிறை அதிகாரிக்கு ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதனைப் படிக்கும் போது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களின் உரிமைகள் அனுமதிக்கப்படுகிறதா?இல்லை மறுக்கப் படுகிறதா? என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது.

நளினியின் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்:


Link:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv0zSYGlJj9uWy1_V4EqR1CYYpshVk_v7gSEC9HMtdkYlcMsksndz7EcBxgT9rlhC1wieNmtJtl6lf7Q5kZ7w2PqcXRznXkCsAjsmpWup0AYDIHGsTsz38kOg7RQUo9G5t1vCwhBhpE0-t/s1600/Nalani-10001.jpg

(continue...)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6xEBlbvqwFQiX-ecsccdFIwYjEqIk_AMpeSCtEODrRt8ljnea5jgFvME9FPxQrzMe7qiMvdYDNbv0ipD_ZIB12f_pGg11skDhAqvE9cW9P8LmsMV9G1P80px9nXF4BSVqbLGT-9e3F6n4/s1600/Nalani-20001.jpg

(continue...)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcMQ8bMIGVvw5BbfzzDQySeaUnhfoqfIpY-501PkmsppFp9UXjlvn7I0SkMFR3k1qE_-oU_iHP9dX0JY9g2lUwrpj_r6QnTuAl2EaHngZVdBOGc7S-Sk-lFACgcg4gPcPn4OCvDuxm6MBi/s1600/Nalani-30001.jpg

#################################################

Thursday, August 25, 2011

எ.பி.க - 14

                     * எ.பி.க - 14  *

10,000 ஹிட்ஸ்களைத் தாண்டி விட்டது எனது வலைப்பூவின் விசிட்டர்ஸ் கவுன்டர்ஸ். மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தை சில நிமிடங்கள் எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்வதற்காக பயன்படுத்தியமைக்கும், என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் உங்கள் கருத்துக்களை சொன்னதற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!. உங்கள் ஆதரவுதான் எனது வலைப்பூவிற்கு பச்சையம். எனவே வலைப்பூவின் சுவாசத்திற்கு தினமும் பச்சையம் கொடுங்கள். நன்றி!.


இதுவரை எனக்கு பிடித்த கவிதைகளில் நிறைய வகைகளை வெளியிட்டுள்ளேன். விலங்குகளை பற்றின கவிதை எதுவும் வெளியிடவில்லை. எழுதுவதும் மிக அரிது. யாராவது எழுதியிருப்பார்களா என்று அதனைப் பற்றி தேடிய போது இந்தக் கவிதை படிக்க நேர்ந்தது. ஒரு ஐந்தறிவு ஜீவன் படும் பாட்டை அது நம்மிடம் சொல்வது போல் எழுதிய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.

* ஆடு *



பசும்புல் வெளியில்
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன

காந்திக்கு பால்சுரந்த
கருணைக்கு பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு

காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி

இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்

சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்

வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்

எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்

விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்

ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.

நன்றி - அண்ணாமலை

*****************************************************