Thursday, July 14, 2011

தெரிஞ்சுக்கோங்க - WiTricity

 * WiTricity *

WiTricity (Wireless Electricity) என்ற பெயரில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் (massachusetts) உள்ள நிறுவனம், கம்பில்லா மின்சாரத்தை வழங்கும் ஒரு காயில்(Coil) போன்ற ஒரு டிவைஸை(Device) கண்டுபிடித்திருக்கின்றனர்.


MIT -ல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்பின் காப்புரிமை(Copyrights)-யையும் வாங்கிவிட்டனர்.

 அவர்கள் கண்டுபிடிப்பு இதுதான்.




மின்சாரத்தை ஒரு காயில்(Coil) வழியாக கடத்தும் போது, அந்த காயிலைச் சுற்றி எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்(Electro magnetic Field ) உருவாகிறது. அந்த எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்-ஐ இன்னொரு ரிசீவர்(Receiver) மூலம் பெற்று மின்சாரமாக மாற்றி சிறப்பான வகையில் தேவையான Frequency-ல் அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் கேபிள்கள் இல்லாமலே மின்சாரத்தை பெற முடியும்.



இதனை நமது வீட்டில் சீலிங்(Ceiling) -ல் பொருத்திக் கொண்டால் போதும், வீட்டிலிருக்கும் அனைத்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் கேபிள்கள் பொருத்தாமலே மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம்.



பேட்டரியை பயன்படுத்தும் செல்போன், லேப்டாப், எலக்ட்ரிக் கார்கள் அனைத்துக்கும் சுலபமான முறையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இன்றைய உலகில் பாப்புலராக உள்ள L.C.D, LED T.v க்கும் இனி கேபிள்கள் இல்லாமல் சாதரணமாக சுவற்றில் மாட்டி வைத்துக் கொண்டு டி.வி பார்க்கலாம்.

இந்தக் கண்டுபிடிப்பில் எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்ட்(Electro magnetic Field ) -ஐ பயன்படுத்தி மின்சாரத்தை பெறுவதால் 100% பாதுகாப்பு உள்ளது என்று கண்டுபிடிப்பாளர்கள் உறுதி கூறுகின்றனர்.

இதனைப் பற்றிய விளக்கத்தை கீழே வரும் விடியோவில் பாருங்கள்.



Ref : http://www.witricity.com/

 ***************************************************************

Wednesday, July 13, 2011

மற்றவை - ஃப்ளாஸ்பேக்

னக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரனின் ரஜினிகாந்த் பற்றிய கட்டுரை இது. பாட்ஷா படத்துக்கு பாலகுமாரன் தான் வசனகர்த்தா. அவர் எழுதிய சூரியனோடு சில நாட்கள் என்கிற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இது.



ரஜினியின் மிகப் பெரிய வெற்றிக்கும் அவரது செல்வாக்கிற்கும் உண்டான காரணத்தை அவருடன் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

படித்து பாருங்கள்.. இதனை நான் வெளியிட காரணம் இந்த கட்டுரையின் முடிவில் வரும் ரஜினியின் வார்த்தைகள் , வாழ்க்கையில் சாதிப்பவர்கள், சாதிக்க நினைப்பவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரை பாட்ஷா படத்தை உருவாக்கும் போது  ஏற்பட்ட அனுபவத்தை பாலகுமாரன் சொல்லியிருக்கிறார்.

சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.

நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.

சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.
 

இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷா படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.

சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.

‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.

இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.

எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.

"உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.

மூன்றாவது மாணிக்பாட்ஷாவிற்கு
வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.

ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.

இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “ன்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் .
கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷா நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.

நன்றி - பாலகுமாரன் பேசுகிறார்

**************************************************************

Tuesday, July 12, 2011

தெரிஞ்சுக்கோங்க - துளசி செடி

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
பல வீடுகளில் இன்று அழகுக்காக பல தினுசு தினுசா செடி வளர்க்கின்றனர்.மிகச் சிலரே துளசி செடியினை வளர்க்கின்றனர், அதன் பயனையும் அனுபவித்து வருகின்றனர். ஆனால், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதன்மையான செடி, துளசி செடிதான்.துளசிச் செடியினை வளர்க்க பெரிய இடமோ , பராமப்பரிதற்கு நிறைய நேரங்களோ , அதிக செலவோ தேவையில்லை.


 
துளசி செடி வளரும் தன்மை:
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண் தேவை.
வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

துளசி செடியின் பயன் தரும் பாகங்கள்:
இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி செடியின் பயன்கள்:
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
 
 
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
 
 
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

 
வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
இன்று பலவகையான மருந்துகளில் துளசி சேர்க்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அப்படின்னு இன்னும் எத்தனை எத்தனை காய்ச்சல் நம்மை வதைக்க வருகிறதோ தெரியவில்லை.

தொடர்ந்து நாம துளசி உபயோகிசிகிடு வந்த...இந்த மாதிரி நோய்கள், காய்ச்சலில் இருந்து போராட உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

நாமும் இனி துளசி செடிய வீட்டுல  வளர்க்கலாமே..

நன்றி- ஈகரை
******************************************************

Monday, July 11, 2011

எனது படைப்புகள் -11: சிலை

   Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.

ணையத்தில் ஒரு  படத்தைப் பார்த்தேன்.. பார்த்தவுடன் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பின்பு  அதனை ஒரு மனிதனாக நினைத்துக் கொண்டு என் அனுபவத்தையும் சிந்தனையும் கலந்து எழுதியிருக்கிறேன்.

தன்னை நல்ல மனிதனாக சீர்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு மனித மனத்தின் சிந்தனையை வரிகளாக மாற்றியிருக்கிறேன். (கிட்டதட்ட இது எனக்குள் இருக்கும் எண்ணங்கள்தான்.)

படித்துப் பாருங்க..
                        *  சிலை *




வலிக்கத்தான் செய்கிறது..
என்னை நானே செதுக்கிக் கொள்வதற்கு..

கண்ணீர் கூட தெறித்து விழுகிறது
செதுக்கும் போது விழும்
சிறு கல் துகள்கள் போல...

என்ன செய்வது..
என்னைச் சிலையாக்கிக் கொள்ள
வேறு வழியுமில்லை..
வேறு நாதியுமில்லை..

எங்கெங்கும் மனித சிலைகள்
ஆணாகவும் பெண்ணாகவும்,
வெவ்வேறு உருவத்தில்
வெவ்வேறு குணத்தில்,
உலவிக் கொண்டிருக்கிறது...

எனக்கான உருவத்தையும்
குணத்தையும்
அமைத்துத் தருபவர் யார்?
தேடினேன்..
கிடைக்கவில்லை.

கல்லாக பிறந்த என்னை
கற் சிலையாக மாற்றிக் கொள்ள
ஆசைப்பட்டேன்..

சரியான வழிமுறையும்,
அதற்கேற்ற சிந்தனையும்
யாரேனும் சொல்வார்களா?
என்றெல்லாம் கேட்டும் பார்த்தேன்...

யாரும் எனக்காக வரவில்லை..

வருத்தப்பட்டேன்..
என்னை வடிப்பதற்கு
எவரும் இல்லையென்று
வாடவும் செய்தேன்..

யார் செய்த புண்ணியமோ..
எனக்கும் கிடைத்தது,
உளியும்(மொழியும்), சுத்தியலும்(புத்தகமும்)...



என்னை நானே
செதுக்கிக் கொண்டேன்..
வலிக்கத்தான் செய்தது...

ஏனெனில்
துள்ளி ஓடும் மனதை
என் அறிவுக் காவலன்
அவ்வப்போது தடுத்து விடுகிறான்...


 
சில நேரம் சண்டை கூட
போடுகிறான்..
கேட்டால்...
என்னை சீர்படுத்துவதாக சொல்கிறான்..


உண்மைதான்...
இப்போது
எனக்கும் உருவம் கிடைத்து விட்டது..


கல்தானே என்று நினைத்த
மனித மனங்கள்
இப்போது
என்னை கவிதை என்று
உவமை சொல்கிறது.

எதிர்பார்க்காதீர்கள்...
கல்லாக இருக்கும்
உங்களை சிலையாக வடிக்க
யாரேனும் வருவார்களா?
என்றெல்லாம் நினைத்துக் கொண்டு
காத்திருக்காதீர்கள்..

உளியும், சுத்தியலும் இருந்தால் போதும்
நம்மை நாமே
சீர்படித்துக் கொள்ளலாம்..
சிலையாக
மாற்றவும் செய்யலாம்.

யோசியுங்கள்..
இனிமேலும் சிற்பியைத்
தேடுவதை விட்டு விட்டு
உளியையும் , சுத்தியலையும்
தேடலாமே..!.

****************************************************

Sunday, July 10, 2011

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date

                Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.

ங்கள் வீட்ல பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா? இல்லைன்னா இந்த பதிவப் படிச்சு  தெரிஞ்சுக்கோங்க.



காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன.  அதனால இனி உங்க வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ  அல்லது வாங்கும் போதோ முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்க. ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?




படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின்(Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)


உதாரணத்திற்கு,

மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.




இந்தப் படத்தில் D-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2013-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

என் வீட்டில் இருக்கும் சிலிண்டரில் C-18 என்று எழுதப்பட்டிருக்கிறது .       
( அப்பாடா..! நிம்மதியாப் போச்சு..! )

டிஸ்கி:
என்னங்க...எங்க போறீங்க..கிச்சனுக்கா..பலே.பலே..இத...இததான் நான் எதிர்பார்த்தேன்..

குறிப்பு : ஹோட்டல் வைத்திருக்கும் முதலாளிகளும், சமையல் தொழிலாளர்களும் அவசியம் தெரிஞ்சுக்கனுங்க..

**********************************************************

மற்றவை - இதமோ இதம்

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.

னது எண்ணங்களையெல்லாம் எழுத்துக்களாக்கி ஒவ்வொரு பதிவையும் தினமும் வெளியிடுகிறேன். அந்த பதிவுகளை எல்லாம் படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும்/நண்பிகளுக்கும் ஒரு சின்ன கோரிக்கை..

எனது பொன்னான நேரத்தை  செலவிட்டு ஒவ்வொரு பதிவையும் தருகிறேன். அதனால் எனது வலைதளத்திற்கு வந்து, பதிவைப் படித்து அப்புறம் நேரமிருப்பின் உங்களால் முடிந்தால் கருத்துரையுங்கள். படித்துவிட்டு கருத்துரைத்தால் கொஞ்சம் சந்தோசப்படுவேன். இல்லையெனில் படித்தாலே போதும்.  பதிவையே படிக்காமல் வெறும் கமெண்ட் போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை(உங்களுக்கும், எனக்கும்). அதனால்தான் " ஓய்வு நேரத்தில் படிச்சா போதுங்க " என்று எனது நியூஸ்லெட்டரில் எழுதி உங்களுக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

சரி..விசயத்துக்கு வருவோம்..

மிழ் இசையுலகில் நம்ம இசைஞானி இளையராஜா எட்டிய எல்லையை இன்னும் தற்போதைய இசையமைப்பாளர்கள் எட்டவில்லை. 1980 - 1992  களில் அவர் ராஜ்யம்தான் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். 1992-ல் தான் A.R.ரகுமான் அறிமுகம்.

இளையராஜா இசையில் வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இரவு நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம் கொஞ்சம் லயிக்கும். வாணி ஜெயராம்-க்கு நிச்சயம் இது ஒரு மாஸ்டர் பீஸ் பாடல்தான்.



என்னைக் கவர்ந்த ஒரு ஹிந்தி பாடல். இது கிஷோர்குமார், ஆஷா போன்ஸ்லே பாடியது. நீங்களும் பாருங்கள். இனிய இரவு நேரத்தில் கேட்பதற்கு உகந்தது.


மனம் பரபரப்பாக இருக்கிறதா?டென்ஷனா? கோபமா? மன அழுத்தமா? அந்த நேரத்தில் கீழே வரும் இசையை ஹெட் செட்டின்(Head set) மூலம் கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மனம் லேசாகும். நான் கேட்டேன். மனம் லேசானதை உணர்ந்தேன்.


டவுன்லோடு செய்யவதற்கும் லிங்க் கொடுத்துள்ளேன்., நீங்களும் பயனடைய..
நண்பர்களுடன் பிக்னிக் செல்ல போகிறீர்களா? போகும் போது கீழே வரும் இந்தப் பாட்டையும் உங்கள் சி.டி யில் பதித்துக் கொண்டு போங்க. என்ஜாய்(enjoy) பண்ணலாம். அவ்வளவு அம்சமான பாட்டு மால்குடி சுபா பாடியது.

பெண்களும் கேட்கலாம்.

சும்மா Play பண்ணுங்க...



 Link:

http://66.151.148.5/files/33832903_DFgxC_46ad/Kayaduthu--Aparichithan.mp3

*******************************************************

Friday, July 08, 2011

எ.பி.க - 8

Note: IE is not working. please use Firefox,Chrome,safari browsers.
 
முதன் முதலில் வலைப்பதிவு ஆரம்பிக்க நினைக்கும் போது, ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தோடுதான் ஆரம்பித்தேன். " இருக்கின்ற வேலைப் பளுவில் இந்த ப்ளாக்-ஐ படிக்க எல்லோருக்கும் நேரம் கிடைக்குமா? ", என்றெல்லாம் கூட  நினைத்தேன்.

ஆனால் எனது ப்ளாக்-ஐ தினமும் படித்து எனது எழுத்துக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில்,  ஒவ்வொரு டாபிக் பற்றி எழுதும் போது, " என்ன தலைப்பு வைக்கலாம் " என்று கொஞ்சம் யோசிப்பேன். ஆனால் இப்போதெல்லாம் எனது நண்பர்களே நிறைய தலைப்புகளை சொல்கின்றனர். " இதப்பத்தியும் உங்க ப்ளாக்குல எழுதுங்க.., " என்று சில விசயங்களை அன்புடன் என்னிடம் சொல்லுகின்றனர்.

என்னுடன் பணிபுரியும் எனது சக நண்பர்களான முத்துகிருஷ்னன், செந்தில், சுரேஷ் கிரிம் , அசோக், நாகராஜ், ஹரி அனைவரும் அவ்வப்போது சில விசயங்களை சொல்லியும், இ-மெயில் அனுப்பியும் ப்ளாக்கில் எழுத ஆர்வமூட்டுகின்றனர். அவர்களின் அன்புக்கு இதயங்கனிந்த நன்றி.

இந்த வலைப்பதிவின் மூலம் சில ஆச்சர்யமான விசயங்களும் எனக்கு நடக்கின்றன. நான் யார் என்று கூட அறியாமல் என்னுடன் நட்பு கொண்டு, எனது ஒவ்வொரு பதிவிற்கும் தத்தம் கருத்துக்களை சொல்லி என்ன செம்மைபடுத்தி வருகின்ற அத்துனை வலைப்பதிவு நண்பர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி.

இன்றைய பதிவு தலைப்பு எ.பி.க ( எனக்குப் பிடித்த கவிதை)

இதுவரை புத்தகங்களிருந்தும், பத்திரிக்கையிலிருந்தும் நான் படித்து, ரசித்த கவிதைகளை எ.பி.க என்ற தலைப்பில் வெளியிடுவது வழக்கம். இன்று எனது தோழியான பனிஷா அவர்கள் மிகவும் ரசித்த ஒரு கவிதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் அந்தக் கவிதையை வாசித்த விதமும் , கவிதையின் வார்த்தைகளும் என்னை மிகவும் ரசிக்க வைத்தன. அந்தக் கவிதை இதுதான்.

கவிதையின் கரு.

ஒரு இளைஞன் , ஒரு பெண்ணின் மீது தீராத காதல் கொள்கிறான். அவளிடம் ஒரு நாள் தன் காதலை எடுத்துச் சொல்லியவுடன், அந்தப் பெண் அந்தக் காதலை நிராகரித்து விடுகிறாள். அவனால் அவளை பற்றிய நினைவுகளை சாகடிக்க முடியவில்லை. உருக்கத்துடன்  ஒரு கவிதையை எழுதுகிறான்.
இதுதான் அவன் எழுதின கவிதை..

அப்பப்பா.!..ஒவ்வொரு வரிகளிலும் அவனின் உண்மைக் காதலையும், அவளால் நிராகரிக்கப் பட்ட காயத்தையும் படிக்கின்ற நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

தோழி பனிஷா., அருமையான இந்தக் கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி !.

                       * நீயின்றி நானில்லை *

தாமரை இலைத் தண்ணீராய்
அவள் மனதில் நான்.,
கிணற்று நீர் பாசியாய்
என் மனதில் அவள்.

என்னவளே..!
உன்னால் ஏற்பட்ட மனக்காயம்
தழும்புகளாய் என் இதயத்தில்.
இன்னமும்
தழுவிக் கொண்டிருக்கிறது..

உன்னுடைய ஒவ்வொரு
புறக்கணிப்பிலும்
என் இதயத் தளும்புகள்
மீண்டும் மீண்டும் காயங்களாகும்.

மழைத்துளிகளின் தொடர்தாக்குதலுக்கு
அஞ்சாத பயிர் போல
பொழுதும் வளர்கிறது
உன்னைப் பார்க்கும்
என் ஆவல்.

என் ஜீவ ஆற்றின் ரத்த நாளங்கள்
எல்லாம் சீறிப் பாய்கிறது
உன் நினைவுகள்.

என் மூச்சுக் காற்று
முட்டி மோதி திணறும்
அந்த முகடுகளிலெல்லாம்
என் சுவாசத்திற்கு சுகமூட்டும்
மூலிகைத் தென்றல் நீ..!
என்னை விலகச் சொல்கிறாயே.

வானத்திலிருந்து நீலம்
வழித்தா எடுக்க முடியும்..?
இதயத்தில் இருக்கும்
உன் நினைவை
பிரித்தெடுக்கவா முடியும்..?

அசையாத காற்று , அலையாத கடல்
ஓடாத நதி, பூவாத மலர்,
கூவாத குயில்..,
இவையெல்லாம்
சாத்தியமென்றால்
நீயில்லாத நானும்
சாத்தியம்தான்..

*****************************************************