Tuesday, August 23, 2011

தெரிஞ்சுக்கோங்க - ஆச்சர்யமான சில விசயங்கள்

தெரிஞ்சுக்கோங்க - ஆச்சர்யமான சில விசயங்கள்

1. நான்கு வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகளை கேட்கிறது.

2. ஆடுகளுக்கு மேல் முகவாயில் முன் பற்கள் இல்லை.

3. வாஷ் பேஷினில் நின்று கொண்டு, உங்கள் பற்களை brush செய்யும் போது திறந்து விடும் தண்ணீரினால் ஒரு நிமிடத்திற்கு நான்கு கேலன்கள் வீதம்  தண்ணீர் வீணாகிறது.

4. 18 வயதிற்கு மேற்பட்ட மனித உடலிற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 88 பவுண்டுகள் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

5. ஒரு நபரை கார்பன் மோனாக்சைடு மூலம் 15 நிமிடங்களுக்குள் கொல்ல முடியும்.

6. இடது கை பழக்கம் கொண்டவர்கள் பெண்களை விட ஆண்களே அதிகம்.

7.லியனார்டோ டாவின்சி-யினால்தான் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டது.

8. முயல்களுக்கு வாந்தி வராது.

9. ஒரு பவுண்டு வெண்ணெய் எடுக்க 29 கப் பால் தேவை.

10. உலகிலுள்ள மொத்த எறும்புகளின் எடையானது, மொத்த மக்களின் எடையை விட அதிகம்.

11. கொசுக்களுக்கு பற்கள் உண்டு.

12.எகிப்து மன்னன் இரண்டாம் ராம்செஸ்(Ramses) இறந்த வருடம் 1225 B.C. அவரது மரணத்தின் போது அவரருக்கு 96 மகன்கள் மற்றும் 60 மகள்கள் இருந்தது.

13.அமெரிக்காவில் தர்பூசணிகள் 200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகைகளில்  வளர்க்கப்படுகின்றன.

14. சராசரி மனிதனின் வாயை விட ஒரு நாயின் வாய்தான் சுத்தமாக உள்ளது.

15. ஒவ்வொரு வருடமும் சுமார் 20 பில்லியன் தேங்காய்கள் பறிக்கப்படுகின்றன.

16. ஒரு பென்சிலைக் கொண்டு ஒரு கோடு வரைந்தால் அதனை 35 மைல்கள் வரைதான் நீட்டிக்க முடியும்.

 17. நிமிடத்திற்கு 11,500 முறை ஒரு தேன் பூச்சி தன் இறக்கைகளை விரிக்கிறது.

****************************************************





6 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சர்யமான சில விசயங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கோகுல் said...

அடேங்கப்பா!ஆச்சர்யங்கள்!
பகிர்வுக்கு நன்றி!

N.H. Narasimma Prasad said...

அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான தகவல்கள்.

// உலகிலுள்ள மொத்த எறும்புகளின் எடையானது, மொத்த மக்களின் எடையை விட அதிகம்.//
உலகத்துல அவ்வளவு எறும்புகளா இருக்கு???

Anonymous said...

ஆகா .....ஆச்சரியம் ....... நன்றிகள் ............

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...