Saturday, June 18, 2011

மற்றவை-விமர்சனம்

            ***விமர்சனம்-அவன் இவன்***


கமுதி கோட்டை என்னும் ஊரில் ஒண்டிக் கட்டை ஜமின்தாராக ஹைனஸ்
( G.M Kumar ) வாழ்ந்து வருகிறார். அவருக்கு வால்டேர் வணங்காமுடி(Vishal),
கும்புடறேன் சாமி ( Arya ) இருவரும் இரு கண்கள் போல. மிகுந்த பாசத்துடன் இருக்கிறார். விஷால் ஒரு ஆண்மையும், பெண்மையும் கலந்த ஒரு கூத்தாடி.
அம்பிகாவின் மகன். ஆர்யா அவருடைய தம்பி. பிரபா ரமேஷ்-ன் மகன். இருவருக்கும் அப்பா ஒருத்தரே ஸ்ரீ காந்த் ( Anand Vaidyanathan ). ஆர்யாவும், விஷாலும் சின்ன சின்ன திருட்டுக்கள் (குலத்தொழிலாம்!) செய்து கொண்டிருக்கிறார்கள். இடையில் ஹைனஸ், ஆர்யா, விஷால் மூவரும் ஊரையே " காமெடி" என்ற பெயரில் அலப்பறை செய்கின்றனர். இடையில் விஷால் ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் பேபி-ஐ (Janani Iyer) டாவடிக்கிறார். ஆர்யா, காலேஜுக்குப் போகும் தேன் மொழி-ஐ (Madu Shalini) டாவடிக்கிறார். பின்பு கள்ளக் கடத்தல் செய்கின்றனர். அப்புறம் மாமிசத்திற்காக மாடுகளை விற்கும் வில்லனை,  ஹைனஸ்-ம் ஆர்யாவும் புளூ கிராஸ் உதவியுடன் போலிஸில் மாட்டி விடுகின்றனர். அந்த பகையில் வில்லன், ஹைனஸை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி கொன்று விடுகிறார். அதற்காக வில்லன் பழி தீர்க்கப் படுகிறார். அது எப்படி என்பதை வெண் திரையில் காண்க.

சேது, பிதாமகன் போன்ற அருமையான படங்களை எடுத்து, திரையுலகின் தனித்துவம் மிக்க இயக்குனராக அவதாரம் எடுத்த பாலாவுக்கு, இந்தப் படம் சறுக்கல்தான்.

சரி. படத்தின் ப்ளஸ்-ஐப் பார்ப்போம்.

ப்ளஸ்:
விஷாலின் நடிப்பு: மனிதர் நிறைய உழைத்திருக்கிறார். ஒன்றரைக் கண் ஆசாமியாக நடித்திருக்கிறார். ஜனனி ஐயரை கரெக்ட் பண்ண , போலிஸ்காரர் தரும் விருந்துக்கு வரும் விஷாலின் கெட்-அப், நடிப்பு சூப்பர். நல்ல காமெடி. அவரின், நவ ரசங்களையும் நடித்துக் காட்டும் ஒரு காட்சி நிச்சயம் பாராட்டப்படும். இப்படி ஒரு கேரக்டரை விஷாலுக்கு கொடுத்து, அவரை மாறுபட்ட நடிகனாக மாற்றிய பாலாவைப் பாராட்டலாம்.


ஜி.எம்.குமாரின் நடிப்பு : ஜமிந்தார் பந்தா பண்ணும் ஆசாமியாக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்பு இவரின் நடிப்பு மிகவும் அருமை. கடைசியில் வில்லனால் நிர்வாணப்படுத்தி, துன்பப்பட்டு, சாகும் போது நன்றாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் அவருக்கும். அவரை இயக்கிய பாலாவுக்கும்.

ஆர்யாவின் நடிப்பு: பிதாமகனில் சூர்யா செய்த கேரக்டரை இதில் ஆர்யா செய்திருக்கிறார். சில இடங்களில் மட்டும் தான் காமெடி ரசிக்கும் படியாக இருக்கிறது.

ஒளிப்பதிவு : ப்ரமாதம். கடைசியில் விஷால், வில்லனை துவம்சம் செய்யும் காட்சி அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

இசை : யுவன் சங்கர் ராசாவின் இசையில் ஒரு பாடல் கேட்கும் படியாக உள்ளது. BGM-ல் மனுஷன் கலக்கி இருக்கிறார். படத்தின் சில இடங்களில் அவரின் பின்ணணி இசை, காட்சியை விட பேசுகிறது.



மைனஸ்:
திரைக்கதை : பிதாமகன் சாயல் அவ்வப்போது தென் படுகிறது. கள்ளக் கடத்தலை செய்த பின் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

பெண் போலிஸ்-திருடன் டாவு நிறைய படங்களில் பார்த்தாகி விட்டது. ஆர்யா-மது சாலினி லவ், பிதாமகன் சூர்யா-லைலாவை ஞாபகப்படுத்துகிறது. நிறைய இடங்களில் நிறைய கேள்விகள் கேட்கலாம். பதில்தான் பாலா சொல்லவில்லை. படத்தில் நிறைய இடங்களில் கெட்ட வார்த்தை பேசப்படுகிறது. அம்பிகா கூட பேசுகிறார்.

விஷால் அரவாணியா? இல்லை ஆண் மகனா? புரியவில்லை.

வில்லனின் அறிமுகம் திடீரென்று நுழைத்தது போல இருக்கிறது. அவரை, புளூ கிராஸ்-யிடம் ஜி.எம்.குமார்+ ஆர்யா மாட்டிவிட்டதால், ஜி.எம்.குமாரை அவர் துன்புறுத்தி, கொல்வது நம்பும்படியாக இல்லை. இன்னும் வேறு சில காரணங்களை காட்டியிருக்கலாம்.

படத்தின் கிளைமாக்சை ஈசியாக யூகித்து விட முடிகிறது. வில்லன், ஜி.எம்.குமார்+ஆர்யா  மோதல், அப்புறம் வரும் ஜி.எம்.குமார்+ஆர்யா+விஷால் பாசப்பிணைப்புக் காட்சிகள் அனைத்தும் நமக்கு முன்பே சொல்லிவிடுகிறது.

இயக்குனர் பாலா சார், அடுத்த முறை நிச்சயம் ஒரு நல்ல படைப்பைத் தரவும்.

                               அவன் -இவன் : பிழைப்பது கஷ்டம்

********************************************************************

Friday, June 17, 2011

கேள்வி-பதில் : 4


1.கேள்வி : Casting Couch என்பது என்ன?





பதில் : நடிகைகள் வாய்ப்புகள் பெறுவதற்காக தங்கள் உடலை வெகுமதியாக கொடுப்பதுதான் Casting Couch என்பது. சினிமா போன்ற பொழுதுபோக்கு        துறைகளில்தான் இது அதிகமாக நிகழ்கிறது. அங்கு இது ஒரு எழுதபடாத சட்டம். முக்கியமாக இந்த Casting Couch விசயத்தில்         ஹாலிவுட்,பாலிவுட்,டோலிவுட்,கோலிவுட் எதுவுமே சளைத்ததல்ல. எல்லாம் பணம் மற்றும் புகழ் படுத்தும் பாடு.

2. கேள்வி : மனித உடலில் கிட்னி ரெஸ்ட் எடுக்குமா?




பதில் : மனிதனின் இரண்டு கிட்னிகளும் ஒரு நாளைக்கு 1,750 லிட்டர் ரத்தத்தை ஃபில்டர் பண்ணிஸ் சுத்தம் செய்கின்றனர. அவை ரெஸ்ட் எடுத்தால்       " கிட்னி ஃபெயிலியர் " என்று அர்த்தம்.(திமிங்கிலத்திற்கு அதன் கிட்னி ஒரு நாளைக்கு 9000 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது).

3. கேள்வி : முதல் " ரெட் லைட் ஏரியா " எங்கு?





பதில் : கி.மு. 594-ல் ஏதென்ஸில்! சட்டமேதை ஸோலன் அப்படி ஒரு ஏற்பாட்டக் கொண்டு வந்தார். விலை மாதர்கள் ஸ்பெஷலாக வரியும் கட்டவேண்டும்  என்று சட்டம் இயற்றினார் அவர். எடுத்த எடுப்பில் சூடு பிடித்த, மிகவும் பிரபலமான முதல் தொழில் அதுவே!

4.கேள்வி : "டைட்" டான இறுகப்பிடிக்கும் ஜீன்ஸ்(பேண்ட்) குமரிகளுக்கு நன்றாக இருக்கிறதா?




 பதில் : குமரிகளுக்கு நன்றாகத்தான் இருக்கிறது(பார்க்க படம்).
               "கும்" மரிகளுக்கு தான் சரிப்படவில்லை.

5. கேள்வி : ஒரு ஜோக் ப்ளீஸ்?


பதில் : நம்ம மத்திய அமைச்சர்கள் அழகிரியும், தயா நிதி மாறனும் பேசிக் கொள்கிறார்கள்.


தயா நிதி : ரொம்ப போரடிக்குது. என்ன செய்யலாம்?

அழகிரி : புதுசா குங்குமப்பூ போண்டா-னு ஒரு படம் வந்திருக்காம்.போலாமா?

தயா நிதி : என்னது...! " குங்குமப்பூ போண்டா " -வா?

அழகிரி : அதாம்பா கொம்ப்யூட்டர் க்றாபிக்சு எல்லாம் சூப்பரா 
                    பண்ணியிருக்காங்கலாம்.அந்தப் படம்.

தயா நிதி : அய்யோ..அய்யோ..! அது குங்க் ஃபூ ஃபாண்டா ( Gung fu Banda ).


*****************************************************************

Wednesday, June 15, 2011

எ.பி.க - 4


நான் மிகவும் ரசித்துப் படித்த சில கவிதை & ஹைகூ -க்களை வெளியுடுகிறேன். படித்துப் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

எ.பி.ஹை - 1

                                    குறும்படம்
 


மனைவியிடம் சொன்னேன்.
"  நானும் குறும்படம்
எடுக்கப் போகிறேன் "
பதிலுக்கு முறைத்தாள்.
உன்னைவைத்துதான் என்றேன்.
முறைத்தவள் சிரித்தாள்.


நன்றி - பாலா,பொள்ளாச்சி

எ.பி.ஹை - 2

                                          சேமிப்பு



கீரை விற்ற கிழவியிடம்
பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ருபாய் பணமும்
ஒரு மூட்டை பாவமும்!


நன்றி - சபீதா இப்ராஹிம்
எ.பி.க

                                        விலை

உயரம் கம்மி
மாநிறம்
வருமானம் போதாது
சொந்த வீடில்லை
செவ்வாய் தோஷம்
இப்படியாக
எல்லாவற்றையும்
தவிர்த்தபின்
கடைசியாக மகள் சொன்னாள்:
இப்ப வந்த வரன்
விலை கம்மி
முடிச்சுடுங்கப்பா.


நன்றி - லீலாவிஜய்,மதுரை.


***************************************************************
 


Monday, June 13, 2011

எனது படைப்புகள் - 7


                                 *** ரசனை ***



முன்பெல்லாம்,
கடற்கரை மணலில்,
நுரையோடு வரும்
அலைகள் என் பாதத்தை வருடி விட்டு
செல்லும் போது,
மனது ரசிக்கும்.
இன்னொருமுறை என் பாதத்தை வருட
வருவாயா? என
ஏங்கும்.

அப்படி ரசித்த அலையை,
உன் கை விரல்களைப் பிடித்து,
கடற்கரை மணலில் நடக்கும் போது,
பாதத்தின் நினைப்பை எப்படி மறந்தேன்?
பல முறை என் பாதத்தை
அலை வருடிச் சென்று, எனக்கு நினைவூட்டியும்,
என்மனம் உன் விரல்களைப்
பிடித்துக் கொள்ளத்தான் நினைக்கிறதே?
காதல் எதனையும் மாற்றும்.
அறிந்திருக்கிறேன்.
ஆனால்,
ரசனையையும் மாற்றுமோ?

உண்மைதான்.
இப்போதுதான் புரிந்தது,

காதல் எதனையும் மாற்றும்.
ரசனையையும் மாற்றும்.

இன்னமும் என் பாதத்தை
அலை வருடிச் செல்கிறது,
ஆனால் ரசிக்க முடியவில்லை.
காரணம்,

என் கரத்தைப் பிடித்த உன் விரல்கள்
இன்று,
இன்னொருவனின் கரத்திற்க்குள்.

மௌனமாக இருந்த என் மனதிடம்,
அருகில் வந்த,
அலை சொன்னது..,
யார் உன்னை கை விட்டாலும்,
நான் உன்னை வருடிக் கொண்டுதான் இருப்பேன்,
அழுகின்ற குழந்தையை வருடும் தாய் போல.






*************************************************************

Sunday, June 12, 2011

கேள்வி-பதில் : 3

இன்றைய எனது பதிவில் கேள்விகளை மட்டும்தான் நான் கேட்பதாக உத்தேசம். பதில் நீங்கள் தான் தர வேண்டும்.

உங்களுக்கான கேள்விகள்

1. வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்க அம்மாக்கு சாப்பாடு ஊட்டி 
   விட்டிருக்கீங்களா? ( விவரம் தெரிஞ்ச வயதிற்கு பின் )

2. ஒரு தடவையாவது வறுமையினால் சாப்பாடு இல்லாமல் அதன் 
   பசியின்    கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா?

3. காதலித்த பெண்ணின் அல்லது ஆணின் மரணம் 
   அனுபவித்திருக்கிறீர்களா?

4. வெளியூர் பயணத்தில் , பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், பணம் 
    அனைத்து திருடனிடம் அல்லது தவறுதலாக இழந்த அனுபவம்  
    உண்டா?

5. வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்க மனைவிக்குத் தெரியாம 
    சஸ்பென்சாக அவங்க பெற்றோருக்கு புது துணி எடுத்து 
    கொடுத்திருக்கிறீர்களா?

6. காதலனுடன் அல்லது காதலியுடன் இருக்கும் போது பெற்றோர்களிடம் 
   மாட்டியதுண்டா?(உண்மை மட்டும் சொல்லவும்.பொய்னா வேண்டாம்)

7. காதலியிடம் அல்லது காதலனிடம் முதல் முத்தம் அனுபவம் 
   கிடைத்திருக்கிறதா? ( பதில் சொல்றவங்க நிச்சயம் பாராட்டப்பட 
   வேண்டியவங்க. ஏன்னா இட்ஸ்  எ வெரி வெரி பர்சனல் டு எவ்ரி ஒன். 
   ஆண்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள். பெண்கள் பதில் சொல்ல 
   பயப்படுவாங்க-ந்னு நினைக்கிறேன்)

8. அண்ணன்,அக்கா, தங்கை அல்லது தம்பி இவர்கள் ஒரு தடவையாவது 
   உங்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததுண்டா?

9. வயதான பிச்சைக்காரருக்கு ஒரு தடவையாவது சாப்பாடு வாங்கி
   கொடுத்ததுண்டா?

10. வயது வந்தபின்பு பெற்றோர்கள் உங்களுக்கு செய்த ஏதேனும் ஒரு
     செயலை நினைத்து ஆனந்தப்பட்டு, அவர்கள் முன் அழுதிருக்கீறீர்களா?
    அல்லது முழு சந்தோசத்தை அனுபவித்திருக்கீர்களா? ( பெண்கள் 
    நிச்சயம்     அழுதிருப்பர். ஆண்கள் கஷ்டம்தான்)

மேற்கண்ட இந்த பத்து கேள்விகளில் உங்க பதிலை ஆம்/இல்லை என்ற வகையில் சொன்னால் பொதும் அல்லது விளக்கி சொன்னால் மற்றவங்களும் உங்களையும் ,உங்க உணர்வுகளையும் புரிஞ்சுக்குவாங்க.

முதல்ல என்னோட பதிலை எழுதறேன்.ஒவ்வொரு கேள்விக்கும் என்னோட பதில்:

1. இல்லை.
2. ஆம். ஒரே ஒரு தடவை காசில்லாம அனுபவிச்சேன்.
3. இல்லை
4. ஆம்.(ஒரு மனிதர்தான் கடவுள் உருவில் காப்பாற்றினார்)
5. இல்லை.
6. இல்லை
7. ஆம்.( அதெல்லாம் சொர்க்கம்பா! )
8. ஆம்
9. ஆம்
10. இல்லை.


இந்த கேள்விகளில்,

1-ம்கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் உங்க அம்மாவிற்கு ஒரு பாசமுள்ள நேசமுள்ள மகன்/மகள்.

1-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் முதலில் அத செய்து பாருங்க உங்க அம்மா நிச்சயம் மனதார சந்தோசப்படுவாங்க. நம்மள பெத்தவங்களுக்கு  இது கூட செய்யலீன்ன எப்படி?

2-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில இப்ப நல்ல நிலைமைல இருப்பீங்கன்னு நம்பறேன்.

2-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் நிச்சயம் உங்க பெற்றோர் செய்த புண்ணியம்தான்.

5-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் உங்க மாமனார், மாமியாருக்கு நீங்க ஒரு புள்ள மாதிரி. உங்க மனைவி உங்க மேல் உயிரையே வச்சிருக்காங்க.

5-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் முதலில் அத செய்து பாருங்க. உங்க மனைவியின் மனதில் நீங்க மகராசன்தான்.

8-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள், உண்மையிலேயே பாசமான சகோதரன்/சகோதரி.

8-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் யதார்த்த உலக வாழ்க்கையில் தான் வாழ்கிறீர்கள்.

10-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் உங்கள் பெற்றோர் உங்களுக்கு கிடைச்சது புண்ணியம் தான். சந்தோசப்படுங்க.

10-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் உங்களுக்கும் பெற்றோர்க்கும் இடையில் பாசம் கொஞ்சம்தான் இருக்கு. நடுவுல என்னமோ இருக்கு.
(மற்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ். Sorry.)

இனி உங்க பதிலை type பண்ணுங்க..

*****************************************************************

Saturday, June 11, 2011

மற்றவை - காபி

                           **காபி அடிப்பது எப்படி?**

காபி அடிச்சு பரிட்சையில நிறைய மார்க் எடுக்குறவங்களை பார்க்கும் போது, வயிறு பத்திக்கிட்டு எரியும். ராத்திரி எல்லாம் கண் முழிச்சி படிச்சு எடுத்த மார்க்கை, ஈசியா அவங்க எடுத்துடறாங்க. இருந்தாலும் அவங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யம் வருகிறது. எங்க இருந்து இவ்ளோ தைரியம் வருகிறது? சிக்கினா டமால் தான். அப்படி இருந்தும் எவ்ளோ ரிஸ்க் எடுக்கிறாங்க. அந்த தைரியத்தை நிச்சயம் பாராட்டலாம். அதுக்காக அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணல. ஏன்னா நான் அவங்க கட்சி கிடையாது. உண்மைய சொல்லனும்னா 5 மார்க் வாங்கினாலும் 50 மார்க் வாங்கினாலும் நான் நேர்மையான வழியில் வாங்க நினைக்கிறவன். அப்புறம் அவங்க அளவுக்கு தைரியம் கிடையாது. பயத்திலேயே மாட்டிக் கொள்ள நேரிடும்.

 இங்க எப்படியெல்லாம் பிட் அடிக்கிறாங்க.கொஞ்சம் பாருங்க


(எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பிட் அடிக்கிறதுக்கு) 

வீடியோவில் வர்ற குட்டிப் பையனோட பிட் அடிக்கும் ட்ரிக்ஸ் பாருங்க.

                         


நம்ம Mr. Beans எப்படி காபி அடிக்கிறாரு பாருங்க.

                       


*****************************************************

Friday, June 10, 2011

மற்றவை - பெண் வேடம்

       **சினிமாவும் பெண் வேடமும்**

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்திருந்தாலும், பாடி லாங்குவேஜ் பாராட்டும்படி இருக்காது. பாடி லாங்குவேஜில் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். ஆனால் அந்த நடிகர்களில் பெண் வேடமிட்டு அசத்தியவர்கள் யார்?, யார் யாருக்கு அந்த வேடம் கச்சிதமாக இருந்தது? யோசிக்கும் போது ஒரு சிலரை மட்டும் குறிப்பிடும் படியாக இருந்தது. அவர்களின் வீடியோவைப் பார்க்கும் போது, ஆச்சர்யமாக இருந்தது. உண்மையிலேயே  ஒரு ஆண் , பெண்ணாக நடிப்பது கஷ்டம் தாங்க.




கீழே வரும் அனைத்து வீடியோவைப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

1. Jack lemmon  & marlin manroe(Film-Some like it hot)
                
               

2.  Dustin hoffman(Film-Tootsie)


              

3. Robin Williams((Film-Mrs Doubtfire)

              

4. kamal (Avvai sanmughi)

            

5. Prashant (anazhakan)

            

 6. Vivek (Film-Guru en aalu)

           

 7 .Vikram (Film-Kanthasamy)


         


 இதில் என்னைக் கவர்ந்தவர்கள் :

1. டுஸ்டின் ஹோப்ப்மன் : நடிப்பு, வேடம்- ஓகே.
2. கமல் : நடிப்பு, வேடம் சூப்பர் - உலக நாயகன்னு சும்மாவா சொன்னாங்க!
3. ராபின் வில்லியம்ஸ் : நடிப்பு, வேடம் சூப்பர்
4. பிரஷாந்த் : வேடம் அழகு . நடிப்பு - ஓகே.
5. விவேக் : நடிப்பு,வேடம்- ரசிக்கலாம்.

*******************************************************